விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 10, 2012
- கன்னியாகுமரியின் திருவள்ளுவர் சிலை (படம்) 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.
- உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள பெரிய ஆட்ரான் மோதுவி ஆகும்.
- 1987ல் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வெளியான இராமாயணம் தொடர் 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.
- உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள இசுரேலிய தேசியக் கொடி ஆகும்.