விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 14, 2010
- சர் ஜார்ஜ் எவரெஸ்ட் (படம்) என்ற வேல்சு நாட்டு நில அளவாளரின் நினைவாகவே எவரெஸ்ட் சிகரம் பெயரிடப்பட்டது.
- உலக மின்திறன் பயன்பாட்டில் 33 விழுக்காடும் எரிபொருள் பயன்பாட்டில் 29 விழுக்காடும் அமெரிக்காவின் தேவையாக உள்ளது.
- மியன்மாரின் தலைநகரம் நேப்யிடா; யங்கோன் அல்ல.
- ஜி. எஸ். எல். வி வரிசை ஏவு ஊர்திகளின் முன்னோடியான எஸ். எல். வி.-வகை விரிசுகளின் திட்டத்தலைவர் அப்துல் கலாம்.
- நிலவில் ஆடப்பட்ட ஒரே விளையாட்டு குழிப்பந்தாட்டம்; விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்டு 1971 இல் கோல்ஃப் பந்தை நிலவில் அடித்தார்.
- இந்தியாவில் முதலமைச்சர் அங்கீகாரத்தில் நான்கு தலைவர்களைக் கொண்டுள்ள மாநிலம் மேகாலயா.