விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 18, 2012
- புரவியெடுப்பு என்பது தமிழக ஐயனார் கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை (படம்) அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை.
- மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட பேராக் மனிதன் என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.
- தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் இடிச்சப்புளி செல்வராசு, இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குநர்.
- இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் என்பது ஆறு இந்திய தேசிய உள்நாட்டு நீர்வழிகளை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட வாரியம்.
- உலகிலேயே மிகச்சிறிய மீன் 7.9 மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்தோனீசிய மீச்சிறு கெண்டை.