விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 29, 2014
- பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் நீலப் பலகை எனப்படும்.
- பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத் தமிழ் என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.
- சிற்றம்பலநாடிகள் பரம்பரை என்பது 14 ஆம் நூற்றாண்டில் தலைதூக்கி நின்ற சிற்றம்பல நாடிகளையும் அவரது மாணாக்கர்கள் 66 பேரையும் உள்ளடக்கிய சைவப் பரம்பரையாகும்.
- ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் உலகிலுள்ள போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது.