பாபிரசு (படம்) பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தில் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுதுபொருளாகும். இந்தத் தடிமனான பாபிரசில் எகிப்திய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணித மருத்துவ குறிப்புகள் மற்றும் பிரமிடு குறிப்புகள் போன்றவற்றை எழுதிச் சேமித்தனர்.
உயிர்ப்பாலம் என்பது மேகாலயாவின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் விழுதுகளைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும். இங்கு இரப்பர் மரங்களின் மேல்பக்கமாக உள்ள விழுதுகளை கையால் வேண்டியவாறு வளைத்து முறுக்கி இணைத்து உருவாக்கப்படுகின்றன.