விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 19, 2012
- கபோய்ரா (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.
- சூரியகாந்தி விதை என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும்.
- முகலாயப் பேரரசர் அக்பரின் பட்டத்தரசியான மரியம் உசு-சமானி ஓர் இந்து இராசபுத்திர இளவரசி ஆவார்.
- 4 பரிமாணங்களை கொண்ட வெளிநேரம் வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.
- பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் ரூபெல் பிணந்தின்னிக் கழுகு, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.