ரூபெல் பிணந்தின்னிக் கழுகு
ரூபெல் பிணந்தின்னிக் கழுகு Rüppell's Vulture | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கழுகு வரிசை
(அல்லது Accipitriformes, q.v.) |
குடும்பம்: | Accipitridae
|
பேரினம்: | Gyps
|
இனம்: | G. rueppellii
|
இருசொற் பெயரீடு | |
Gyps rueppellii (Alfred Brehm, 1852) |
ரூபெல் பிணந்தின்னிக் கழுகு (Rüppell's Vulture) என்பது மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு பெரும் பிணந்தின்னிக் கழுகு ஆகும். இவற்றின் தற்போதைய எண்ணிக்கை 30,000 ஆக குறைவடைவதற்கு, அவற்றின் வாழ்விட இழப்பும் பிற அழுத்தங்களும் காரணங்களாகும்[2] இதனுடைய பெயர் 19ம் நூற்றாண்டு செருமனிய ஆய்வுப் பயணியும், மாவட்ட ஆட்சியாளரும், விலங்கியல் ஆய்வாளருமான எடியுட் ரூபெல் என்பவரை மதிப்பளிக்கும் விதமாக சூட்டப்பட்டது. ரூபெல் பிணந்தின்னிக் கழுகு மிகவும் அதி உயரத்தில் பறக்கும் பறவையாக கருதப்படுகின்றது. இதன் நிச்சயிக்கப்பட்ட பறப்பு உயரம் கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) ஆகும்.[3]
விபரம்
தொகுவளர்ந்த கழுகுகள் 85-97 செ.மி (33-38 அங்குலம்) நீளமும்,[4] இறக்கைவிரிப்பு அகலம் 2.26 முதல் 2.6 மீட்டர் ((7.4 - 8.5 அடி)) வரையும், நிறை 6.4 முதல் 9 கி.கி. வரையும் காணப்படும்.[4][5][6] இருபால் பறவைகளும் (ஆணும் பெண்ணும்) ஒரே மாதிரியானவை. பழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகளை முழுவதும் கொண்டு, வெண்மையான பழுப்பு நிறத்தினை வயிற்றின் கீழும், அழுக்கான வெள்ளை நிற மென்பரப்பு தலையிலும் கழுத்திலும் அமைந்து காணப்படும். கழுத்தின் அடிப்பகுதி வெள்ளைப் பட்டியாகவும், கண் மஞ்சளாகவும், தொண்டைப்பகுதி ஆழ் பழுப்பு நிறமாகவும் காணப்படும். அமைதியாக காணப்படும் இவை கூட்டில் சத்தத்தினை எழுப்பும், விலங்குகளின் பிணத்தை பங்கிட்டுக் கொள்ள முயலும்போது இவை கீச்சிடும்.
குறிப்புகள்
தொகு- ↑ IUCN redlist.
- ↑ "Bird Life Species Factsheet — Rueppell's Vulture Gyps rueppellii". Bird Life International website. Bird Life International. 2010. Archived from the original on 2010-06-09. பார்க்கப்பட்ட நாள் 2010-06-10.
Identification 85-97 cm. Medium-sized vulture.
- ↑ Laybourne, Roxie C. (December 1974). "Collision between a Vulture and an Aircraft at an Altitude of 37,000 Feet". The Wilson Bulletin (Wilson Ornithological Society) 86 (4): 461–462. பன்னாட்டுத் தர தொடர் எண்:0043-5643. இணையக் கணினி நூலக மையம்:46381512.
- ↑ 4.0 4.1 "Birdlife.org". Birdlife.org. Archived from the original on 2016-08-28. பார்க்கப்பட்ட நாள் 2011-05-31.
- ↑ Sinclair, Ian; Hockey, P. A. R; Arlott, Norman (2007-09-01). Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-77007-243-5. பார்க்கப்பட்ட நாள் 2011-05-31.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Raptors of the World by Ferguson-Lees, Christie, Franklin, Mead & Burton. Houghton Mifflin (2001), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-12762-3
- பன்னாட்டு பறவை வாழ்க்கை (2008). "Gyps rueppellii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 2011-05-31.
- BirdLife International (2007a): 2006–2007 Red List status changes பரணிடப்பட்டது 2008-09-14 at the வந்தவழி இயந்திரம். Retrieved 26 August 2007.
- BirdLife International (2007b): Rüppell's Vulture - BirdLife Species Factsheet. Retrieved 26 August 2007.
வெளி இணைப்புக்கள்
தொகு- "Rüppell's Vulture videos". The Internet Bird Collection. பார்க்கப்பட்ட நாள் November 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)