விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 25, 2013
- 'தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி' என்றழைக்கப்படும் இ. மயூரநாதன் (படம்), தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றத்தை 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கினார்.
- இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.
- நோபல் பரிசினை இதுகாறும் மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர்.
- உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- 1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் எம். துரைராஜ் என்பவர் தொகுத்தளித்தார்.