விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 12, 2012
- ஆல்பா ஔரிகா (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.
- நையாண்டி மேளம் என்பது கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையாகும்.
- சாரியட் நடவடிக்கை (Operation Chariot) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையான நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டுத் துறைமுகம் சென் நசேர் மீது நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகும்.
- புனித மரிய கொரற்றி கத்தோலிக்க திருச்சபையில் அதிகார்ப்பூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவர் ஆவார்.
- நேரி என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.