விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 26, 2012
- முதன் முதலில் கிறித்துமசு குடில் (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.
- வெள்ளணி விழா என்பது சங்க காலம் தொட்டே வழங்கி வரும் தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாவாகும்.
- புதிய ஆங்கில நெடுங்கணக்கு என்பது 26 எழுத்துக்களையும் இரண்டு கூட்டெழுத்துக்களையும் (Æ மற்றும் Œ) கொண்ட இலத்தீன் நெடுங்கணக்கு ஆகும்.
- சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற இருபதுகோணியின் வடிவில் அமைந்துள்ளது.
- உலகின் மிக நீளமான 3,911 மீற்றர் (12,831 அடி) உடைய தொங்கு பாலமான அகாசி கைக்ஜோ, யப்பான் நாட்டில் உள்ளது.