அகாசி கைக்ஜோ
அகாசி கைக்ஜோ பாலம் உலகின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்றாகும்.[2][3] இந்த பிரமாண்டமான பாலத்திற்கு (Pearl Bridge) பவள பாலம் என்ற மற்றய பெயரும் உண்டு. யப்பான் நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள அகாசி (Akashi) பிரதேசத்தினையும் அவாஜி (Awaji) தீவினையும் இணைப்பதற்காக அகாசி நீரிணை (Akashi Strait) மேலாக இந்த பாலமானது கட்டப்பட்டுள்ளது.
அகாசி கைக்ஜோ பாலம் | |
---|---|
(明石海峡大橋 Akashi Kaikyō Ō-hashi?) | |
வின்னிலிருந்து அகாசி கைக்ஜோ பாலத்தின் தோற்றம் | |
பிற பெயர்கள் | பேர்ல் பாலம், முத்துப்பாலம் |
போக்குவரத்து | ஆறு சாலைகள் |
தாண்டுவது | Akashi Strait[1] |
இடம் | அவாஜி தீவுகள் மற்றும் கோபே[1] |
பராமரிப்பு | Honshu-Shikoku Bridge Authority |
வடிவமைப்பாளர் | சதோஷி கஷிமா |
வடிவமைப்பு | தொங்கு பாலம்[1] |
மொத்த நீளம் | 3,911 மீட்டர்கள் (12,831 அடி) |
அதிகூடிய அகல்வு | 1,991 மீட்டர்கள் (6,532 அடி)[1] |
Clearance below | 65.72 மீட்டர்கள் |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 1988[1] |
கட்டுமானம் முடிந்த தேதி | 1998[1] |
திறப்பு நாள் | ஏப்ரல் 5, 1998 |
சுங்கத் தீர்வை | ¥2,300 |
அமைவு | 34°36′59″N 135°01′13″E / 34.61639°N 135.02028°E |
பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு "அகாசி கைக்ஜோ" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற "அகாசி கைக்ஜோ" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.
உலக புகழ் தொங்கு பாலம் "அகாசி கைக்ஜோ" பற்றிய சுவையான குறிப்புக்கள்
தொகு- பாலத்தின் மொத்த நீளம் 3,911 மீற்றர் (12,831 அடி) ஆகவும் , இதன் இரு உயரிய தூண்கள் இடையேயான தூரம் 1,991 மீற்ரர்கள் (1.24 மைல்).
- முழுமையான கட்டுமானம் 100 க்கு மேற்பட்ட (கட்டுமான) நிறுவனங்களின் உதவியுடன் பாவிக்கப்பட்ட மொத்த மனித வேலையாட்கள் 2 மில்லியன் (20 இலட்சம்).
- முழுமையான கட்டுமானத்தில் 181,000 தொன் இரும்பும் 14 இலட்சம் கன மீற்ரர்கள் சீமெந்தும் பாவிக்கப்பட்டுள்ளது.
- இதனை கட்டிமுடிக்க செலவிடப்பட்ட பணம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (¥ 500 billion).
- பாலமானது கடுமையான வெப்பமுள்ள நாளில் அதிக பட்சம் 2 மீற்றர் (7 அடி) தூரத்தினால் விரிவடைகின்றது.
- பால கட்டுமானத்தில் அதி உயர் பொறியியல் நுட்பத்தினை புகுத்தியதன் காரணமாக பாலமானது அதிக பட்ச சூறைக்காற்று (286 km/h) பூமியதிர்வு (அதிர்வு 8.5) என்பவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பாலம் கடல் மட்டத்திலிருந்து 65 மீற்றர் உயரத்தில் உள்ளது. பாரிய கப்பல்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்காக இவ்வாறு உயரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
- பாலத்தின் இரு மருங்கிலும் உபயோகிக்கப்பட்ட கேபிள் (தடம்) நீளம் மொத்தமாக 300,000 கிலோ மீற்றர்கள் (190,000 மைல்) என்பதுடன் இவற்றின் தடிப்பு (விட்டம்) அண்ணளவாக 4 அடிகளாகவும் உள்ளது !. அதாவது , பிரதான கேபிள் (தடம்) ஒவ்வொன்றின் தடிப்பும் 112 சென்றி மீற்றர் (44 அங்குலம்) ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முழுமையான பாலத்தினை தாங்கும் இரண்டு பக்கங்களுக்குமான இராட்சத உருக்கு (இரும்பு) தடங்களும் 36,830 சிறிய கேபிள் (இழை) களினால் ஒன்று சேர உருவாக்கப் பட்டவையாகும்.
- இந்த தொங்கு பாலம் உருவாக்கப் பாவிக்கப்பட்ட உருக்கு தடத்தின் நீளமானது ஏழு தடைவைகள் உலகத்தை சுற்றி வருவதற்கு சமானம் எனவும் சொல்லப் படுகின்றது.
- மேற்படி இரண்டு nபக்கங்களுக்குமான இராட்சத கேபிள்களும் பாலத்தின் இரு அந்தத்திலும் உள்ள 350,000 தொன் எடையுள்ள பாரிய கட்டுமானத்தில் இணைக்கப் பட்டுள்ளது.
- மிகவும் சுறு சுறுப்பான சர்வதேச கடல் பாதையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் கீழான 1,500 மீற்றர் அகல நீரிணையில் தினமும் (தற்போது) சராசரி 1,000 கப்பல்கள் பயணிக்கின்றன.
- இன்றய காலகட்டத்தில் பாலத்திணூடு தினமும் சராசரி 2,500 கார்கள் பயணிக்கின்றன. கார்கள் ஒவ்வொன்றிற்கும் அனுமதியாக US$20.00 (¥2,300)அறவிடப்படுகின்றது.
- உலகில் நீண்ட தொங்குபாலத்தில் இன்னுமொரு சாதனையும் சேர்ந்துள்ளது. அதாவது பாலத்தின் முக்கிய இரு தூண்களும் அதி உயரமான பால தூண்களாக இருப்பதுதான் அந்த விடையம். மேற்படி பாலத்தூண்களின் கடல் மட்டத்திலிருந்து உயரம் 978 அடி (298 மீற்றர்கள்) ஆகவுள்ளது.
- "அகாசி கைக்ஜோ" தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.