ஏப்ரல்

மாதம்
(ஏப்பிரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< ஏப்ரல் 2025 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
MMXXV

ஏப்ரல் அல்லது ஏப்பிரல் (April, /ˈprɪl/ (கேட்க) AY-pril) கிரெகொரியின் நாட்காட்டியின் நான்காவது மாதமாகும். 30 நாள்களைக் கொண்ட நான்கு மாதங்களில் ஏப்ரலும் ஒன்றாகும்.

ஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்திலும், தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் இலையுதிர்காலத்திலும் வருகிறது.

பெயர்க் காரணம்

ரோமானிய நம்பிக்கைகளின் படி ஏப்ரல் மாதம் வீனசு தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. கிரேக்கர்கள் வீனசை 'அஃப்ரோடைட்' என்றே அழைக்கின்றனர். அதன்படி வீனசு தேவதையின் மாதம் எனப் பொருள் தரும் "அப்லோரிசு" என்ற சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது எனக் கூறுவர்.[1][2]

ஏப்ரல் மாதம் பண்டைய உரோமை நாட்காட்டியில் ஆண்டின் இரண்டாவது மாதமாக இருந்தது. கிமு 700 ஆம் ஆண்டு வாக்கில் நூமா பொம்பிலியசு என்ற மன்னன் சனவரி, பெப்ரவரி மாதங்களை சேர்த்தார். கிமு 450 ஆம் ஆண்டளவில் ஏப்ரல் மாதம் ஆண்டின் நான்காவது மாதமாக ஆனது. அம்மாதத்திற்கு அப்போது 29 நாட்களே கொடுக்கப்பட்டன. கிமு 40களின் நடுப்பகுதியில் யூலியசு சீசர் நார்காட்டியை சீர்ப்படுத்தும் போது இதற்கு 30ஆம் நாள் சேர்க்கப்பட்டது. இதன் போதே யூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

சித்திரைப் புத்தாண்டு என அழைக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் நிகழ்வுகள்

மேற்கோள்கள்

  1. "April" in Chambers's Encyclopædia. London: George Newnes, 1961, Vol. 1, p. 497.
  2. Jacob Grim Geschichte der deutschen Sprache. Cap. "Monate"
மூலம்

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஏப்ரல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்ரல்&oldid=4256240" இலிருந்து மீள்விக்கப்பட்டது