விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 13, 2013
- பரதநாட்டியத்தில் 28 ஒற்றைக்கை முத்திரைகளும், 24 இரட்டைக்கை முத்திரைகளும் (படம்: சில முத்திரைகளின் தொகுப்பு) உள்ளன.
- பிரித்தானிய இலங்கையில் முழு இலங்கைக்கும் விடுதலை என்ற கருத்தை முதலில் அமைப்பு ரீதியில் கேட்டுப் போராடியது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்.
- தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக கிருஷ்ண குமாரசிங் பவசிங் பணியாற்றினார்.
- 1800களில், இந்தியாவின் விலையுயர்ந்த பருத்தி வகை, மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது.