விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 21, 2012
- நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்பவை சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதாகும். (படம் : தாளம்பூ புட கரணம்)
- மின்தடையை அளவிடும் அனைத்துலக அலகான ஓம் அலகுக்குச் சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- தென்னமெரிக்காவில் 433 ஆண்டுகள் நிலவிய இன்கா நாகரிகம் பிசாரோ என்ற எசுப்பானிய தளபதியால் அழிந்தது.
- இதுவரை 464 புறக்கோள்கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- n -ஆம் ஐங்கோண பிரமிடு எண்ணானது முதல் n ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும்.