விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 12, 2014
- பூச்சிகளே (படம்) அதிகளவான தனியன்களையும், இனங்களையும் கொண்ட விலங்குகள் ஆகும்.
- கணக்கதிகாரம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.
- அனைத்துலக ஆண்கள் நாள் என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.
- கணிதத்தில் லாபிதாலின் விதி தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.
- கோதாபயன் உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.