விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 14, 2012
- பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் கர்னல் பென்னிகுக் (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.
- அணுக்கரு உலை குளிர்வி அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.
- தாய்லாந்து ராமாயணம் என்றழைக்கப்படும் ராமாகெய்ன், தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும்.
- மதுரையில் அமைந்திருந்த தங்கம் திரையரங்கம் முன்பு ஆசியாவின் மிகப்பெரும் திரையரங்கமாக இருந்தது.
- குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட ஆட்கின்சு உணவுமுறை என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.