இராமகீர்த்தி

(தாய்லாந்து ராமாயணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien, รามเกียรติ์) என்பது தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.[1] இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில் சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார். இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்[2]. இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

தாய்லாந்து ராமாயணத்தின் படி வரையப்பட்ட தேர்

இக்காப்பியத்தின் மூலம் வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை, ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பாத்திர அமைப்பு

தொகு

இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும் இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது.

கடவுள்கள்

தொகு
தாய் மொழிப்பெயர் - தமிழ்ப்பெயர்
  1. ஃப்ரா ஈசுவா/சிவ்வா - சிவன்
  2. ஃப்ரா நரய்/விட்சானு - நாராயணன்
  3. ஃப்ரா ப்ரோம் - பிரம்மன்
  4. ஃப்ரா உமா-தேவ்வி - பார்வதி
  5. ஃப்ரா லட்சமி - லட்சுமி
  6. ஃப்ரா இன் - இந்திரன்
  7. ஃப்ரா ஆ-தித் - சூரியன்
  8. ஃப்ரா பாய் - வாயு
  9. ஃப்ரா வித்சனுக்கம் - விசுவகர்மன்
  10. மலி வாரத் - தர்மக்கடவுள்

மானிடர் பாத்திரம்

தொகு
  1. ஃப்ரா ராம் - ராமன்
  2. ஃப்ரா லக் - இலக்குவன்
  3. நங் சித - சீதை
  4. தோட்சரோத் - தசரதன்
  5. நங் கஒசுரியா - கௌசல்யா
  6. நங் கையகேசி - கைக்கேயி
  7. நங் சமுத்-தெவ்வி - சுமித்ரை

ராமனின் நண்பர்கள்

தொகு
  1. ஹனுமான் - ஆஞ்சநேயர்
  2. பலி திரத் - வாலி
  3. சுக்ரீப் - சுக்ரீவன்
  4. ஒங்கோட் - அங்கதன்
  5. ஃபிபேக் - விபீடனன்
  6. சோம்ஃபுஃபன் - சாம்பவான்

ராமனின் எதிரிகள்

தொகு
  1. தோட்சகன் - இராவணன்
  2. இந்தரசித் - இந்திரஜித்
  3. கும்பகன் - கும்பகர்ணன்
  4. மையரப் - பாதாள லோக அரசன்
  5. தோட், கொர்ன், ட்ரிசியன் - இராவணனின் மகன்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-06. பார்க்கப்பட்ட நாள் 2011-11-20.
  2. பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம், பக். 200, கொழும்பு, 1990

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகீர்த்தி&oldid=3544133" இலிருந்து மீள்விக்கப்பட்டது