விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 7, 2012
- கடற் காயல் (படம்) என்பது கடலிலிருந்து சிலவகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள தாழ்ந்த கடல் நீர் பரப்பு.
- திமுக தலைவர் மு. கருணாநிதியின் தன்வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதியின் நான்கு பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
- 1521 இல் நடந்த விஜயபாகு படுகொலையின் விளைவாக இலங்கையின் கோட்டை அரசு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
- பொன் வாரியம் என்பது பாண்டியர் நாட்டில் அமைக்கப்பட்ட நாணய வெளியீட்டு மற்றும் கண்கானிப்பு வாரியம் ஆகும்.
- புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள பன்னாட்டு நாள் கோடு ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது.