விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 23, 2012
- தென்னக இரயில்வே (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.
- சுராசிக் காலம் என்பது 20 கோடி ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 14.4 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையான தொன்மா என்ற டைனாசோர்களின் வல்லாட்சிக் காலத்தை குறிக்கும்.
- முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆண் வழியில் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் அவனும் அவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர்.
- இரட்டை நகரங்கள் என்பது மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் சேர்க்கப்பட்ட வெவ்வேறு நாட்டில் உள்ள நகரங்கள் ஆகும்.
- முதுகுநாணி என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு.