விக்கிப்பீடியா:எதிர்காலத் தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள்

தமிழ் விக்கிபீடியாவில் பலவகைச் செயற்பாடுகள் உண்டு. அவற்றுள் தெளிவான இலக்குகளுடன், கால வரையுடன், முடிவுகள் கொண்ட திட்டங்களும் ஒன்று. தற்சமயம் இப்படிப்பட்ட மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் பற்றிய தகவல்களை Wikipedia:திட்டங்கள் ஒருங்கிணைப்புப் பக்கம் சென்று பெறலாம்.


இங்கு தற்சமயம் பங்களிக்கும் பயனர்கள், வளங்களைக் கொண்டு நாம் விரும்பும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கே செயற்படுத்த முடியாது. எனினும் பயனர்கள், வளங்கள் பெருகும் போதும், எமது தற்போதைய திட்டங்கள் முடிவு பெறும் போதும் பிற திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறு செயற்படுத்த வேண்டிய திட்டங்களைப் பற்றிய தகவல்கள் இந்தப் பக்கதில் ஒருங்கிணைக்கப்படும்.