விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 3
ஒபேரா உலாவியில் த.வி. தெரியவில்லை
தொகுநான் உபுண்டு இயங்குதளம் 9.10 பதிப்பில் ஒபேரா 10.61 பதிப்பைப் பயன்படுத்தி வருகிறேன். அதில் தமிழ் விக்கியைப் பார்வையிட முடியவில்லை. யாரேனும் உதவ முடியுமா? --Tamil35 03:46, 4 செப்டெம்பர் 2010 (UTC)
மரபணு ஒடுக்குதல்
தொகுஅன்பு நண்பர்களுக்கு,
சிறு ஆர்.என்.எ (siRNA) கட்டுரையில் post-transcriptional gene silencing என்பதை எழுதி உள்ளேன். அவ் வார்த்தைக்கு மரபணு ஒடுக்குதல் என எழுதிஉள்ளேன். இது சரியா, தவறா என தெரியவில்லை. அதே கட்டுரையில் suppressor of post transcriptional gene silencing என்ற நிகழ்வுக்கு "ஒடுக்குதலின் ஒடுக்கல்" என பெயர் இட்டுள்ளேன். மேலும் சிறு ஆர்.என்.எ (siRNA) மற்றும் குறு ஆர்.என்.எ (micro RNA) என்பதை எப்படி பெயர் இட வேண்டும் என தெரியவில்லை. நானாக ஒரு பெயர் இட்டு உள்ளேன். என் நண்பனிடம் இதை பற்றி சொன்னபொழுது, micro RNA, siRNA, மற்ற அறிவியல் வார்த்தைகளுக்கு ஆங்கில சொல் இடுமாறு வேண்டிக்கொண்டார். ஏனெனில் தமிழ் வழியாக படிப்பவர்கள் பின்னாளில் அல்லல் படுவார்கள் (என்னை போன்று) என்றும் அவர்கள் மற்ற மாணவர்களிடம் பிரிக்கபடுவார்கள் என சொன்னார். உண்மைதான்.
இதை பற்றி உங்கள் கருத்துகளை எதிபார்க்கிறேன்....
மேலும் ரிபோர்டர் என்னும் சொல்லை கணி (கணிக்கும் புரதமாக), ரிபோர்டர் மரபணு என்ற கட்டுரையில் எழுதி உள்ளேன். இதற்கும் ஒரு நல்ல தமிழ் சொல் அறிந்தவர்கள் சொல்லலாம்.
சிறு ஆர்.என்.எ, ரிபோர்டர் மரபணு கட்டுரைகளை மூலக்கூறு உயிர்யலில் இடுமாறு கேட்டு கொள்கிறேன். - MakizNan
- கலைச்சொற்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் தருவதென்ன்றால் தமிழில் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை. gene என்பதை மரபணு என்கிறோம். cell என்பதை உயிரணு என்கிறோம். computer என்பதை கணினி என்கிறோம். அதே வேளை சில பரவலாக அறியப்படும் சுருக்கங்களை அப்படியே தருவது நன்று. எ.கா எச்.டி.எம்.எல், சி.எசு.எசு, பி.எச்.பி. எனவே ஆர்.என்.எ என்று எழுதினாலும் தமிழில் விரித்து தரவது நன்று. நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட கலைச்சொற்கள் பற்றி கருத்துக் கூற என்னால் முடியாது. இவை பற்றி நீங்கள் தான் முதலில் தமிழில் எழுதுகிறீர்கள் என்றாலும் ஆச்சிரியப்பட வேண்டியதில்லை. இயன்றவரை நல்ல தமிழில் தருவதைக் கண்டு மகிழ்ச்சி. அப்படியே தொடர வேண்டுகோள். நன்றி. --Natkeeran 01:48, 8 ஜூலை 2009 (UTC)
- மகிழ்நன், மைக்ரோ, நானொ என்பன அலகாகப் பயன்படும்பொழுது அப்படியே மைக்ரோ, நானோ, மில்லி என்றே பயன்படுத்துகிறோம். ஆனால் கலைச்சொல்லின் ஒரு பகுதியாக இருந்தால் அதனை சிறு, குறு, நுண், என்று எழுதிக் குறிக்க்லாம். ஆர்.என்.ஏ, குளூக்கோசு, டி.என்.ஏ என்னும் சொற்களையும் நாம் ஆளுகின்றோம். ரைபோசு, பென்ட்டோசு, டிஆக்ஃசிரைபோசு (அல்லது ஆக்சிசன் குறைந்த ரைபோசு) முதலானவற்றை அப்படியே ஆளுகின்றோம். ஆனால் பழகப் பழக பென்ட்டோசு என்பதைக் கூட ஒருசில இடத்தில் ஐயினியம் என்று கூறலாம் ஆல்டோப்பென்ட்டோசு, கீட்டோப்பென்ட்டோசு என்பதை அப்படியே கூறலாம். ஆல்டிஃகைடு (aldehyde) என்பதும் alcohol dehydrogenated என்பதன் சுருக்கம் என்பதை ஐதரசனற்ற ஆல்க்கஃகால் (சாராயம்) என விளக்கலாம். வருங்காலத்தில் ஏதொன்றுக்கும் இணையான பன்மொழி விளக்கங்கள் சொடுக்கிய மாத்திரத்தில் கிடைக்கும். நம் கவலை நாம் படிக்கும் பொழுது நமக்கு வேண்டியவாறு விளங்குகின்றதா, எளிதாக தமிழில் உரையாட, சிந்திக்க உதவுகின்றதா என்பதே. பென்ட்டோசை எல்லா இடத்திலும் ஐயினியம் என்று கூறத்தேவை இல்லை. பென்ட்டோசு என்பதை தமிழில் அறிவியல் கலைச்சொல்லாகவே ஏற்பது நல்லது (ஐதரசன், சல்பைடு, ஆக்சிசன், நைட்ரைடு என்பதைப் போல). ஆனால் ஐயினியம் என்றால் சிலர் குதிப்பார்கள். ஐயினியம் என்பதைப் பொதுச்சொல்லாக ஏற்கவேண்டும் என்பதில்லை. விளங்குவதற்காக, ஐந்து கரிம அணுக்கள் உள்ள எளிய ஒற்றை இனியம் (Monosaccharide) என்று புரிந்துகொள்ள ஐயினியம் உதவக்கூடும். பென்ட்டோசு என்பதைத் தமிழில் ஐயினியம் என்றும் அழைப்போம், ஆக்சிசன் என்பதை உயிர்வளி என்றும் தமிழில் அழைப்போம் என்று எழுதி சிறுபான்மை வழங்குவதில் தவறில்லை. பொதுவழக்கில் ஆக்சிசன், பென்ட்டோசு, ஆல்டோட்டெட்ரோசு (Aldotetrose), கீட்டோட்டிரையோசு (Ketotriose)என்றே வழங்குவோம். உங்கள் கலைச்சொற்களை மீண்டுமொருமுறை பார்த்து எனக்குத் தெரிந்த பரிந்துரைகளை (இருந்தால்) தருகின்றேன்.--செல்வா 02:30, 8 ஜூலை 2009 (UTC)
- கலைச்சொற்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் தருவதென்ன்றால் தமிழில் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை. gene என்பதை மரபணு என்கிறோம். cell என்பதை உயிரணு என்கிறோம். computer என்பதை கணினி என்கிறோம். அதே வேளை சில பரவலாக அறியப்படும் சுருக்கங்களை அப்படியே தருவது நன்று. எ.கா எச்.டி.எம்.எல், சி.எசு.எசு, பி.எச்.பி. எனவே ஆர்.என்.எ என்று எழுதினாலும் தமிழில் விரித்து தரவது நன்று. நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட கலைச்சொற்கள் பற்றி கருத்துக் கூற என்னால் முடியாது. இவை பற்றி நீங்கள் தான் முதலில் தமிழில் எழுதுகிறீர்கள் என்றாலும் ஆச்சிரியப்பட வேண்டியதில்லை. இயன்றவரை நல்ல தமிழில் தருவதைக் கண்டு மகிழ்ச்சி. அப்படியே தொடர வேண்டுகோள். நன்றி. --Natkeeran 01:48, 8 ஜூலை 2009 (UTC)
--Munaivar. MakizNan 14:40, 8 ஜூலை 2009 (UTC) உங்கள் ஆழமான கருத்துக்கு நன்றி, நன்றி...
திரு ரவி அவர்களுக்கும் நன்றி... வைரஸ் என்ற கட்டுரையெய் செம்மை படுத்தியற்கு மிக்க நன்றி.
--Munaivar. MakizNan 14:49, 8 ஜூலை 2009 (UTC)
அன்பின் நண்பர்களுக்கு, bacterial cloning என்பதை படிவாக்கம் என சொல்லலாம். ஏனெனில் இங்கு, மாற்றங்கள் அனைந்தும் மரபு இழையில் முடிந்து விடுகிறது.
அதே வேளையில் விலங்குகளில் செய்யப்படும் cloning (dolly) வடிவாக்கம் என சொல்லலாம். ஏனெனில் இங்கு, ஒத்த வடிவிலான உருவமும், ஒத்த மரபு இழையும் கொண்டு இருக்கும். அதனால் இங்கு வடிவாக்கம் என அழைக்கலாம்.. இது எனது கருத்துதான்... மாற்று கருத்துகள் இருந்தால், தெரிவிக்கவும்...
பிறநாட்டு பெயர்கள்
தொகுநமது விக்கியில் ஆங்கிலத்தில் காணும் நபர்,இடம்,நிறுவனம் இவற்றின் பெயர்கள் அம்மொழியின் ஒலிக்குறைபாடுகள் காரணமாக வெவ்வேறு சொற்களில் பல பக்கங்களில் குறிப்பிடப்படுகின்றன. மீள்வழிப்படுத்தல் (அ) மீண்டும் தொகுத்தலின் மூலம் அவை சரிசெய்யப்படுகின்றன. இருப்பினும் பல சிவப்பு தொடுப்புக்கள் இவற்றினாலேயே ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க ஏதாவது வழி உண்டா ? பெயர்களையடுத்து ஆங்கிலச்சொல்லை அடைப்புக்குறியினில் இட்டால் தேடலில் இந்தப்பக்கங்கள் எளிதாக வந்து தொகுக்கவும் துணைபுரியும். வேறுவழிகள் இருந்தால் ஒரு உதவிப்பக்கம் ஏற்படுத்தி உதவவும்.-- 06:46, 15 ஜூலை 2009 (UTC)
- //இவற்றின் பெயர்கள் அம்மொழியின் ஒலிக்குறைபாடுகள் காரணமாக// என்று நீங்கள் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. வழக்கமாக, இதை எல்லாரும் தமிழின் குறையாகத் தான் சொல்வார்கள். :)
- முதன்மைக் கட்டுரைகளின் துவக்கத்தில் ஆங்கிலத்திலும் பெயரை எழுதுவது தமிழ் விக்கி வழக்கம். விடுபட்டுள்ள கட்டுரைகளில் கவனித்துச் சேர்க்கலாம். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளிலும் மறக்காமல் தமிழ்ப் பக்கத்துக்கு இணைப்பு தர வேண்டும். சுந்தரின் தானியங்கி இதைச் செய்து வருகிறது. சுந்தர், இதை அடிக்கடி இயக்க முடியுமா? வேறு ஏதேனும் வழிகள் இருந்தால் அறிய விரும்புகிறேன்--ரவி 13:31, 25 ஜூலை 2009 (UTC)
தமிழ் குழுமத்தில் திரு இராம்கி என்கிற நண்பர்,
yeast என்பதற்கு கொதியம் என்றும்,
Bacteria என்கிற சொல்லுக்கு பட்டுயுயிரி என்கிற கலை சொற்களை எடுத்தாண்டுள்ளார். இவைகளை நாம் பாவிக்கலாமா?
நன்றி
--Munaivar. MakizNan 18:05, 25 ஜூலை 2009 (UTC)
கட்டுரை பற்றிய கருத்துகள், படம் இணைப்பது பற்றியும் கேள்விகள்
தொகுஅன்பு நண்பர்களே,
விக்கிபீடியாவில் புதிதாக இணைந்திருக்கும் நான் கடந்த நான்கு நாட்களில் ஒன்பது பங்களிப்பு செய்துள்ளேன். அவற்றின் நிலை என்ன என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? நான் ஏதும் தவறு செய்து கொண்டிருக்கிறேனா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?
கணினி உபயோகத்தில் அதிகப் பரிச்சயம் இல்லாத நான் கட்டுரைகள் மட்டும் எழுதினால் படங்களை மற்றவர் இணைத்துக் கொள்வார்களா? அவ்வாறு இணைக்கும் படி வேண்டுகோள் விடுக்கும் முறை என்ன?
அண்மைய மாற்றங்கள் பகுதியில் (வேறுபாடு) என்றும் (வரலாறு) என்றும் எழுதப்படுவதன் அர்த்தம் என்ன?
கட்டுரையில் படங்களை இணைக்கும் முறை பற்றிய பழைய கேள்வி ஒன்றின் பதில் எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. தயவுசெய்து விளக்க இயலுமா?
நன்றிகளுடன், பெ.நாயகி
- உங்கள் பங்களிப்புகள் மிக மிக நன்றாக உள்ளன. அருமையாக எழுதியுள்ளீர்கள். நான் உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பாராட்ட்டி எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். விக்கிப்பீடியா:உதவி என்னும் பக்கத்தைப் பார்த்தால் எது எது எப்படி எப்படி செய்யலாம் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம். படங்கள் இணைப்பது பற்றியும் அங்கேயே உதவிப் பக்கங்கள் உள்ளன. விக்கிப்பீடியாவில் உள்ள எல்லா பக்கங்களுக்கும் "தொகு", "உரையாடல்" "வரலாறு" என்னும் பிரிவுகள் (tabs) மேலே இருக்கும். இதில் உள்ள வரலாறு என்னும் பிரிவைச் சொடுக்கிப் பார்த்தால், யார் யார் எந்த மணித்துளியில் மாற்றங்கள் செய்தார்கள் என்னும் குறிப்புகள் இருக்கும். ஒருவர் செய்த மாற்றத்தப் பார்க்க அவர் பெயருக்கு அருகே இருக்கும் "வேறுபாடு" என்னும் சுட்டியைச் சொடுக்கிப் பார்த்தால், முன்பிருந்த கட்டுரையின் வடிவமும், அவர் செய்த மாற்றங்களும் (சிவப்பு நிறத்தில்) தெளிவாகக் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஏதாவது ஒரு கட்டுரையில் உங்களுக்குப் பிடித்திருந்த ஒன்று இருந்தால், அதனை எப்படிச் செய்வது என்று அறிய, அக்கட்டுரையின் தொகு என்னும் பிரிவை சொடுக்குங்கள், பின்னர் நீங்கள் விரும்பிய அந்த விளைவை உருவாக்க என்ன செய்தார்கள் என்று பார்த்து அறிந்துகொள்ளுங்கள். பிறகு கட்டுரையில் எந்த மாற்றமும் செய்யாமல் வெளி வந்துவிடுங்கள். இப்படித்தான் நாங்கள் யாவரும் மிகப்பெரும்பாலான விக்கி வடிவமைப்பு பற்றிய செய்திகளை அறிந்துகொள்கிறோம். பயனர்கள் சுந்தர், தெரன்சு போன்றவர்கள் இன்னும் ஆழமாக சில செய்திகளை அறிந்தவர்கள். அவர்கள் எங்கள் யாவருக்கும் அமைதியாய் பேருதவி செய்பவர்கள். உங்களுக்கு எது புரியாவிட்டாலும், தயங்காமல் கேளுங்கள், யாரேனும் வந்து உதவி செய்வர். --செல்வா 18:02, 26 ஜூலை 2009 (UTC)
உதவி தேவை
தொகுவீக்கிப்பீடியா:புதிய பக்கத்தை எப்படி உருவாக்குவது என்னும் பக்கத்தில் புதிய பயனர் ஒருவர் கள்ளர் குல வரலாறு என்று ஒரு குறுங்கட்டுரையை எழுதி இட்டுவிட்டார். அதனை சரிவர ஒழுங்குசெய்யாமல், நான் "நகர்த்திவிட்டேன்". பக்க வரலாறுகள் கெடாமல், இங்குள்ளதை யாரேனும் விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை எப்படி உருவாக்குவது என்னும் பக்கத்துடன் இணைக்க வேண்டுகிறேன். --செல்வா 20:18, 15 செப்டெம்பர் 2009 (UTC)
வால்வு குறித்து
தொகுபலவகை வால்வுகள் குறித்து (GATE VALVES, GLOBE VALVES, BALL VALVES, PLUG VALVES) எழுத எண்ணி உள்ளேன். வால்வு என்பதற்கு தமிழில் வார்த்தை உள்ளதா? விக்கியில் இது தொடர்பான கட்டுரை ஏதும் உள்ளதா? தேடு பகுதியில் வால்வு என்று எழுதிப் பார்த்தால் இல்லை என்று வருகிறது.--பெ.நாயகி 05:54, 28 ஜூலை 2009 (UTC)
- நீங்கள் விக்சனரியிலும் தேடலாம். அங்கு ஓரதர், தடுக்கிதழ் போன்ற சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்க்கவும். அதர் என்றால் வழி. ஓரதர் என்றால் ஒருவழிப் போக உதவுவது என்னும் பொருள் கொண்டது. தடுக்கிதழ் என்பது baffle valve போன்றது (ஒரு வழி விட்டு எதிர் வழியை தடுப்பது). கே'ட் (gate) என்பதை கதவம் எனலாம். --செல்வா 00:23, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
- 'வால்வு'க்குத் தடுக்கிதழ் என்பதை அடிப்படையாகக் கொண்டு 'தடுக்கு' எனச் சுருக்கிச் சொல்லலாமா என எண்ணுகிறேன். செல்வா, உங்கள் கருத்தை அறிய ஆவல். இரு விக்கிப்பீடியர்கள் இரு வேறு கருத்துக்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். பார்க்க. வேறு யாரேனும் இது குறித்துக் கருத்து இருப்பின் தெரிவியுங்கள். நன்றி --இரா.செல்வராசு 02:50, 17 ஜூன் 2010 (UTC)
பட அளவு மாற்றுதல்
தொகுஒரு படத்தை கட்டுரையில் இணைத்தவுடன், அதை எப்படி பெரிய அளவாக மாற்ற வேண்டும்
--Munaivar. MakizNan 00:00, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
- கீழே இரண்டு அளவில் படம் உள்ளதைப் பாருங்கள். முதல் படத்துக்கு "80px" என்று அளவு இட்டேன், இரண்டாவது படத்துக்கு 180px என்று அளவு இட்டேன். இவற்றின் விக்கிஆணை:
[[படிமம்:Four-striped Grass Mouse.JPG|80px]][[படிமம்:Four-striped Grass Mouse.JPG|180px]]
x --செல்வா 00:23, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
- கீழே இரண்டு அளவில் படம் உள்ளதைப் பாருங்கள். முதல் படத்துக்கு "80px" என்று அளவு இட்டேன், இரண்டாவது படத்துக்கு 180px என்று அளவு இட்டேன். இவற்றின் விக்கிஆணை:
ஊடகக் காட்சியகம் என்ற வார்ப்புரு அமைப்பு
தொகுகறையான் கட்டுரையின் 3. வளரியல்பு என்ற உட்பிரிவில், ஊடகக் காட்சியகம் என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தியுள்ளேன். அக்கட்டுரைப் பக்கத்தை காணும் போது, அப்பெட்டகம் திறந்த நிலையிலேயே வருகிறது. மூடிய நிலையிலேயே வருவதற்க்கு என்ன செய்ய வேண்டும்.த* உழவன் 18:11, 22 ஆகஸ்ட் 2009 (UTC)
படங்களை இணைத்தல்
தொகுஒரு பிறமொழி விக்கிபீடியா கட்டுரையை தமிழாக்கம் செய்யும்போது, அங்குள்ள படங்களை தமிழ் விக்கியில் இணைப்பது எப்படி? சில படங்கள், அங்குள்ள அதே வார்ப்புருவை வெட்டி ஒட்டும்போது, இங்கேயும் வருகின்றன. சில வார்ப்புருக்கள் அப்படி படங்களைத் தரவில்லை. அவற்றை எப்படி இங்கே பதிவு செய்யலாம் எனக் கூறுவீர்களா? --கலை 11:32, 1 செப்டெம்பர் 2009 (UTC)
- அங்குள்ள படிமங்கள் "பொதுவில்", அதாவது விக்கிமீடியா காமன்சில் இருந்தால் அப்படிமங்களை இங்கு நேரடியாக இணைக்கலாம். பொதுவில் இல்லாமல் ஆங்கில விக்கியில் மட்டும் தரவேற்றப்பட்டிருந்தால் அப்படிமம் தமிழ் விக்கியில் தெரியாது. அப்படியான படிமங்களை நீங்கள் உங்கள் கணினிக்குத் தரவிறக்கி மீண்டும் தமிழ் விக்கியில் தரவேற்ற வேண்டும். அப்படி ஏற்றும்போது, தயவு செய்து அப்படிமங்களின் காப்புரிமை பற்றிய விவரங்களையும் தாருங்கள்.--Kanags \பேச்சு 11:48, 1 செப்டெம்பர் 2009 (UTC)
- நன்றி Kanags.
- விக்கிமீடியா காமன்சில் எவரும் புதிய படிமங்களைப் பதிவேற்றலாம் எனப் புரிந்து கொள்கின்றேன். அப்படியாயின், அங்கே எப்படி படிமங்களை இணைப்பது? இணைத்த பின்னர், அதை எப்படி தமிழ்விக்கியில் இணைப்பது? உதாரணத்துக்கு விக்கியில் அல்லாமல் வேறு எங்காவது பெறப்பட்ட படத்தை, அல்லது நம்மிடமுள்ள ஒரு படத்தை விக்கிமீடியா காமன்சில் தரவேற்றம் செய்வதாயின், எப்படி தரவேற்றம் செய்வது?
- பிறமொழி விக்கியிலிருந்தோ, அல்லது வேறு எங்கேனுமிருந்தோ எனது கணினிக்கு தரவிறக்கம் செய்யும் படங்களிற்குரிய காப்புரிமைபற்றிய விபரங்களை எங்கே, எப்படி பெற்று, அந்த விபரங்களை எப்படி தமிழ்விக்கியில் தரவேற்றம் செய்யும்போது குறிப்பிடுவது.
- அதிகமாக கேட்கின்றேனா தெரியவில்லை :). உதவிப் பக்கத்திலிருந்து சரியாக இந்த விடயங்களை புரிந்துகொள்வது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை :). அதுதான் இங்கே கேட்கின்றேன். --கலை 12:25, 1 செப்டெம்பர் 2009 (UTC)
- உங்கள் வினாக்களுக்கான விடைகளை தர முயல்கிறேன்.எனது பட்டறிவும் குறைவு என்றபோதிலும் :)
- விக்கிப்பீடியா காமன்ஸ் அல்லது நடுவம் : பதிவேற்றுவது:நடுவம் : முதற்தேவைகள் என்ற பக்கத்தில், இது குறித்து நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
- அதன் படி , பயனர் கணக்கு வேண்டும்.எனவே, புகுபதிகைச் செய்யவும்.
- பதிவேற்ற கோப்புக்கு, சிறந்த முறையில் பெயரிடுவது மிகமிக அத்தியாவசியமானது. அப்படி பெயரிட்டால் மட்டுமே, பிறர் உங்கள் கோப்பினை சுலபமாகக் கண்டறிய முடியும்.
- புகுபதிகை செய்தவுடன், நேரிடையாக பதிவேற்றப்படிவத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்
- விக்கிப்பீடியா காப்புரிமை வார்ப்புருக்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.
- ஒவ்வொரு படிம கோப்புடனும் ஓர் விவரக்கோப்பும் இணைந்திருக்கும்--நீங்கள் விக்கிப்பீடியாவின் படிமத்தில் வலது சொடுக்கின் மூலம் சேமிக்காமல், இரட்டை சொடுக்கு செய்தீர்களென்றால் இவ்வாறான படிமக்கோப்பும் விவரக்கோப்பும் இணைந்த பக்கத்திற்கு செல்வீர்கள்.அங்கே படங்களுக்குரிய காப்புரிமை விவரங்களைப் பெறலாம். அதே பாணியில் நீங்கள் தரவேற்றம் செய்யும் படங்களுக்கும் விவரக்கோப்பை இணைக்கவேண்டும்.
- நடுவத்தில் தரவேற்றிய படிமங்கள் தமிழ் உட்பட அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் கோப்பின் பெயரை இட்டால் காட்டப்படும். தமிழ் விக்கியில் தரவேற்றிய படங்கள் பிற மொழிகளில் தெரியாது.அதேபோல ஆங்கிலவிக்கியின் படங்கள்,காமன்ஸில் இல்லையென்றால் மற்ற மொழிகளில் தெரியாது.
கோர்வையாகவும் உங்கள் ஐயங்களை தீர்க்குமாறும் எழுதியுள்ளேனா என தெரியவில்லை.ஐயமிருப்பின் தயங்காமல் கேளுங்கள்..--மணியன் 09:25, 2 செப்டெம்பர் 2009 (UTC)
உதவி தேவை
தொகுவீக்கிப்பீடியா:புதிய பக்கத்தை எப்படி உருவாக்குவது என்னும் பக்கத்தில் புதிய பயனர் ஒருவர் கள்ளர் குல வரலாறு என்று ஒரு குறுங்கட்டுரையை எழுதி இட்டுவிட்டார். அதனை சரிவர ஒழுங்குசெய்யாமல், நான் "நகர்த்திவிட்டேன்". பக்க வரலாறுகள் கெடாமல், இங்குள்ளதை யாரேனும் விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை எப்படி உருவாக்குவது என்னும் பக்கத்துடன் இணைக்க வேண்டுகிறேன். --செல்வா 20:18, 15 செப்டெம்பர் 2009 (UTC)