விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2022

2017 ஆம் ஆண்டில் தமிழகத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, அதன் வாயிலாக சுமார் 10,000 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. பயிற்சிக்குப் பிறகு, அக்கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணி நடந்தது. அந்தப் பணியானது 2022 ஆம் ஆண்டில் தொடரப்பட்டது.

முன்னெடுப்புகள் தொகு

எண் முன்னெடுப்புகள் காலம் பணிகள் பெற்ற பலன்கள்
1 முதற் கட்டம் சூலை - நவம்பர் (5 மாதங்கள்) மாவட்டவாரியான வகைப்பிரித்தல் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாவட்டமாக எடுக்கப்பட்டு, கலைக்களஞ்சியத்திற்குப் பொருந்தாத கட்டுரைகள் பல நீக்கப்பட்டன. அதே வேளையில், தேவைப்படும் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணியும் நடந்தது. 1,905 கட்டுரைகள் கையாளப்பட்டு, 812 கட்டுரைகள் துப்புரவு முடிந்தவையாக அறிவி்க்கப்பட்டன. 1093 கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது நீக்கப்பட்டிருக்கலாம்.
2 இரண்டாம் கட்டம் டிசம்பர் விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - டிசம்பர் 2022 134 கட்டுரைகள் கையாளப்பட்டு, 77 கட்டுரைகள் துப்புரவு முடிந்தவையாக அறிவி்க்கப்பட்டன. 57 கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது நீக்கப்பட்டிருக்கலாம்.

செயல்திறன் அளவீடுகள் தொகு

செம்மைப்படுத்தப்பட வேண்டியவை தொகு

எண் தேதி (முன்பு) தேதி (அன்று) துப்புரவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்படாத கட்டுரைகளின் எண்ணிக்கை (முன்பு) துப்புரவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்படாத கட்டுரைகளின் எண்ணிக்கை (அன்று) மாதாந்திர செயல்திறன்^^ ஒட்டுமொத்த செயல்திறன்^^^
1 30-சூன்-2022 30-சூலை-2022 4,752 4,000 15.82% 15.82%
2 30-சூலை-2022 30-ஆகத்து-2022 4,000 3,685 7.88% 22.45%
3 30-ஆகத்து-2022 30-செப்டம்பர்-2022 3,685 3,072 16.64% 35.35%
4 30-செப்டம்பர்-2022 30-அக்டோபர்-2022 3,072 2,968 3.39% 37.54%
5 30-அக்டோபர்-2022 30-நவம்பர்-2022 2,968 2,847 4.08% 40.09%
6 30-நவம்பர்-2022 31-டிசம்பர்-2022 2,847 2,713 4.71% 42.91%

செம்மைப்படுத்தப்பட்டவை தொகு

எண் தேதி (முன்பு) தேதி (அன்று) துப்புரவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை (முன்பு) துப்புரவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை (அன்று) மாதாந்திர செயல்திறன்^^ ஒட்டுமொத்த செயல்திறன்^^^
1 30-சூன்-2022 30-சூலை-2022 1,721 தரவு பதிவு செய்யப்படவில்லை - -
2 30-சூலை-2022 30-ஆகத்து-2022 தரவு பதிவு செய்யப்படவில்லை 2,141 - 2
3 30-ஆகத்து-2022 30-செப்டம்பர்-2022 2,141 2,415 12.80% 40.33%
4 30-செப்டம்பர்-2022 30-அக்டோபர்-2022 2,415 2,471 2.32% 43.58%
5 30-அக்டோபர்-2022 30-நவம்பர்-2022 2,471 2,533 2.51% 47.18%
6 30-நவம்பர்-2022 31-டிசம்பர்-2022 2,533 2,610 3.04% 51.66%
  • ^^ ஒவ்வொரு மாதமும் 30 ஆம் தேதியன்று, முந்தைய 30 ஆம் தேதி தரவுகளுடன் ஒப்பீடு நடந்தது.
  • ^^^ ஒவ்வொரு மாதமும் 30 ஆம் தேதியன்று, 30-சூன்-2022 அன்றைய தரவுகளுடன் ஒப்பீடு நடந்தது.

நடைமுறையிலிருந்த வழிகாட்டல்கள் தொகு

  1. கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரைகளை நீக்கவும்.
  2. தானியங்கித் தமிழாக்கக் கட்டுரைகளை நீக்கலாம்.
  3. கட்டுரைகளை ஒருங்கிணைக்க வார்ப்புரு இட்டுவிட்டால், துப்புரவு முடிந்ததாகக் கருதவும்.
  4. துப்புரவு முடிந்துவிட்டதாகக் கருதினால், துப்புரவு முடிந்த ---- மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பினை இட வேண்டும். தரவுகளைக் கொண்டிருப்பதற்காக இந்த வேண்டுகோள்.

கற்றல் தொகு

  1. போலி நிலா போன்ற கட்டுரைகளுக்கு இணையான கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பதால், வளர்த்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
  2. நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளை துப்புரவு செய்ய வெறும் தானியங்கிகள் மட்டும் போதாது. நேரடியான மனித உழைப்பு நிறைய தேவை.
  3. உருவாக்கப்படாத பகுப்பாகிய பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில் என்பதில் சுமார் 100 கட்டுரைகள் உள்ளன!
  4. விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளில் பெரும்பாலானவை உயிரியல் தொடர்பானவை, குறிப்பாக - பறவைகள் குறித்து எழுதப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரைகளில் சத்திரத்தான் அவர்கள் அவ்வப்போது தொகுப்புகளைச் செய்திருந்ததால், அக்கட்டுரைகளை ஒரு முறை சரிபார்த்து, துப்புரவு முடிந்ததாக நகர்த்துவது எளிதாக இருந்தது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கும், அடைந்ததும் தொகு

இலக்கு தொகு

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்துக் கட்டுரைகளையும் செம்மைப்படுத்தி முடிக்கவேண்டும் என்றால், மாதாந்திர செயல்திறன் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கும் வரைபடம் உருவாக்கப்பட்டது.

முதல் 6 மாதங்களுக்கு 20%, அடுத்த 6 மாதங்களுக்கு 25%, அடுத்த 3 மாதங்களுக்கு 50% எனச் சென்று கடைசி மாதத்தில் 100% என்பதாக செயல்திறன் இருக்க வேண்டும்.

அடைந்தது தொகு

செப்டம்பரில் விக்கி மாரத்தான் நடந்ததால், 17% எனும் செயல்திறனைப் பெற முடிந்தது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 3 முதல் 5% என்பதாக மாதாந்திர செயல்திறன் அமைந்தது.

 


தொடர்ச்சி தொகு

விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023