விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு

ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகளைத் துப்பரவு செய்வதற்குப் பின்வரும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் முன்வந்துள்ளனர். இவர்களுக்கு வாட்சாப்பு மூலம் பார்வதி, பாலா, சிவகுரு, ஆகியோருடன் இணைந்து தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறோம். துப்புரவு என்பது பெரும்பணி. முதற்கட்டமாக இந்த ஒன்பது ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மட்டும் இதில் ஈடுபடுவர். இவர்கள் இதில் ஓரளவு தேர்ந்த பிறகு அடுத்த கட்டமாக இன்னும் சிலருக்கு வழி காட்டலாம். இவர்கள் முதற்கட்டத் துப்புரவு முடிக்கும் கட்டுரைகளில் பகுப்பு:துப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்பது போல் பகுப்பிடுவார்கள். மற்ற வழமையான துப்புரவில் ஈடுபட்டிருக்கும் விக்கிப்பீடியர்கள் அதனைச் சரி பார்த்து துப்புரவு முடிந்ததாகவும் சுற்றுக் காவல் முடிந்ததாகவும் அறிவிக்கலாம்.

துப்புரவில் ஈடுபட உள்ளோர் தொகு

  1. TNSE JOHN VLR
  2. TNSE Arumbumozhi vlr
  3. தியாகு கணேஷ்
  4. Dsesringp
  5. TNSE Mahalingam VNR
  6. TNSE P.RAMESH KPM
  7. Tnse surenthiran kkm
  8. TNSE MANI VNR
  9. மணி.கணேசன்

துப்புரவு இலக்குகள் தொகு

முதல் இலக்கு தொகு

வேலூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து அரசியல்வாதிகள் பற்றி தொடங்கிய 1000+ கட்டுரைகளைத் துப்புரவு செய்தல். இவற்றில் தேவைப்படும் திருத்தங்கள் பின்வருமாறு:

  • எழுத்துப் பிழை திருத்தம்
  • இலக்கணப் பிழை திருத்தம்
  • சொற்றொடர் அமைப்புப் பிழை திருத்தம்
  • பொருட் பிழை திருத்தம்
  • நிறுத்தற் குறிப் பிழைகள் திருத்தம்
  • முழுமையான தமிழாக்கம்
  • விட்டுப் போன மேற்கோள்கள் சேர்த்தல்
  • ஒரே தலைப்பில் இரண்டு கட்டுரைகள் இல்லாமையை உறுதி செய்தல்
  • சரியான தலைப்பு இடல் (தமிழில் தலைப்பு எழுத்துகள், தேவையற்ற அடைப்புக்குறி விளக்கங்களை நீக்கல்)
  • தலைப்பில் புள்ளிகளுக்கு அடுத்து இடைவெளி
  • தலைப்பில் ஆங்கில சொற்கள் நீக்கப்பட வேண்டும்.
  • சரியான உள்ளிணைப்புகள் தருதல்
  • கூடுதல் உள்ளிணைப்புகள் தருதல்
  • உரிய பகுப்பினை இடுதல்
  • பிற மொழி விக்கி இணைப்பு தருதல்
  • மேற்கோள் வேலை செய்கிறதா என்பதனை சொடுக்கிப் பார்த்து, உறுதி செய்தல் வேண்டும்.
  • திரு, அவர்கள் போன்ற மரியாதை நிமித்தமான சொற்கள் இருந்தால் நீக்க வேண்டும்.

மேலும் தேவைப்படும் திருத்தங்களைப் பட்டியல் இடவும். --இரவி (பேச்சு) 14:28, 14 சூலை 2017 (UTC)[பதிலளி]

துணைப் பக்கங்கள் தொகு