விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு/2005
1000
தொகுதமிழ் விக்கிப்பீடியா தற்போது 1000 கட்டுரைகளைத் தாண்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆயிரம் கட்டுரைகளில் ஏராளமான குறுங்கட்டுரைகள் இருக்கின்றன. முழுமையாக மொழி பெயர்க்கப்படாத கட்டுரைகளும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முழு அளவுத் தமிழ்க் கட்டுரைகளாக வளர்த்து எடுக்க வேண்டியுள்ளது. ஆயிரம் தாண்டிய உற்சாகத்தோடு மேலும் உழைப்போம். ஹிந்தி, மராட்டி போன்றவற்றை எட்டிப்பிடிப்பது பெரிய விடயமல்ல. ஆங்கில மொழியிலுள்ளது போல இலடசக்கணக்கில் தமிழிலும் கட்டுரைகள் வேண்டும்.
தமிழ்ப்பிரியன் மராட்டி மொழியில் உள்ளதைவிடத் தமிழில் ஏன் கட்டுரைகள் குறைவாக இருக்கின்றன என்று கேட்டிருக்கிறார். மராட்டி மொழி குறைந்த மொழியல்ல. அதுவும் வளமுள்ள மொழிதான். கட்டுரைகளின் எண்ணிக்கைகளைக் கூட்டுவது கஷ்டமானதல்ல. குறுங்கட்டுரைகளை அதிக அளவு உருவாக்குவதன் மூலம் கட்டுரை எண்ணிக்கையை விரைவில் கூட்டமுடியும். பல மொழிகளில் இவ்வாறு செய்கிறார்கள். ஆரம்பத்தில் நானும் பல குறுங்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். பின்னர் அவற்றை விரிவு படுத்தியும் இருக்கிறேன். தமிழில் கட்டுரை எழுதுபவர்கள் பயனுள்ள விபரங்கள் அடங்கிய கட்டுரைகளை எழுதுவதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள் ஏனைய இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழிலேயே நீளமான கட்டுரைகள் அதிக விகிதத்தில் உள்ளன. கடந்த மே மாதத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களிலிருந்து எடுக்கப்பட்ட விபரங்கள் சிலவற்றை கீழே தருகிறேன். இவை தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
விபரம் - | தமிழ் - | ஹிந்தி - | சமஸ் - | மராட்டி - | தெலுங்கு |
---|---|---|---|---|---|
கட்டுரை எண்ணிக்கை (அதிகாரபூர்வ) - | 665 - | 1200 - | 1100 - | 1000 - | 180 |
கட்டுரை எண்ணிக்கை (மாற்று முறை) - | 586 - | 426 - | 733 - | 161 - | 132 |
ஒரு கட்டுரைக்கான சராசரி பைட்டுகள் - | 5508 - | 1592 - | 1902 - | 882 - | 2990 |
கட்டுரைகள் 0.05 kb க்கு மேல் - | 71% - | 22% - | 46% - | 10% - | 41% |
கட்டுரைகள் 2.0 kb க்கு மேல் - | 26% - | 7% - | 6% - | 3% - | 11% |
தரவுத்தள அளவு - | 3.6M - | 2.5M - | 6.7M - | 0.76M - | 0.64M |
சொற்கள் - | 185K - | 119K - | 124K - | 32K - | 29K |
உள் இணைப்புகள் - | 13.0K - | 8.3K - | 4.0K - | 0.145K - | 1.2K |
படிமங்கள் - | 560 - | 229 - | 65 - | 55 - | 24 |
இது பல வகையிலும் தமிழ் விக்கிப்பீடியா முண்ணணியில் இருப்பதைத்தான் காட்டுகிறது. இந்த நிலையை நாங்கள் பாதுகாத்துவர வேண்டும். கட்டுரைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் அதே நேரம் அவற்றின் தரத்தை அதிகரிக்கவும் முயல வேண்டும். கடந்த மே மாதம் வரை விக்கிப்பீடியா புள்ளிவிபரங்களைக் கிரமமாக வெளியிட்டு வந்தார்கள். ஆரம்பத்தில் மேற்கண்ட விடயங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் நிலையை உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்கு இவ்விபரங்கள் மிகவும் உதவியாக இருந்தன இப்போது இவ்விபரங்கள் இற்றைப்படுத்தப் படுவதில்லை. Mayooranathan 20:49, 16 ஆகஸ்ட் 2005 (UTC)
1000 கட்டுரைகள் மகிழ்ச்சி !
தொகுஇன்று விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 1000த்தை தாண்டி காட்டியபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பலரும் பல கட்டங்களில் இந்த 1000 கட்டுரை இலக்கை அடைய வேண்டியது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்பொழுது இந்த இலக்கை எட்டிப்பிடித்திருப்பது மன நிறைவை தருகிறது. இதன் மூலம் பிற மொழி விக்கிப்பீடியா தளங்களிலிருந்து தமிழுக்கு வரும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தமிழ் விக்கிப்பீடியா திட்டத்திற்கு Visibility அதிகரிக்கும் என்றும் நம்புகிறேன். இந்த மைல்கல்லை அடைவதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இத்திட்ட தொடக்க காலத்திலிருந்து செயல்பட்டு வரும் மயூரநாதன், அப்புறம் சுந்தர், சந்தோஷ் குரு, ஹரி கிஷோர், ஆனந்த், Voice on wings, உதயகுமார் மற்றும் அண்மைக்காலத்தில் இத்திட்டத்தில் இணைந்து மிகுந்த முனைப்புடன் பல புதிய பயனுள்ள கட்டுரைகளை உருவாக்கி வரும் சிவகுமார், ஸ்ரீநிவாசன், கார்த்திகேயன், மயூரன், நற்கீரன் ஆகியோருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 1000 கட்டுரைகள் என மகிழும் அதே நேரத்தில், இவற்றில் பல குறுங்கட்டுரைகள் தாம் என்பதையும் இன்னும் மேம்படுத்தி எழுதத் தக்கன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தவிர, ஒரு கலைக்களஞ்சியத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டிய கட்டுரைகள் பலவும் இன்னும் எழுதப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். பல நாடுகளை சேர்ந்த பல்துறை அறிஞர்கள், ஆர்வலர்கள் இந்தத்திட்டத்தில் பணியாற்ற வரும் போது இந்தக்குறை தானாக நீங்கும் என நம்புகிறேன். அது வரை, அவரவர் ஆர்வத்திற்கும் புலமைக்கும் ஏற்ப தற்பொழுது உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவதிலும் புது கட்டுரைகளை உருவாக்குவதிலும் விக்கிப்பீடியா தளத்தை பராமரிப்பதிலும் தொடர்ந்து உதவுமாறு தற்பொழுது உள்ள பயனர்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--ரவி (பேச்சு) 12:08, 14 ஆகஸ்ட் 2005 (UTC)
- ஆம், மிக்க மகிழ்ச்சி.
ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்திலிருந்து இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்.(இணைப்பு en:User:BanyanTree-ஆல் ஏற்கெனவே தரப்பட்டுள்ளது.) - கூடிய விரைவில் விக்கிப்பீடியா:அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்-ல் உள்ள அனைத்து கட்டுரைத் தலைப்புகளிலும் கட்டுரைகள் உருவாக்கப்படும் என நம்புகிறேன். -- Sundar \பேச்சு 05:58, 16 ஆகஸ்ட் 2005 (UTC)