விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு/2008

நவம்பர் 2008 வரையான விக்கிப்பீடியா தர அளவீடுகள்

தொகு

விக்கித் தர அளவீடுகள் இந்த பக்கத்தில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளன தமிழ் எல்லா தர அளவீடுகளிலும் சீராக முன்னேறி வந்துள்ளது. நவம்பர் 2008 இல் இன்னமும் தமிழ் முன்னணியில் உள்ளது எனலாம், ஆனால் பல தர அளவீடுகளில் பல மொழிகள் தமிழை விட முன்னே உள்ளன. மொத்த 'பைட் அளவிலும் தமிழ் முன்னே இருந்த போதிலும் இந்தி, நேபாளி மொழிகள் தமிழை விட அதிகமான 'பைட் பருவளவு கொண்டுள்ளது. கட்டுரைகளின் சராசரி அளவிலும் இன்னமும் மலையாளம் முன்னே உள்ளது, ஆனால் தமிழ் சீரான சிறு முன்னேற்றம் அடைந்துள்ளது, முன்னணீயிலும் உள்ளது. இந்தியில் சராசரி ஒரு நாளைக்கு 58 கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன (நவ 2008), ஆனால் தமிழில் 10 கட்டுரைகள் தான் துவக்கப்படுகின்றன. தெலுங்கில் 42000 கட்டுரைகள் இருந்தாலும் 13000 கட்டுரைகளே 200 எழுத்துகளைக் காட்டிலும் கூட உள்ளன. மணிப்புரி, நேபாள மொழிகளை விட்டு விட்டால், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழி விக்கிகளும் நன்றாக வளர்ந்து வருகின்றன. --செல்வா 04:26, 3 ஜனவரி 2009 (UTC)

மொழி Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் 16 k 16 k 1619 81% 21% 74 MB 3.0 M 3.0 k
வங்காளி 19 k 12 k 1113 49% 11% 61 MB 3.1 M 8.5 k
மராத்தி 21 k 6.4 k 623 20% 5% 44 MB 1.8 M 0.769K
தெலுங்கு 42 k 13 k 578 16% 5% 64 MB 3.0 M 2.6 k
இந்தி 24 k 14 k 1128 35% 11% 76 MB 4.6 M 1.4 k
மலையாளம் 8.3 k 7.8 k 2425 78% 30% 58 MB 2.1 M 5.4 k
கன்னடா 6.1 k 5.3 k 1282 53% 14% 23 MB 0.965M 0.211K
மணிப்புரி 23 k 21 k 1083 85% 1% 74 MB 3.9 M 2.1 k
நேபாள மொழி 46 k 38 k 664 58% 1% 78 MB 4.6 M 0.024K
தமிழின் வரிசை 6 ஆவது 3 ஆவது 2 ஆவது - - 4 ஆவது 5 ஆவது -

--செல்வா 04:26, 3 ஜனவரி 2009 (UTC)

புதிய தரவீடுகள் அட்டவணையில் புதிதாக ஒரு செய்தி உள்ளது. உலக மொழிகளுக்கிடையே தமிழ்மொழி பல தர அளவீடுகளின் எந்நிலையில் உள்ளது என்னும் வரிசைநிலையையும் சுட்டுகின்றது. ஆனால் இது ஏப்ரல் 2008ம் அக்டோபர் 2008ம் அதற்கு முன்புமான தரவுகளை மட்டுமே இப்பொழுது கொண்டுள்ளது.--செல்வா 20:14, 11 ஜனவரி 2009 (UTC)

மொழி Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் அக்டோபர் 2008 68 54 67 16 57 45 62 66
தமிழ் ஏப்ரல் 2008 69 56 70 19 62 46 65 66
வங்காளி அக்டோபர் 2008 63 64 111 115 113 51 61 49
வங்காளி ஏப்ரல் 2008 58 65 123 119 127 50 60 51
மராத்தி அக்டோபர் 2008 57 82 185 196 168 59 78 117
மராத்தி ஏபரல் 2008 59 85 191 194 166 62 84 117
தெலுங்கு அக்டோபர் 2008 40 59 195 213 167 50 63 70
தெலுங்கு ஏப்ரல் 2008 36 62 198 213 172 52 66 75
இந்தி அக்டோபர் 2008 54 62 125 150 117 48 52 101
இந்தி ஏப்ரல் 2008 56 68 147 172 151 55 62 114
மலையாளம் அக்டோபர் 2008 87 75 27 28 25 54 74 56
மலையாளம் ஏப்ரல் 2008 96 83 35 38 37 57 81 58

ஏப்ரல் 2008 இன் கணக்குப்படி, தமிழ் விக்கி உலக மொழிகளின் வரிசையில் 200 எழுத்துகளைக் காட்டிலும் கூட உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையில் 56 ஆவதாக உள்ளதும், மொத்த 'பைட் அளவில் 46 ஆவதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. --செல்வா 04:55, 3 ஜனவரி 2009 (UTC)

அக்டோபர் 2008 இன் கணக்குப்படி தமிழ் விக்கி உலக மொழிகளின் வரிசையில் 200 எழுத்துகளைக் காட்டிலும் கூட உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையில் 54 ஆவதாக உள்ளதும், மொத்த 'பைட் அளவில் 45 ஆவதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. உலக மொழிகளின் வரீசையில் சிறு முன்னேற்றம் அடைந்துள்ளோம். --செல்வா 19:58, 11 ஜனவரி 2009 (UTC)


ஆழம்/Depth

தொகு

இன்னுமொரு முக்கிய அளவீடு ஆழம் ஆகும். இதில் மலையாளம் எல்லா இந்திய மொழிகளிலுப் பாக்க பல மடங்கு சிறப்பால இருக்கிறது.

  • மலையாளம் - 138
  • தமிழ் - 21
  • ஏணையவை - 15 குறைய

இந்தியில் பெரும்பாலனவை ஒருவரிக் கட்டுரைகள். எனவே இந்தியின் தரம் மிகக்குறைவு. தெலுங்கு அதை விட மோசம். மலையாள விக்கிப்பீடியர்கள் ஆழமான கட்டுரைகளை உருவாக்கப் பாக்கிறார்கள். எமது இலக்கு குறைந்தது 30-40 ஆக இருக்க வேண்டும். சற்று முன்னம் நாம் 27 இருந்து பின்னர் 23 ஆகி இப்போ 21 ஆக இருக்கிறோம். ஆனாலும், நாம் அகலமாக சில விடயங்களை அலசுகிறோம் என்பது இங்கு குறிக்கத்தக்கது. எ.கா பட்டியல்கள். --Natkeeran 18:52, 3 ஜனவரி 2009 (UTC)

16,000 கட்டுரைகள் எட்டியாயிற்று

தொகு

நவம்பர் 19,2008 ஆகிய இன்று 16,000 கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியா எட்டியுள்ளது. --செல்வா 01:54, 20 நவம்பர் 2008 (UTC) நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகள் இருந்தன. ஓராண்டில் 4,000 கட்டுரைகள் ஆக்கியிருக்கின்றோம். பங்களித்த அனைவருக்கும், குறிப்பாக மயூரநாதன் அவர்களுக்கும் மற்றும் கனகு, நற்கீரன், வெர்க்லோரும், டேனியல் பாண்டியன், டெரன்சு, சிவக்குமார், சுந்தர், கார்த்திக், குறும்பன், சந்திரவதனா, உமாபதி, கலாநிதி, நரேந்திரன் ரவீந்தீரன், அருநாடன் (கணேஷ்), வாசு (VasuVR), ரவி, முத்து1809, மற்றும் யாவருக்கும் நன்றிகள். இதே விரைவில் கட்டுரைகளை ஆக்கினாலும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் 20,000 கட்டுரைகளை எட்டுவோம். இன்னும் பல பயனர்கள் வந்து பங்களித்து உதவினால் பெரிய வளர்ச்சி அடைய முடியும். டேனியல் பாண்டியன் போல் அருமையாக விரிவாக்கம் செய்யும் பயனர்கள் கிடைத்தால் தமிழ் விக்கிப்பீடியா பெருமைபடக்கூடிய ஆழம் உடையதாக இருக்கும்.--செல்வா 02:31, 20 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

16000 கட்டுரைகளை நோக்கி, தமிழ் 67 நிலையில்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா 16000 கட்டுரைகளை விரைவில் எட்டிவிடும். ஆங்கிலத்தில் 2600000 கட்டுரைகளுக்கு மேலே உண்டு. அப்படி பாக்கையில் தமிழ் ஒரு துளிதான். ஆங்கிலம் தவிர்த்து மற்ற 22 மொழிகளில் 100 000 மேலே கட்டுரைகள் உண்டு. இவற்றுள் சீனம், ஜப்பானிஸ் தவிர்து மற்ற எல்லாம் ஐரோப்பிய மொழிகளே.

இந்திய மொழிகளில் கட்டுரை எண்ணிக்கையில் தெலுங்கு, இந்தி, மாராத்தி 20000 கட்டுரைகளுக்கு மேலே கொண்ண்டுள்ளன. தரத்தில் மலையாள தமிழ் விக்கிகள் சிறப்பு.

பேசும் மக்கள் தொகை அடிப்படையிலும், மொழியின் விருத்தி அடிப்படையிலும் தமிழ் முதல் 15 மொழிகளில் ஒன்று எனலாம். 6000 மேற்பட்ட மொழிகள் வழங்கும் இன்றைய சூழலில் அது ஒரு நல்ல நிலையே. அப்படி இருந்தும் தமிழ் விக்கிப்பீடியா 67 நிலையில் இருப்பது கவனத்துக்குரியது. ஏன் என்று பார்த்தால் தமிழ் இணையம் இன்னும் விரிவாக தமிழ் சமூகத்திடன் செல்ல வில்லை என்பது ஒர் அடிப்படைக் காரணம். அது தவிர்த்து தமிழ் விக்கிப்பீடியா பற்றி தமிழ் இணையச் சமூகம் இன்னும் முற்றிலும் விளங்கிக் கொள்ளவில்லை என்பது இன்னுமொரு காரணம். மற்றொரு காரணம் தமிழ் பற்று ஆர்வம் மிகுந்த பலர் "வாய் சொல்லில் வீரர்" ஆக மட்டும் இருப்பது.

தமிழ் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் பெரும் குறை அறிவியல் தொழில்நுட்ப விடயங்களைப் பகிர்வது கடினம் எனபதாகும். இது வரைக்கும் தமிழ் அறிஞர் சில நூறாயிரம் சொற்களை ஆக்கி உள்ளார்கள். ஆனால் அந்த சொற்கள் கருத்து சூழலில் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை. கருத்து தொடர்புள்ள சொற்களை மீயிணைப்பு மூலம் இணைத்து பல துறை சார் கருத்து விரிவாக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் எளிது. மேலும் தமிழ்நாட்டு கலைச்சொற்களுக்கும், இலங்கை கலைச்சொற்களுக்கு சில வேறுபாடுகள் உண்டு. இந்தக் குறையை தீர்க்க தமிழ் விக்கிப்பீடியா ஓர் அரிய களம்.

இது முற்றிலும் ஒரு புலமைசார் களம் இல்லை. யாரும் இணையலாம். யாரும் அவருக்கு ஏற்ற நேரத்தில், ஈடுபாடு கொண்ட துறையில், இணையம் மூலம் பங்களிக்கலாம். அனைவருக்கும் நல்வரவு.

--Natkeeran 13:05, 8 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

சில நாட்களில் 16,000 கட்டுரையை எட்டிவிடலாம். ஆண்டு முடிவதற்குள் இன்னொரு 500 கட்டுரைகளாவது எழுதலாம். மக்கள் தொகையளவில் உலகில் 18 ஆவது இடத்திலுள்ள ஒரு மொழி விக்கிப்பீடியாவில் 16,000 கட்டுரைகளுடன் 67 ஆவது இடத்தில் தவழ்ந்து கொண்டிருப்பது போதுமானது அல்ல. எண்ணிக்கையை ஒரு புறம் வைத்துவிட்டுப் பார்த்தாலும் கட்டுரைகளின் நீளமும் தரமும் கூடப் போதிய அளவு வளர்ச்சி பெற்றுவிட்டதாகக் கூறமுடியாதுள்ளது. சில முக்கியமான கட்டுரைகளாவது நீளமான கட்டுரைகளாக இருக்கவேண்டியது அவசியம். எல்லா விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய ஏறத்தாழ 1000 கட்டுரைகள் தொடர்பான புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. இங்கே பார்க்கவும்
விக்கிப்பீடியா சராசரிக்
கட்டுரை அளவு
< 10,000
எழுத்துக்கள்
> 10,000
எழுத்துக்கள்
> 30,000
எழுத்துக்கள்
தமிழ் 3,410 749 49 6
மலையாளம் 5,748 517 64 13
வங்காளம் 4,418 506 46 13
ஹிந்தி 3,072 554 33 6
தெலுங்கு 6,935 223 48 11
மொத்தக் கட்டுரை எண்ணிக்கையில் மட்டும் தான் இங்கே தமிழுக்கு முதலிடம். சராசரிக் கட்டுரை அளவில் தெலுங்கு, மலையாளம், வங்காளம் என்பவை தமிழுக்கு முன்னே உள்ளன. 10,000 எழுத்துக்களுக்கு மேற்பட்ட கட்டுரை எண்ணிக்கையிலும் சென்ற மாதத்தில், 35 கட்டுரைகளுடன் தமிழ் மேற் சொன்ன மூன்று மொழிகளுக்கும் கீழேயே இருந்தது. சென்ற மாதத்தில் எடுத்த தீவிர முயற்சியினால் இது சற்று முன்னேறியுள்ளது. 30,000 எழுத்துக்களுக்கு மேற்பட்ட கட்டுரைகளிலும் தமிழ் 6 கட்டுரைகளுடன் மேற்படி மொழிகள் அனைத்திலும் கீழ் நிலையிலேயே இன்னும் உள்ளது.
இந்த 1000 கட்டுரைகள் பட்டியல் ஐரோப்பியப் பண்பாடுகளுக்குச் சார்பானவை என்று கூறப்பட்டாலும் இவற்றுள் 80% யாவது பொது அறிவு என்ற வகையில் நமக்கும் முக்கியமானவை தான். இப்பட்டியலில் அடங்கும் டெல்லி, கல்கத்தா போன்ற இந்தியத் தொடர்புள்ள கட்டுரைகளும் மிகச் சிறிய கட்டுரைகளாகவே உள்ளன. தவிரவும், கணினித்துறை சார்ந்தவர்கள் பலர் இருந்தபோதும், இப்பட்டியலில் காணப்படும், Hard Disk, Software, World Wide Web, Microprocessor, Use Interface போன்ற தலைப்புக்களில் தமிழில் கட்டுரைகளே இல்லை. இவை பற்றிக் கவனம் எடுக்கவேண்டியது அவசியம். மயூரநாதன் 20:05, 8 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
மொத்த கட்டுரை அதிகரிக்கும் பொழுது சராசரி அளவு குறையும். எனினும் சில முக்கிய கட்டுரைகளை தகுந்தவாறு விருத்தி செய்வது அவசியம். இருப்பினும் எமது அடுத்த வருட கவனம் பயனர்களை ஈர்ப்பதகா இருக்க வேண்டும். அதற்கு சில அறிமுக கட்டுரைகள், நிகழ்படங்கள் தேவை. --Natkeeran 21:22, 8 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

மே 2008 வரையான விக்கிப்பீடியா தர அளவீடுகள்

தொகு
மொழி Off count > 200 Char Mean edits Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் 14 k 14 k 12.1 1540 80% 19% 61 MB 2.4 M 5.8 k
வங்காளி 17 k 11 k 11.0 1025 46% 9% 53 MB 2.6 M 5.6 k
மராத்தி 18 k 5.3 k 10.0 552 20% 5% 33 MB 1.4 M 1.6 k
தெலுங்கு 40 k 12 k 5.5 502 14% 4% 54 MB 2.5 M 2.0 k
இந்தி 20 k 10 k 7.6 859 32% 7% 51 MB 2.9 M 3.5 k
மலையாளம் 6.4 k 5.9 k 17.7 2212 73% 26% 41 MB 1.5 M 3.7 k
கன்னடா 5.5 k 4.7 k 8.6 1240 52% 13% 20 MB 845 k 1.7 k
மணிப்புரி 23 k 21 k 6.2 1081 85% 1% 74 MB 3.9 M 1.3 k
நேபாள மொழி 44 k 36 k 2.5 625 56% 72 MB 4.2 M 556

மே 2008 இன் தரம் பற்றிய விக்கித் தரவுகளின் படி, இந்திய மொழிகளுள், தரத்தில் பொதுவாகத் தமிழ் இன்னமும் முன்னணியில் உள்ளது. ஆனால் முதலாவதாக இல்லை (பல தர அளவீடுகளில்). ஆனால் மிக விரைவில் மலையாளம் தமிழை விஞ்சும் என்று நினைக்கிறேன். முதன் முறையாக இங்கே வி^ச்ணுப்பிரியா மணிப்புரி மொழியின் தரவுகளைச் சேர்த்துள்ளேன். இந்திய மொழிகள் அனைத்திலும் இதுவே அதிக சொற்கள் கொண்ட விக்கி. சொற்களின் எண்ணிக்கையில் தமிழ் ஐந்தாவதுதான்!. 200-எழுத்துகளுக்கும் அதிகமாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை வரிசையிலும் மணிப்புரியே முதலாவதாக நிற்கின்றது (தமிழ் இரண்டாவதுதான்!). மொத்த விக்கியின் 'பைட் அளவிலும் மணிப்புரியே முதலாவதாக உள்ளது (தமிழ் 2 ஆவது). மணிப்புரியில், 2000-'பைட் அளவை மீறும் காட்டுரைகளின் எண்ணிக்கை வெறும் 1% ஆக உள்ளது, ஆனாலும் 500 'பைட் அளவுள்ள கட்டுரைகளின் பகுதி 85% ஆக உள்ளது. இந்தி மொழியும் மிக விரைவாகவும். நன்றாகவும் வளர்ந்து வருகின்றது. தெலுங்கு மொழியும் நன்றாக வளர்ந்து வருகின்றது. நாம் இன்னும் விரைவாகவும், விரிவாகவும், ஆழமாகவும் கட்டுரைகளை வளர்த்து எடுக்கவில்லை என்றால் மற்ற மொழிகளை ஒப்பிடும்பொழுது பிந்தி விடுவோம். ஆளுக்கு ஒரு 20 கட்டுரைகள் எழுதினாலும் ஓராயிரம் பேர் வந்து உதவினால் 20,000 கட்டுரைகளை எட்டுவோம். நம்மில் இன்னும் மிகப்பலர் ஏன் முன்னுக்கு வந்து ஒரு சிறிதேனும் உதவவில்லை என்று விளங்கவில்லை. நமக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களை உசுப்பி விட்டு கட்டுரையாக்கம் செய்ய அழைத்து வாருங்கள். கட்டுரை எண்ணிக்கை மட்டுமல்லாமல், கட்டுரைகளின் ஆழமும், செய்திச் செறிவும், எளிமையாக படித்துப் பயன் பெறுமாறு தெள்ளிய நடையும், கட்டுரைகளின் தலைப்பு வகைகளில் பரவலும் இன்னும் மிக வளர்ச்சியடைய வேண்டியிருக்கின்றது. தமிழ் விக்கியில் ஆர்வம் கொண்டவர்கள் இன்னும் அதிக அளவிலும் விரைவாகவும், திறமாகவும் பங்களிக்க வேண்டும். தமிழ் விக்கிப் பயனர்களின் எண்ணிக்கை 4,000 ஐ எட்டவுள்ளது. அதில் நான்கில் ஒரு பங்கினராவது வந்து ஒரு சிறிதாவது பங்களிக்க வேண்டும்.

--செல்வா 17:48, 9 ஆகஸ்ட் 2008 (UTC)

நேப்பாள மொழியும், மணிப்புரி மொழியுமே இந்திய துணைக்கண்ட மொழிகளில் முதலாவதாக உள்ளன. நேப்பாள் மொழி விக்கியின் மொத்த 'பைட் அளவு மே 2008இல் 72 மெகா 'பைட்!! 4.2 மில்லியன் சொற்கள். > 200 எழுத்துக்கள் கொண்ட கட்டுரை எண்ணிக்கையும் 36,000 (மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கை 44,000). கட்டுரைகளின் சராசரி 'பைட் அளவு 625 என்று இருப்பதும் குறைவல்ல. --செல்வா 00:09, 16 ஆகஸ்ட் 2008 (UTC)

மே 2008 வரையான தர அளவீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி கடந்த பெப்ரவரியில் 78.5% ஆக இருந்த 0,5 கி.பைட்டு அளவுக்கு மேற்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 80.2% ஆக உயர்ந்துள்ளது. இதுபோலவே 2.0 கிபைக்கு மேற்பட்ட கட்டுரைகளின் வீதம் 17.2% இலிருந்து 19.4% ஆக அதிகரித்து உள்ளது. இது பல பயனர்களும் ஓரளவு பெரிய கட்டுரைகளை எழுதுவதில் காட்டிய ஆர்வத்தின் விளைவு எனலாம். 256 பைட்டுகளுக்கும் குறைந்த அளவுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையும் 4.6% இலிருந்து 3.6% ஆகக் குறைந்திருப்பது நல்ல முன்னேற்றம் ஆகும். எனினும், 4 கிபை, 8கிபை அளவுகளுக்கு மேற்பட்ட கட்டுரைகளின் வீதம் எவ்வித மாற்றமும் அடையவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் இன்னும் ஆழமான கட்டுரைகளை எழுதும் பழக்கம் விரிவடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. 4 கிபை அளவுக்கு மேற்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை வீதம் 5.3% மட்டுமே. இது 10% அளவுக்காவது அதிகரிக்கப்படல் வேண்டும். 2.0 கிபை அளவுக்கு மேற்பட்ட கட்டுரைகளை 25% க்கு மேல் கொண்டுவரவும் முயற்சிக்க வேண்டும்.

தற்போதைய புள்ளிவிபரங்களில் கவனிக்கப் படவேண்டிய இன்னொரு அம்சம் பயனர் பங்களிப்புப் பற்றியதாகும். தமிழ் விக்கிப்பீடியா பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பிடும்போது நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றது. எனினும், அம் மொழிகள் பலவற்றை விடத் தமிழில் பயனர் பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே சொல்லவேண்டும். கீழேயுள்ள அட்டவணை இதனைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த அட்டவணையில் இடது பக்க நிரலில் தொகுப்புக்களின் எண்ணிக்கையும் அதற்கு எதிரே வெவ்வேறு மொழிகளில் அக் குறிப்பிட்ட அளவுகளுக்கு மேற்பட்ட தொகுப்புக்களைச் செய்த பயனர்களின் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளது.

தொகுப்புகள் தமி தெலு கன் மலை ஹிந் வங் மரா
>100 43 53 27 64 52 46 42
>316 26 29 17 34 30 27 22
>1,000 14 14 6 16 15 11 11
>3,162 9 7 1 6 5 5 5
>10,000 2 3 - 1 - 1 1

பயனர் பங்களிப்புக்களைப் பொறுத்தவரை மலையாள விக்கி முன்னணியில் இருப்பது தெரிகிறது. இதனால் அவர்களது பிற தர அளவீடுகளும் நல்ல நிலையில் இருக்கின்றன.மயூரநாதன் 20:18, 19 ஜூலை 2008 (UTC)

இந்திய மொழி விக்கிகள் அனைத்தும் வளர்ச்சி குன்றியே உள்ளன

தொகு

செல்வா, மயூரநாதன் இருவரும் தமிழ் இன்னும் எப்பிடி வளரலாம் வளர வேண்டும் என்பதை மனத்தில் வைத்து கருத்து தெரிவித்துள்ளார்கள். இருப்பினும், அனைத்து இந்திய மொழி விக்கிகளும் குறைந்த வளர்ச்சியையே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள விக்கியில் தமிழ் விக்கியுடன் ஒப்புடுகையில் அரை மடங்கு கட்டுரைகளையே கொண்டுள்ளது. இந்தி விக்கி அவர்களின் மக்கள் தொகைக்கு சற்றும் ஈடுகொடுக்க வில்லை. கன்னட விக்கி இப்போது தள்ளாடுகிறது. தெலுங்கு விக்கியின் தரம் கோள்விக்குரியது. வங்காளி விக்கியும் அவ்வளவு சிறப்பாக வளர வில்லை. எமக்கு முன்னர் சிலர் செயற்பட்டாலும் நன்றே. குறிப்பாக Wikipedia Indian Chapter செயற்பாடுகள் மேம்பட்டால் தமிழ் விக்கியின் மீதான கவனமும் கூடும். (இந்த கருத்தால் தமிழ் விக்கியின் நலிந்த செயற்பாடுகளுக்கு ஒரு காரணம் கற்பிக்க இங்கு நான் முற்படவில்லை.) --Natkeeran 16:57, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளும் விக்கிப்பீடியர்களின் எண்ணிக்கையும்

தொகு

மே 13, 2008 அன்றைய நிலவரம். மலையாளம் மொழி விக்கிப்பீடியாவில் 5,114 பயனர்கள் பதிவு செய்துள்ளார்கள். தெலுங்கு விக்கிப்பீடியாவில் 5,593 பயனர்கள் பதிவு செய்துள்ளார்கள். தமிழர்கள் இன்னும் பெரிய அளவிலே பங்களிக்க வேண்டும். இங்கு பங்களிக்கும் விக்கிப்பீடியர்கள் அருள்கூர்ந்து நன்றாக பங்களிக்கக் கூடிய தமிழர்களை. அழைத்து வாருங்கள்.

மொழி உலக மொழிகளின் வரிசையில் விக்கிப்பீடியர்கள் கட்டுரை எண்ணிக்கை >200 எழுத்துக்கள் உள்ள கட்டுரைகள் (பிப்ரவரி 2008)
தமிழ் 68 3043 13,775 13,000
வங்காளி 58 2035 17,367 10,100
மராத்தி 59 2140 17,216 4,800
தெலுங்கு 37 5593 40,049 11,000
இந்தி 56 3904 19,237 7,100
மலையாளம் 96 5114 6,231 5,200
கன்னடா 99 1473 5,480 4,400

--செல்வா 15:05, 13 மே 2008 (UTC)[பதிலளி]

செல்வா, வெறும் பதிவு செய்த பயனர் எண்ணிக்கை குறித்து நாம் பெரிதாக கவலை கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன். இவ்வெண்ணிக்கைக்கும் பங்களிப்புகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதில்லை. பயனர்களைக் கூட்டுவதால் பங்களிப்புகள் பெருகுவதில்லை. ஆனால், பங்களிப்புகளைக் கூட்டினால் பல புதிய பயனர்களும் பல்வேறு கட்டுரைகளையும் கண்டு இணையத்தளத்துக்கு வந்து கணக்கு உருவாக்கக்கூடிய நிலை வரும். வெறும் பயனர் எண்ணிக்கை என்பதை விட முனைப்புடன் பங்களிக்கக்கூடியவர்களையே நாம் தேடிப்பிடிக்க வேண்டும்--ரவி 15:56, 13 மே 2008 (UTC)[பதிலளி]

பயனர் கணக்கு நிச்சியம் ஒரு indicator தான். கூடிய பயனர் தொகை, கூடிய பங்களிப்பாளர். இயன்ற அளவுக்கு நாம் பயனுள்ள தகவல்களை தந்தா, பயனர் வட்டம் கூடும். 3 30 ஆகி இருக்கிறம். எமக்கு வளர நிறைய வாய்ப்புக்கள் உண்டு. --Natkeeran 21:06, 13 மே 2008 (UTC)[பதிலளி]
ரவி, கவலை கொள்வதற்கு அல்ல. அக்கறை எடுத்து பயனர் கணக்கு ஏற்படுத்தியவர்களை கணக்கில் கொள்கிறோம். அவர்கள் படிப்பவர்களாகவாவது இருப்பார்கள் அல்லவா? இல்லாவிட்டாலும், கூடிய பயனர்கள் பதிவு செய்தால் கூடிய பங்களிப்பாளர்களும் வர வாய்ப்பு உள்ளது. மிக முக்கியமாக நற்கீரன் கூறுவதுபோல நாம் பயனுள்ள தகவல்களை தந்தா, பயனர் வட்டம் கூடும். இடையறாது மேலும் மேலும் பயனுடைய, நன்றாக புரியக்கூடிய நல்ல கட்டுரைகளை (குறுங்கட்டுரைகளாகட்டும் நெடுங்கட்டுரைகளாகட்டும்) எழுதிக்கொண்டே வந்தோமானால், கட்டாயம் மெள்ள மெள்ளவாவது தமிழர்கள் பயனை உணர்வார்கள். மேலும் மேலும் தரத்தைக் கூட்ட வேண்டும், கருத்துச் செறிவைக் கூட்டவேண்டும். நடையை எளிமைப்படுத்த வேண்டும். நெடிய தொடர்களை சிறு தொடர்களாக ஆக்குதல், விளக்கம் சேர்த்தல், புரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கும் பகுதிகளை திருத்தி சீர் செய்தல், படங்கள் சேர்த்தல் என்று செய்ய வேண்டியன மிகவுள்ளன. --செல்வா 22:21, 13 மே 2008 (UTC)[பதிலளி]

கட்டுரைப் பரம்பல்

தொகு

குறிப்பில்வழிப் பக்க வசதியைப் பயன்படுத்திப் பார்த்தால் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் பரம்பல் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதிகம் தென்படும் கட்டுரை வகைகள்:

  • கணேஷ்பாட் உருவாக்கிய இந்திய ஊர்கள் கட்டுரைகள்
  • நிரோ உருவாக்கிய திரைப்படக் கட்டுரைகள்
  • பாடல் பெற்ற தலங்கள் குறித்த கட்டுரைகள்
  • சிந்துவின் ராகங்கள் குறித்த கட்டுரைகள்
  • 365 நாட்கள் குறித்த கட்டுரைகள்

12, 000 கட்டுரைகள் நிறைவு, மேலதிக கட்டுரைகளுக்கான இலக்குகளுக்கு இடையே கட்டுரைத் தலைப்புகளில் பரம்பலைக் கொண்டு வருவதற்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும்--ரவி 17:33, 1 டிசம்பர் 2007 (UTC)

ரவி, நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான். சிறுதிருத்தங்கள் செய்யும் மனநிலையில் குறிப்பில்வழிப்பக்கங்களூடாக நகரும்போது இக்கட்டுரைகளே பெரிதும் வருகின்றன. இப்போதுள்ள 12200 கட்டுரைகளில் சுமார் 20% நிரோ உருவாக்கிய திரைப்படக் கட்டுரைகள். அதாவது 2500+ கட்டுரைகள். அடுத்து இந்திய ஊர்கள் தொடர்பில் 1000 கட்டுரைகளும் இராகங்கள் தொடர்பில் 400 கட்டுரைகளும் வருகின்றன. பாடல்பெற்ற தலங்கள் 275. இவற்றுடன் குறுங்கட்டுரைகளையும் சேர்த்துப் பார்த்தால் மொத்தம் 5000 கட்டுரைகள் (40%) சில வகைகளுள்ளேயே நிற்கின்றன.

முக்கிய கட்டுரைகள் என அடையாளங் காணப்பட்ட எல்லாக் கட்டுரைகளையும் எழுதி முடிப்பது பயனுள்ளதாக இருக்கும். கோபி 17:54, 1 டிசம்பர் 2007 (UTC)

ரவி, கோபி ஊர்கள் பற்றிய கட்டுரைகள் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவேண்டியதில்லை. நாம் தானியங்கி மூலமாக ஆக்கிவிட்டோம் என்று பெருமைப்படவேண்டுமே தவிரக் கவலைப்படக்கூடாது. விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்கள் அதிகரிக்கும் போது ஊர்த்தகவல்களும் அதிகரிக்கும். திருத்தங்களும் அதிகரிக்கும். இலங்கையிலும் சோதனை முயற்சியாக பாட்டை பாவிக்க விரும்புகின்றேன் (இப்போது அல்ல 2008 ஜனவரிக்குப் பின்னர்) சரியென்றால் திருகோணமலையில் இருந்து தொடங்கலாம். --உமாபதி 18:14, 1 டிசம்பர் 2007 (UTC)

கவலை என்று சொல்வதை விட consciousஆக இருக்க வேண்டும் என்று கொள்ளலாம். வெறும் எண்கள் அடிப்படை புள்ளிவிவரங்களை அலசி நாம் மயக்க நிலையில் இருந்து விடக்கூடாது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் இது வரை தமிழ் விக்கிப்பீடியாவின் பலன் என்ன என்று பார்க்கையில் மிகவும் துவக்க நிலையில் இருக்கிறோம் என்பதே என் புரிதல். 12, 000 என்ற எண்ணிக்கை நம்மை மயக்கி விடக்கூடாது என்பதற்காகவே தெரிவித்தேன். அதற்காக, மேலே உள்ள கட்டுரைகள் பயனற்றவை என்றில்லை. அவை நிச்சயம் பயனுள்ளவையும் அந்தந்த பங்களிப்பாளர்களின் ஆர்வத்தையும் வெளிப்படுத்துபவை. எந்த ஒரு கேள்விக்கும் ஆங்கில விக்கிப்பீடியாவை இன்று நாடுவதைப் போல் ஒரு குறைந்தபட்ச உசாத்துணை ஆதாரமாகத் தமிழ் விக்கிப்பீடியா திகழ வேண்டும் என்றால் அது குறித்த பல் நோக்கு திட்டமிடல், அணுகுமுறை வேண்டும். இந்த இலக்கை எட்ட இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. --ரவி 18:56, 1 டிசம்பர் 2007 (UTC)

12,000 கட்டுரைகள்

தொகு

நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது. --செல்வா 22:26, 7 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா 12,000 கட்டுரைகள் அளவை எட்டியதில் மகிழ்ச்சி. விரைவில் 15,000 அளவை எட்ட உழைப்போம். Mayooranathan 03:44, 8 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

உலக மொழிகள் வரிசையில் இந்திய மொழிகளின் வரிசை எண் -பிப்ரவரி 2008

தொகு
மொழி Size (வரிசை எண்) >200 char (வரிசை எண்)
தமிழ் 47 57
வங்காளி 51 66
மராத்தி 63 86
தெலுங்கு 52 61
இந்தி 59 74
மலையாளம் 60 84
கன்னடா 79 91

இந்திய மொழிகளுள் தமிழே முதலில் உள்ளது. மலையாளம் 'பைட் அளவில் மராத்தியைவிட முந்தி உள்ளது! மலையாளம் இந்திக்கு அடுத்தாற்போல ஒரே ஒரு நிலை கீழே உள்ளது. தமிழ் உலக மொழிகளிடையே 'பைட் அளவில் 47 ஆவதாகவும், கட்டுரை எண்ணிக்கையில் (> 200 char) 57 ஆவதும் உள்ளது. இவ்வளவீடுகள் இரண்டிலும் விரைவில் நாம் 30 க்குள் இருத்தல் வேண்டும். பிப்ரவரி 2005 இல், மொத்தம் 10 மொழிகள்தான் 54 மெகா 'பைட் அளவுடைய விக்கிகளாக இருந்தன ( en, de, ja, fr, it, pl, es, nl, sv, he). உருசிய மொழி 40 M, சீன மொழி 42 M, போர்த்துகீசு மொழி 44 M. எனவே நாம் 3 ஆண்டுகள் பின் தங்கி இருக்கின்றோம். பிப்ரவரி 2004 இல், முதல் நான்கு மொழிகளாக இருந்தவை: ஆங்கிலம் (458 M), ஜெர்மன் மொழி (100 M), நிப்பான் மொழி (53 M), பிரான்சிய மொழி (50 M). எனவே பிப்பிரவரி 2004 இல் இரண்டே இரண்டு மொழிகள்தான் 54 M 'பைட் அளவைத் தாண்டி இருந்தது. ஆனால் நாமும் அவர்கள் அப்பொழுது வளர்ந்த விரைவோடு வளர்வோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பார்க்கவும்.

பிப்ரவரி 2008க்கான விக்கித் தர அளவீடுகள்

தொகு
மொழி Off count > 200 Char Mean edits Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் 13.0 k 13.0 k 11.2 1464 78% 17% 54 MB 2.2 M 5.3 k
வங்காளி 17.0 k 10.0 k 10.1 986 45% 9% 49 MB 2.5 M 5.2 k
மராத்தி 16.0 k 4.8 k 9.5 556 19% 5% 30 MB 1.3 M 1.3 k
தெலுங்கு 39.0 k 11.0 k 5.1 468 12% 4% 47 MB 2.2 M 1.2 k
இந்தி 17.0 k 7.1 k 7.7 669 21% 6% 35 MB 1.9 M 2.1 k
மலையாளம் 5.8 k 5.2 k 15.7 2101 71% 25% 35 MB 1.3 M 3.3 k
கன்னடா 5.2 k 4.4 k 7.9 1219 51% 13% 18 MB 786 k 1.6 k

தமிழே இன்னமும் முதலில். ஆனால் பிறமொழிகள் விரைந்து முன்னேறுகின்றன! குறிப்பாக மலையாளம். நாம் பல கோணங்களில், இன்னும் விரைந்து முன்னேற வேண்டியுள்ளது.--செல்வா 20:12, 3 மே 2008 (UTC)[பதிலளி]

சனவரி 2008க்கான விக்கித் தர அளவீடுகள்

தொகு
மொழி Off count > 200 Char Mean edits Mean bytes Length 0.5K Length 2K Size Word image
தமிழ் 13.0 k 13.0 k 11.0 1450 78% 17% 52 MB 2.1 M 5.2 k
வங்காளி 17.0 k 09.8 k 09.7 959 44% 9% 48 MB 2.4 M 4.9 k
மராத்தி 16.0 k 04.7 k 09.2 539 19% 5% 28 MB 1.2 3.9 k
தெலுங்கு 38.0 k 10.0 k 04.9 442 12% 3% 44 MB 2.1 M 0.919
இந்தி 16.0 k 06.5 k 07.5 618 19% 5% 33 MB 1.7 M 1.8 k
மலையாளம் 05.6 k 05.0 k 15.3 2079 71% 25% 34 MB 1.2M 3.2 k
கன்னடா 05.1 k 04.3 k 07.8 1196 50% 12% 17 MB 0.755 1.5 k

சனவரி 2008-க்கான விக்கித் தர அளவீடுகளும் வெளியாகி உள்ளன. Database size, words ஆகியன தொடர்ந்து 4% என்ற அளவில் வளர்ந்து வருகின்றன. இந்தியாவின் GDP போல் 8-9% அளவிற்கு கொண்டு வர வேண்டும். தமிழுக்கான புள்ளிவிவரங்களை மட்டுமே கொடுத்துள்ளேன். மற்றவற்றை யாராவது நேரமிருப்பின் இங்கிருந்து நிரப்பலாம். --சிவகுமார் \பேச்சு 13:13, 5 மார்ச் 2008 (UTC)

முதற்கண், சிவகுமார் இப்படி அழகாக தொகுத்துத் தருவதற்கு நன்றி. தமிழ் விக்கி ஆர்வம் ஊட்டும் வகையில் முன்னேறி வருகின்றது. இன்னும் பன்மடங்கு முன்னேற இயலும் - எல்லா வகைகளிலும். அயராது உழைப்போம். புதியவர்கள் பெருமளவில் வந்து ஆக்கம் தர முயலுவோம். 500 'பைட்டுக்கு கூடிய கட்டுரைகளின் விகிதம் 78% இருப்பதும், கட்டுரைகளின் சராசரி 'பைட் அளவு 1450 ஆக சிறிதளவு உயர்ந்திருப்பதும். மகிழ்ச்சி தருகின்றது. மொத்த 'பைட் அளவு அரைநூறு மெகா 'பைட் தாண்டியுள்ளது கொண்டாட வேண்டியது. முழு மெகாபைட்டைத் தாண்டுவோம்.--செல்வா 14:39, 5 மார்ச் 2008 (UTC) 2 கிலோ 'பைட் அளவு 15% இருந்து 17% ஆனது இன்னும் மகிழ்ச்சியைத் தருகின்றது. --செல்வா 14:42, 5 மார்ச் 2008 (UTC)
பிற மொழிகளின் எண்ணிக்கைகள் சரியாக உள்ளதா? கன்னடத்திற்கு 17 மெகா 'பைட்டும், சராசரி 'பைட் 1196 என்றும் எண்ணிக்கைகள் சற்று வேறாக இங்கே] உள்ளதே?--செல்வா 14:47, 5 மார்ச் 2008 (UTC)
மற்றவற்றுக்கான தரவுகளையும் இற்றைப்படுத்தியுள்ளேன்.--சிவகுமார் \பேச்சு 12:56, 6 மார்ச் 2008 (UTC)

அண்மைக்காலங்களில் உருவாகிவரும் கட்டுரைகளில் ஏறத்தாழ எல்லாமே 2000 'பைட் அளவைவிடப் பெரியவையாக உள்ளமையாலேயே சராசரி 'பைட் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் பழைய குறுங்கட்டுரைகள் பல விரிவாக்கப்படாமல் உள்ளன. 500 'பைட்டுக்குக் கூடிய கட்டுரைகளின் விகிதத்தை 90% வரை அதிகரிக்கவேண்டுமானால் குறுங்கட்டுரைகளும் விரிவாக்கப்பட வேண்டியுள்ளது. நன்றி. கோபி 05:47, 6 மார்ச் 2008 (UTC)

ஏறத்தாழ 22% கட்டுரைகள் (2600 கட்டுரைகள்) 500 பைட்டுகளுக்குக் குறைவாக உள்ளன. இவற்றுள் 1600 கட்டுரைகளையாவது 2000 பைட்டுகளுக்குமேல் கொண்டு வந்தால் 500 பைட்டுகளுக்கு மேலானவை 90% ஆவதுடன் 2000 பைட்டுகளுக்கு மேலானவையும் 30% அளவை அண்மிக்கும். தமிழில் 4000 பைட்டுகளைத் தாண்டும் கட்டுரைகள் 4.9% (சுமார் 650 கட்டுரைகள்) மட்டுமே. அண்மையில் எழுதப்பட்ட கட்டுரைகள் பெரும்பாலும் 2000 - 4000 பைட்டுகளுக்கு இடைப்பட்டவை. 4000 - 8000 க்கு இடைப்பட்டவைகளிலும் கடந்த ஆண்டில் மிகச் சிறிய வளர்ச்சி காணப்பட்டுள்ளது. 8000 பைட்டுகளைத் தாண்டும் கட்டுரைகளின் விழுக்காடு குறைந்து வருகிறது. எனவே நீளமான கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதிலும் கவனம் செலுத்துவது அவசியம். மயூரநாதன் 16:36, 6 மார்ச் 2008 (UTC)
மேலே கூறியுள்ள கருத்துக்கள் எல்லாம் எனக்கும் உடன்பாடானதே. இவை தவிர விக்கிப் புள்ளிக்குறிப்புகள் தராத சில தரக்கணிப்புகளையும் நாம் ஒருவாறு குறித்து வருதல் வேண்டும். (1) வேறு விக்கிகளில் இல்லாத அளவுக்கு சிறந்த கட்டுரைகளாக (கருத்துகள்) இருப்பவை (எ.கா. பலாப்பழம் போன்ற கட்டுரைகள்). இவை ஏதேனும் ஓர் இடத்தில் தொகுத்து வரவேண்டும். இவை 1000 கட்டுரைகளுக்கு ஒரு 10 கட்டுரைகளாகவாவது இருத்தல் வேண்டும். (2) முதன்மை வாய்ந்த தலைப்புகளில் அது பற்றியதான கட்டுரைகளுக்கு வாயில்கள் அமைத்து சிறப்பு கூட்டிக்கொண்டும், செப்பனிட்டுக்கொண்டும் இருத்தல், (3) பகுப்புகளைச் சீர்/ஒழுங்கு செய்தல், (4) எல்லா மொழி விக்கிகளிலும் உள்ள கட்டுரைகள் தமிழில் நிறைவு பெறுவதும், தமிழுக்கென சிறப்பாக ஒரு பட்டியல் உருவாக்கிச் செய்வது. (5) சிறப்புக் கட்டுரைகள் கூட்டாக உழைத்து உருவாக்கிப் பெருக்குதல்.--செல்வா 17:22, 6 மார்ச் 2008 (UTC)
500 'பைட்டுக்கும் குறைவாய் இருப்பது குறும் பக்கங்கள் (இங்கே பார்க்கவும் ) காட்டுவன 34 தானே உள்ளது? மயூரநாதன் காட்டும் 2,600 கட்டுரைகளை எப்படிப் பார்ப்பது? (விழுக்காட்டில் இருந்து கட்டுரை எண்ணிக்கையைக் கணிக்கிட்டுருப்பார் என்று நினைக்கிறேன்).--செல்வா 18:05, 6 மார்ச் 2008 (UTC)--செல்வா 18:07, 6 மார்ச் 2008 (UTC)

தர அளவீடுகளில் வெளி இணைப்புக்கள், விக்கியிடை இணைப்புக்கள் போன்றவற்றின் 'பைட் அளவைச் சேர்த்துக் கொள்வதில்லை. இங்கே அவை சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு துவா கட்டுரை 64 'பைட் அளவை விடச் சிறியது. ஆனால் விக்கியிடை இணைப்புக்களால் பெரியதுபோல இங்கே தெரிகின்றது. குறும்பக்கங்களில் 4000 வரை சென்றே எல்லா 500 'பைட் கட்டுரைகளையும் அடையாளங்காண வேண்டிய்யிருக்கிறது. கோபி 04:21, 7 மார்ச் 2008 (UTC)

நான் விழுக்காடுகளின் அடிப்படையில் கணக்கிட்டுத்தான் மேற்குறிப்பிட்ட கட்டுரை எண்ணிக்கைகளைப் பெற்றேன். கோபி சுட்டிக்காட்டியதுபோல், குறும்பக்கங்கள் பட்டியலில் உள்ள பைட்டளவுகள், புள்ளிவிபரக் கணிப்பீடுகளில் பயன்படுத்தும் பைட்டளவுகள் அல்ல. சில கட்டுரைகளைப் பொறுத்தவரை அவை பெரிய அளவில் வேறுபடுகின்றன. தவிர, செல்வா குறிப்பிட்டுள்ளபடி புள்ளிவிபரத் தரக் குறியீடுகளுக்கு அப்பாலும் நாம் சிந்திக்க வேண்டும். குறித்த தலைப்புக்களின் முக்கியத்துவம், உள்ளடக்கத்தில் தகவல் செறிவு, முழுமை, ஆழம், பயன்பாட்டு மதிப்பு, தனித்துவம் என்பவைபற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இவற்றுக்கும் அப்பால், தமிழ் மொழியின் ஆரோக்கியமான வளர்ச்சி குறித்த எண்ணம் எப்போதும் அடிப்படையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.மயூரநாதன் 04:55, 7 மார்ச் 2008 (UTC)