விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 2


நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் தொகு

விக்கிபீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள்


கருத்துக்கள் தொகு

வினோத் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பங்களிப்பது மட்டுமல்லாது பல தேவையான உரையாடல்களைத் தொடங்கியிருக்கிறார். தனது கருத்துக்களைத் தெளிவாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்துகிறார். மேலும் பிற பயனர்களுடன் ஒத்துழைத்து பணிபுரிகிறார். தான்தோன்றித்தனமாக செயல்படுபவர் அல்லர். எனவே இவருக்கு ஆட்சியர் தகுதியை வழங்கப்பரிந்துரைக்கிறேன். --சிவகுமார் \பேச்சு 14:11, 4 மார்ச் 2008 (UTC)

ஆம் மேலே சிவகுமார் கூறிய கருத்தே என்னுடையதும் மிகவும் பயனுள்ள கட்டுரைகளை ஆக்கிவருகின்றார். பௌத்தமதம் பற்றிய இவர் ஆக்கிய கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. --உமாபதி \பேச்சு 17:03, 4 மார்ச் 2008 (UTC)

Kanags தொகு

வாக்கு நிலவரம்: (6/0/0)
காலம்: 1:24, பெப்ரவரி 2, 2007 முதல் 1:15, பெப்ரவரி 9, 2007 வரை (அனைத்துலக நேரம்)

Kanags, கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முறையில் விக்கிபீடியாவிற்கு பங்களித்து வருகிறார். தள பராமரிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு நிர்வாக அணுக்கம் தருவது அவருடைய தள பராமரிப்புப் பணிகளை எளிமையாக்க உதவும் என்பதால், அவரை நிர்வாகியாக்க பரிந்துரைக்கிறேன்--Ravidreams 14:29, 2 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி, இரவி. இந்த நியமனத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.--Kanags 02:34, 3 பெப்ரவரி 2007 (UTC)



ஆதரவு (Support)

  • ரவியின் கருத்தே எனது கருத்தும். தமிழ் விக்கிபீடியாவிலும் தமிழ் வலைப்பதிவுகளிலும் ஓர் முன்னோடியாகத் திகழ்கின்றார். தமிழ் விக்கிபீடியாவின் நம்பிக்கையை பெற்றவர். நிர்வாகப் பொறுப்பு தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சியை முன்னெடுக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. --Umapathy 14:40, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • அனுபவமும், அறிவும், ஆர்வமும், பொறுப்பும் மிக்க நல்ல ஒரு பயனர். நிச்சியம் த.வி தொடர்ந்து பலமாக இருப்பார். --Natkeeran 15:22, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • தொலைநோக்கும் பொறுப்புணர்வும் மிக்க பயனர். நிச்சயம் நிர்வாகியாக வேண்டியவர். --கோபி 16:03, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • நானறிய கனகு அவர்கள் திருத்தங்கள், தொகுப்புகள் முதலியற்றை மிகச் சிறப்பாகச் செய்பவர்களில் ஒருவர். நிர்வாக அணுக்கம் பெறுவதால் தமிழ் விக்கி பல வழிகளில் பெயன் பெறும். என் ஒப்புதல் தருகிறேன். --செல்வா 17:04, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • ரவியின் கருத்தே எனது கருத்தும்.--Sivakumar \பேச்சு 17:55, 2 பெப்ரவரி 2007 (UTC)

எதிர்ப்பு (Oppose)

நடுநிலை (Neutral)


Kanags நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் நிர்வாகி அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் விக்கிபீடியாவுக்கான உங்கள் பங்களிப்பை மேலும் பயனுள்ளதாக்க உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் கனகு. --Natkeeran 20:23, 9 பெப்ரவரி 2007 (UTC)

வாக்களித்த அனைவருக்கும் எனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து நிர்வாக அணுக்கத்தை வழங்கிய நற்கீரனுக்கு என் நன்றிகள். வருங்காலத்திலும் தொடர்ந்து கூடிய முனைப்புடன் செயல்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.--Kanags 22:02, 9 பெப்ரவரி 2007 (UTC)

டெரன்ஸ் தொகு

வாக்கு நிலவரம்: (6/0/0)
காலம்: 1:24, பெப்ரவரி 2, 2007 முதல் 1:15, பெப்ரவரி 9, 2007 வரை (அனைத்துலக நேரம்)

டெரன்ஸ், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முறையில் விக்கிபீடியாவிற்கு பங்களித்து வருகிறார். விக்கி நடைமுறைகள், நுட்பங்கள் புரிந்தவராகவும் இருப்பதோடு தள பராமரிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு நிர்வாக அணுக்கம் தருவது அவருடைய தள பராமரிப்புப் பணிகளை எளிமையாக்க உதவும் என்பதால், அவரை நிர்வாகியாக்க பரிந்துரைக்கிறேன்--Ravidreams 14:29, 2 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, இரவி இருவருக்கும் நன்றி.நான் தொடர்ந்து விக்கியில் செயற்பட வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. அதனால் நிர்வாகி அணுகத்துக்கான வாகெடுபுக்கு நான் சம்மதிக்கிறேன். நான் இன்று முதல் மார்ச் 10 வரை இலங்கைக்குச் செல்கிறேன் அதனல் ஒருமாதமளவுக்கு விக்கியில் பங்களிப்பு குறைவாக அல்லது பூச்சியமாகவே இருக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 12:11, 3 பெப்ரவரி 2007 (UTC)



ஆதரவு (Support)

  • டெரன்ஸ் தகவற் சட்டங்களை உருவாக்குவதில் ஆர்வத்துடன் செயற்படுவதோடு அநாமதேயப் பயனர் மற்றும் விக்கிபீடியாவில் வேண்டத்தகாத மாற்றங்களை கண்காணித்தும் வருகின்றார். நிர்வாகப் பொறுப்பிருந்தால் இந்த வேலைகளை இலகுவாகச் செய்யலாம். பூரண ஆதரவு. --Umapathy 14:38, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • நுட்பம், கட்டுக்கோப்பான செயல்திறன், ஆர்வம் மிக்க பயனர். த.வி. நன்கு புரிந்தவர். அதன் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியவர். நிர்வாக அணுக்கம் இவருக்கு மிகவும் உதவும். --Natkeeran 15:26, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • கட்டுரை உருவாக்கத்தில் நுட்பத்தை இணைப்பதுடன் தரத்தையும் கரூதிற் கொள்ளும் பயனர். அண்மைய மாற்றங்களைத் தொடர்ந்து அவதானித்து வருபவராதலால் நிர்வாகி அணுக்கம் இவருக்கு மிகப் பயன்படும். --கோபி 16:05, 2 பெப்ரவரி 2007 (UTC)
  • அமைதியாய், கட்டுப்பாடுடன், தரமான கட்டுரைகள் பல எழுதி கருத்தை கவர்ந்தவர். நிருவாகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள இசைந்தது மகிழ்ச்சியூட்டுகிறது. என் ஒப்புதலை அளிக்கிறேன்.--செல்வா 17:17, 2 பெப்ரவரி 2007 (UTC)

எதிர்ப்பு (Oppose)

நடுநிலை (Neutral)


டெரன்ஸ், பயனர்களின் ஒருமித்த ஆதரவுக்கிணங்க உங்களின் நிர்வாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் பங்களிப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் மேலும் முனைப்புடன் செயல்படுவதற்கும் உதவும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்.--Ravidreams 20:26, 9 பெப்ரவரி 2007 (UTC)