விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பெ. கார்த்திகேயன்
பெ. கார்த்திகேயன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்பை முடித்து விட்டு புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உயிர்வேதியியல் படித்து வருபவர். 2010 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார்.