விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 9, 2015

கூழைக்கடா
கூழைக்கடா

கூழைக்கடா என்பது கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவைகள் இவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதை கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை. இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது. மேலும்...


ஊர்மிளா மடோண்த்கர்
ஊர்மிளா மடோண்த்கர்

ஊர்மிளா மடோண்த்கர் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை நகரில் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று பிறந்த ஒரு இந்திய பாலிவுட் நடிகை ஆவார். மதோண்ட்கர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது திரை வாழ்க்கையை 1977 ஆம் ஆண்டு கர்ர்ம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். வயது வந்தவராக நரசிம்மா எனும் திரைப்படத்திலும் அறிமுகமானார். அவர் ரங்கீலா, ஜுதாயி மற்றும் சத்யா ஆகிய திரைப்படங்களில் ஏற்ற வேடங்களின் மூலம் வணிக ரீதியான பாலிவுட் திரைப்பட உலகின் பிரபல நடிகையாகத் தம்மை நிலை நாட்டிக்கொண்டார். மேலும்...