விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 28, 2021

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கி. பி. 1526 தொடக்கம் முதல் 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்கிய-பாரசீக / துருக்கிய-மங்கோலிய தைமூரியத் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். மேலும்...


பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக கிடைத்த கலவெட்டுக்கள், கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளியில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் ஆகும். ஆனால் இக்கல்வெட்டுக் குறிப்புகள் இதுவரை யாராலும் முழுமையாக படித்து அறியப்படவில்லை. வட இந்தியாவில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளும், தமிழ்நாட்டில் தமிழி எழுத்தில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட மாங்குளம் கல்வெட்டுகள் முதலில் அறியப்பட்டதாகும். மேலும்...