விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு

(விக்கிப்பீடியா:BLP இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.
குறுக்கு வழி:
WP:BLP


வாழும் மனிதர்கள் குறித்தத் தகவல்களை எந்தவொரு விக்கிப்பீடியா பக்கத்திலும் சேர்க்கும் முன் தொகுப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் .[1] உணர்வுகளை மதிக்கும் விதமாகவும் கண்டிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் அனைத்து பொருந்தும் சட்டங்களுக்கும், இந்தக் கொள்கைப் பக்கத்தில் விவரித்துள்ளவற்றிற்கும் விக்கிப்பீடியாவின் மூன்று உள்ளடக்க கொள்கைகளுக்கும் உடன்பட்டு இருக்க வேண்டும்:

விக்கிப்பீடியாவில் ஒரு வாழும் நபரைப் பற்றி எழுதுகையில் அவரைப் பற்றிய சாதகமில்லாத் தகவல்களை வலுவான புறச்சான்றுகளன்றி இணைக்கவியலாது. சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலும், அனைவரும் அறிந்த பொது உண்மை என்ற அடிப்படையிலும் கூட சாதகமற்ற கருத்துகளை இணைக்க இயலாது. அவ்வாறு சேர்க்கப்படுவற்றை உடனடியாக நீக்க பிற பயனர்களுக்கும், அப்பதிப்புகளை மறைப்பதற்கு நிருவாகிகளுக்கு உரிமை உண்டு.

குறிப்புகள்

தொகு
  1. People are presumed to be living unless there is reason to believe otherwise. This policy does not apply to people declared dead in absentia.