விக்கிப்பீடியா பேச்சு:இணக்க முடிவு

வார்ப்புரு:வழிகாட்டல்

  • Negotiation
  • Conflict Resolution
  • Decision Making

குறிப்புகள்

தொகு

முரண்பாடுகளை தீர்ப்பதும் தெரிவுகளை மேற்கொள்வதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள செயற்பாடுகள். சமூகம் சார்ந்த கேள்விகளுக்கு அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை, தெரிவுகளை, முடிவுகளை எட்ட எந்த வழிமுறை சரியானது என்பது ஒரு சிக்கலான கேள்வியாகும். த.வி. வில் இணக்க முடிவு விரும்பப்படுகின்றது.

வரையறை

தொகு

இணக்க முடிவு ஒரு குழு முடிவெடுக்கும் முறை. ஒரு குழுவின் அனைத்து அல்லது அனேகரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே இணக்க முடிவு ஆகும். இம் முறையை தேர்தல் முடிவு, ஏகபோக முடிவு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபாட்டை வரையறுக்கலாம்.

இதுவரை தமிழ் விக்கிபீடியா ஒரு சிறிய (<30) பயனர் குழுவினாலேயே முன்னெடுக்கப்பட்டதாலும், தெளிவான குறிக்கோளும் புருந்துணர்வும் எம்மிடம் இருப்பதாலும் அனேக விடயங்களுக்கு இணக்க முடிவு எட்ட முடிகின்றது. இப்போது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி இணக்க முடிவின் தேவையையும் வழிமுறையையும் தெளிவாக்கி செழுமைப்படுத்த உந்தியிருக்கின்றது.

எங்கே இணக்க முடிவு தேவை?

தொகு

முக்கிய சிக்கலான முடிவுகளுக்கே நாம் சிரமப்பட்டு இணக்க முடிவு காண வேண்டி வரவேண்டியிருக்கும். இது வரை த.வி. பெரும்பாலும் ஒத்துப்போகும் தன்மை இருக்கின்றது. த.வி. கட்டமைப்பை, தொடர் செயற்பாட்டை, குறிக்கோளை பாதிக்க கூடிய விடியங்கள், எதிர்கால திட்ட முடிவுகள், மேல்-நிலை இணக்க முடிவுகள் தேவைப்படும் முடிவுகள், நிர்வாக முடிவுகள் ஆகியவற்றுக்கு இணக்க முடிவு தேவைப்படும்.

எங்கே இணக்க முடிவுகள் தேவையில்லை?

தொகு
  • மேல்-நிலை இணக்க முடிவின் கீழ் தேர்தல் வழி முடிவு எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட விடங்களில்.
  • அவசர முடிவுகள் தேவைப்படும்பொழுது (விசமிகள் தாக்குதல்)
  • தெளிவான, அதிக முக்கியத்துவம் இல்லாத கீழ் நிலை முடிவுகளுக்கு (சில பரிசோதனைக் இடுக்கைகளை நீக்குதலில்)

இணக்க முடிவு தமிழ் விக்கிபீடியாவிற்கு ஏன் உகந்தது

தொகு
  • தமிழ் விக்கிபீடியா ஒரு குழுச் செயற்பாடு. இங்கே எமக்கு ஒரு தெளிவான குறிக்கோள் உண்டு. எளிய தமிழில் தரமான கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே அந்தக் குறிக்கோள். அக்குறிக்கோளை செயலாக்கும்பொழுது எழும் சிக்கல்களை அல்லது பிரச்சினைகளை தீர்க்க நாம் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. அது இணக்க முடிவாக அமையும் பொழுது நாம் பிளவுபடாமல் முரண்படாமல் முன்னேற்ற பாதையில் செல்வதை உறுதி செய்ய கூடியதாக இருக்கின்றது.
  • தமிழ் விக்கிபீடியா இன்னும் ஒரு பெரிய குழு இல்லை. எனவே விரைவாக இணக்க முடிவுகளை எட்டுவது நடைமுறை சாத்தியமாகின்றது.
  • நிரிவாகிகள், அதிகாரிகள் என்று பொறுப்புகளை ஏற்று பயனர்கள் மேலதிக அணுகூலங்களுடன் செயற்பட்டாலும். அனைவரும் தன்னார்வல பயனர்களே. இங்கு அடுக்கமைவு கட்டமைப்பு கிடையாது. அதிகாரம் செலுத்தும் தலைமைத்துவமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. ஆரோக்கியமான நம்பிக்கை அடிப்படையிலான செயற்பாட்டிலேயே த.வி. செயற்பாடுகள் தங்கியுள்ளன. இந்த சூழமைவு இணக்க முடிவுக்கு உகந்தது.
  • இணக்க முடிவு வழிமுறை பயனர்களுக்கிடையான தொடர்புகளையும் புரிதல்களையும் பலப்படுத்தி விரிவாக்க உதவும்.

இணக்க முடிவு வழிமுறை

தொகு
  • முடிவு எடுக்கப்படவேண்டிய விடயம் அல்லது பிரச்சினை விபரிக்கப்படல்.
  • எடுக்கப்படக் கூடிய அனைத்து முடிவுகளையும் அலசுதல்.
  • அனைவருடைய பார்வைகளும் கருத்துக்களும் இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறிதிசெய்தல்.
  • ஒவ்வொரு முடிவின் நன்மை தீமைகளையும் அல்லது வரவு செலவுகளையும் ஆராய்ந்து, ஆட்சோபனைகள் இருந்தால் திருத்தி சிறந்த முடிவுகளைத் தெரிதல்.
  • பாரிய எதிரிப்பு அல்லது ஆட்சோபனைகள் இல்லாவிட்டால் ஒத்துளைப்பை கோருதல்.
  • இணைக்கத்தை உறிதிப்படுத்தல்.

இணக்க முடிவு நோக்கி விமர்சனங்கள்

தொகு
  • சிறுபான்மை ஒத்துப்போகாதோரால் அல்லது தனிநபர்களால் கூட பெரும்பான்மையினரின் முயற்சிகள் தடைப்பட்டு போகக்கூடிய சாத்தியக்கூறு.
  • இணக்க முடிவுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால் அதிக நேரம் செலவழிக்க கூடியவர்களே பங்களிக்ககூடியதா இருக்கும். இது ஜனநாய போக்குக்கு சார்பான செயற்பாடு அல்ல.
  • ஒத்துப்போகவேண்டும் என்ற போக்கு இருப்பதால் கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் தடைப்க்கூடிய சாத்தியக்கூறு.
  • இணக்க முடிவு வழிமுறை சிறுபானமைக் கருத்துக்கள் நீண்டகாலமாக இழுப்பறி செய்ய வழி செய்கின்றது.

முடிவெடுக்கும் முறைகள் en:Decision making

தொகு
  • Consensus Decision Making - ALL members AGREE with the decision.
  • Consent Decision Making - ALL members need not NOT agree with the decision, but should not object to it.

Also see: en:Conflict resolution

--Natkeeran 02:20, 12 டிசம்பர் 2006 (UTC)

தொடர்பாடல் அணுகுமுறை

தொகு

முட்டி மோதி முரண்படும் அணுகுமுறையை தவிர்த்து, எமது பொதுக் குறிக்கோளானா எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியத்தை ஆக்குவதை மனதில் நிறுத்தி, அதற்கேற்ற முறையில் எமது பிரச்சினைகளை தீர்க்க கூடிய வழிமுறைகளை நாம் ஆயவேண்டும். இங்கு நாம் வேறுபாடுகளை புரிந்து எமக்குரிய ஒற்றுமையை முன்னிறுத்துவதே தேவை.

உண்மையான பரிவுடனும் பக்குவத்துடனும் கருத்துக்களை பரிமாற நாம் முன்வரவேண்டும். இங்கு யாராவது வந்து பங்களிக்க முற்படுகின்றார்கள் என்றால், அவர்கள் எதோ சொல்ல முனைகின்றார்கள். இயன்றவரை அவர்கள் சொல்வதை கேட்டு அனுசரித்து செல்தல் நன்று.

தெளிவான முறையில் எமது அவதானங்களையும் உணர்வுகளையும் தேவைகளையும் வேண்டுதல்களையும் முன்வைத்து அவ்வாறே பிறரையும் முன்வைக்குமாறு கோரி ஆரோக்கியமான தொடர்பாடலைப் பேணலாம்.

--Natkeeran 01:31, 18 டிசம்பர் 2006 (UTC)

திருத்தம்

தொகு

செல்வா

"அனைவருடைய பார்வைகளையும் கருத்துகளையும் இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறுதிசெய்தல்." என்பதை

"அனைவருடைய பார்வைகளும்ம் கருத்துகளும் இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறுதிசெய்தல்" என்று திருத்தியிருக்கிறீர்கள்


அதில் பார்வைகள், கருத்துகள் subject of the proposition இல்லை ; அவை object. அதனால் அவை பார்வைகளை, கருத்துகளை (உம் அதற்கு கூட) எழுத வேண்டும் என நினைக்கிரேன்.

கருத்துக்கள் முன்வைக்கப்படுதல் என்பது சரி. கருத்துக்களை முன்வைக்கபடுதல் தவறு. கருத்துக்களை முன்வைத்தல் சரி. Active voice, passive voice என்பதை உணர்ந்தால் உங்கள் தவறு தென் படும். --செல்வா 14:35, 16 பெப்ரவரி 2007 (UTC)

உதாரணமாக, குதிரை ஓட்டு சரியா, குதிரையை ஓட்டு சரியா?

குதிரை ஓட்டு என்பது பெயர்ச் சொல். குதிரையை ஓட்டு என்பது ஒரு முழு சொற்றொடர் (ஏவல் தொடர்).

எ.கா. குதிரை ஓட்டு என்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவர் குதிரை ஓட்டில் முன்னணி வீரர். குதிரை இல்லாதவன் குதிரை ஓட்டு எப்படி செய்வான்?--செல்வா 14:34, 16 பெப்ரவரி 2007 (UTC)

நான் கொடுத்த உதாரணம் 'குதிரை ஓட்டு ' ஏவல் தொடரில்தான். அது சரியா இல்லையா என கேட்டேன். நாம் அது எப்படி ஆகும் என்ற கேள்விக்கு போகவேண்டாம்--விஜயராகவன் 15:05, 16 பெப்ரவரி 2007 (UTC)
நீங்கள் எது சரி எனக் கேட்டீர்கள். இரண்டும் சரிதான். குதிரையை ஓட்டு. குதிரை ஓட்டப்பட்டது. வண்டியை ஓட்டு வண்டி ஓட்டப்பட்டது. இப்பொழுது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். --செல்வா 15:12, 16 பெப்ரவரி 2007 (UTC)
புரிந்தது; நன்றி--விஜயராகவன் 15:22, 16 பெப்ரவரி 2007 (UTC)


ஒரு இலக்கிய நடையின் உதாரணம் (பொன்னியின் செல்வன்)

"குதிரைகளுக்குப் பின்னால் வந்த ரதம் சற்று அப்பால்.................". பார்த்தீர்களா, இங்கே குதிரைகள் subject இல்லை, அதனால் 'குதிரைகளுக்கு' என மாறுவது.

உங்கள் திருத்தல் வழியில் சொன்னால் 'குதிரைகள் பின்னால் வந்த ரதம்' என்று எழுதவேண்டியிருக்கும்.--விஜயராகவன் 14:12, 16 பெப்ரவரி 2007 (UTC)

குதிரை ஓட்டப்பட்ட ரதம், குதிரையை ஓட்டப்பட்ட ரதம் அல்ல. உங்கள் எ.கா ஒரு சிறிதும் பொருந்தாதது. --செல்வா 14:34, 16 பெப்ரவரி 2007 (UTC)

திருத்தம்-2

தொகு

செல்வா, நீங்கள் கீழ்க்கண்ட திருத்தங்களை செய்துள்ளீர்கள். மாற்றப்பட்டவை எல்லாம் எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியவை. இலக்கியங்களில் பயன்படுபவை.

அனேகரின் - பலரின்

ஏகபோக - தனியொருவர்

சிரமப்பட்டு - பாடு்பட்டு

பாதிக்க - இடையூறு

சாத்தியமாகின்றது - இயலுகின்றது

ஆரோக்கியமான நம்பிக்கை - நல்லுறவோடு நம்பிக்கையின்

விடயம் - கருத்தை

பிரச்சினை - சிக்கலை

ஆட்சேபணைகள் - மறுப்புகள், மாற்றுக் கருத்த்க்கள்

'ஆரோக்கியமான' என்பதற்க்கு 'நல்லுறவோடு' சரியான இடமாற்றமில்லை. ஏனெனில் இரு சொற்களும் வேறு பொருள் கொண்டவை. முதல்சொல்லே ஆரோக்யமான ஆடலாகும்.

பிரச்சினை - சிக்கலை ; பிரச்சினை என்றால் problem, enquiry; சிக்கல் என்றால் complication, entanglement. இங்கே பிரச்சினைதான் சரியான பொருள் தரும்

ஆட்சேபணை என்றால் objection என்று சரியான பொருள் தரும். ஆட்சேபணை எல்லோருக்கும் தெரிந்த, பரவலான வார்த்தை. மறுப்பு என்றால் rejection என்ற பொருளில் வரும், அதனால் ஆட்சேபணைதான் இங்கு சரி.

"தமிழ் வேர்" என்ற பெயரில் கருத்து வெளியீடு வரட்சியாகிரது.

--விஜயராகவன் 13:43, 19 பெப்ரவரி 2007 (UTC)

இங்கு விஜயராகவன் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. குறிப்பாக ஏகபோக - absolute (இது தனியொருவராக இருக்கவேண்டியதில்லை), பிரச்சினை - problem சிக்கல் - complexity என்ற புரிதல் சரி; இங்கு பிரச்சினையே பொருந்தும் என்று நினைக்கின்றேன். மற்ற சொற்கள் பயன்பாட்டிலும் கருத்து வேறுபாடும் தேவைப்பட்டதோ என்பதில் தெளிவில்லை. --Natkeeran 15:59, 19 பெப்ரவரி 2007 (UTC)

மன்னிக்கவும். எவ்வளவு எண்ணிப் பார்த்தும் எனக்கு திருத்தங்கள் சரியாகவே படுகின்றன. இவற்றில் "சிரமப்பட்டு", "பாதிக்க" "விடயம்" போன்றவை வெகுவாகப் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றிற்கான மாற்றுச்சொற்களும் புழக்கத்தில் பரவலாக உள்ளவைதான். "ஆரோக்கியமான" என்பதற்கு "நலன்மிகு", "நலமான", "நல்ல", "நல்லுறவுடன்" போன்றவை வெவ்வேறு இடங்களில் மாற்றுச்சொற்களாகப் பயன்படலாம். இதில் மாற்றுக்கருத்திற்குப் பரிவான வகையில் நோக்கினால் "ஆட்சேபணை" என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. -- Sundar \பேச்சு 16:10, 19 பெப்ரவரி 2007 (UTC)

ஏகபோகம் என்பது கிராமங்களிலும் பண்ணை/உழுதல் உரிமைகளில் பயன்படுத்தப்படுகிரது. மேலும் monopoly என்ற சொல்லிலும் பயன்படுத்தப் படுகிரது. அகராதிப்படி

1. Sole enjoyment or possession; தனக்கே உரிய அனுபவம், அல்லது 2.Mutual, reciprocal enjoyment; இருவருக்கு மொத்த போகம். ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையருள் . . . பெருமாளே (திருப்புகழ். 862). பொருளாதாரத்தில் Monopolists என்பதை ஏகபோக முதலாளிகள் என்றழைக்கலாம். சிங்கப்பூரிலிருந்து வரும் சீன வானொலியின் தமிழ் பிரசுரம் ஏகபோகம் என்பதை monopoly என பயனாக்குகிரது http://tamil.cri.cn/chinaabc/chapter2/chapter20203.htm. தற்கால தமிழில் ஏகபோகம் என்பது monopoly என பரவலாக அறிகிரது. "நல்லுறவு" என்றால் ஒரு வகை உறவு சொல்லப்படுகிரது. அது 'ஆரோக்கியம்' என்பதற்கு சரிசமம் இல்லை. உடம்பு, மன ஆரோக்கியம் வேறு, நல்லுறவு வேறு.--விஜயராகவன் 16:29, 19 பெப்ரவரி 2007 (UTC)

மேலும், விடயம் (விதயம், விஷயம்) என்பது matter (of discussion), in the matter of consideration, a point of consideration என சொல்லாட்சிகளில் வருபது. 'கருத்து' என்றால் பொதுவாக Idea என பொருள். அது விடயம் என்ற சாய்வில் பொருந்துவது கஷ்டம். நாம் பயன்படுத்தும் சொல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருக்க வேண்டும். --விஜயராகவன் 16:47, 19 பெப்ரவரி 2007 (UTC)

(1)ஆரோக்கியம் என்பது எளிதாக நலம் என்பதே. உடல் நலம், உளநலம், சூழல் நலம், நல்லுறவு, நல்லிணக்கம், நல்வளம் என இடத்திற்கு ஏற்பச் சொல்லலாம். நல்லா இருக்கிறாயா? (நல்லா இருக்கியா?) என்பதை விட ஆரோக்கியமா இருக்கிறாயா என்பது இயல்பாகவோ எடுப்பாகவோ இல்லை. நான் எங்கு நல்லுறவு என்று மாற்றினேன் என்று நினைவில்லை. ஆரோக்கியமான நம்பிக்கை என்பது நன்னம்பிக்கை. இது சுருக்கமாகவும் அழகாகவும் உள்ளது. ஆனால் எங்கு மாற்றினேன் என நினைவில்லை. பொருந்துமா என்றும் அறியேன். (2) பிரச்சினை என்றால் கேள்வி என்றுதான் பொருள். இங்கு என்ன பிரச்சனை என்று தமிழில் ஒருவர் கேட்டால், அதன் பொருள் இங்கு என்ன குழப்பம், இங்கு என்ன சிக்கல், இங்கு என்ன முடை, இங்கு என்ன இடக்கு, இங்கு என்ன சண்டை, இங்கு என்ன தகராறு என்று இடத்திற்கு ஏற்றார்போல் பொருள். இங்கு என்ன கேள்வி என்பது பொருளாகாது. யார் முதலில் குளிக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்று ஒருவர் கூறினாலும், அங்கு யார் முதலில் குளிக்க வேண்டும் என்பது கேள்வி என்றாலும், தமிழில் அதனால் எழும் சிக்கலைக் குறிக்கும் அல்லது தகராற்றைச் சண்டையைக் குறிக்கும். (3) ஏகபோகம் என்பது தனியே முழுவதுமாய்த் துய்த்தல் ஆகும். இடத்திற்கு ஏற்பத்தான் கூற இயலும். எங்கு நான் அப்படி மாற்றினேன் என்று குறிப்பிட்டால் மறுநோக்கு இடுவேன். (4) கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சொற்களை நான் மொழி பெயர்க்கவில்லை. எது பொருத்தமாக இருக்கும் என எண்ணித் திருத்தினேன். நவீன இலக்கியம் என்று ஒருவர் சொன்னால் அதனை நான் தற்கால இலக்கியம் என மாற்றினால் நவீன என்பதற்கு புதிய என்பதே நேரடியான பொருளாய் இருந்தாலும் தற்காலம் எனச் சொல்லுவதே பொருந்தும். தமிழில் பலர் நவீன, நியூ என்றெல்லாம் பயன்படுத்துகிறார்கள். இவ்விரண்டு சொற்களுக்கும் புதிய என்பதே பொருள். புதிய ஆண்டு புத்தாண்டு அதனை நவீன ஆண்டு என்று சொல்லிப்பாருங்கள் விளங்கும் பொருளும் உணர்ச்சியும் இளைப்பதை, திரிப்பதை. புத்துணர்ர்சி என்று சொல்லிப்பாருங்கள் தோன்றும் உணர்வை. நவீன உணர்ச்சி அல்லது நியூ உணர்ச்சி என்று சொல்லிப்பாருங்கள். புத்தெழுச்சி, புது+ஊக்கம் = புத்தூக்கம், புது+இணக்கம் புத்திணக்கம், புது + அவா = புத்தவா, புது + ஆவல் = புத்தாவல் என்று பல உணர்ச்சி எழுப்பும் நற்சொற்கள் ஆக்கவும் பயன் படுத்தவும் இயலும். அங்கெல்லாம் நவீன, நியூ என்று சொல்லிப் பாருங்கள் எத்தனையும் செயற்கையாகவும், பொருள் திரிபுடனும், பொருள் இளைத்த சொற்கோவையாகவும் இருப்பதை. (5) மறுப்பு ஏதும் இருந்தால் தெரிவியுங்கள் என்பது Objection ஏதும் இருந்தால் தெரிவியுங்கள் என்றுதான் பொருள் படும். இடம் சார்ந்தே பொருள் பெறப்படும். Rejection என்பது இடத்திற்கு ஏற்றார்போல ஒதுக்கப்பட்டது, விலக்கப்பட்டது, நீக்கம், மறுத்தல், மறுத்தொதுக்குதல் என்று கூறப்படும். மொழி பெயர்க்காமல், கூறவந்த கருத்து என்ன, அதனைத் தமிழில் எப்படி சொல்லுதல் பொருந்தும் என எண்ண வேண்டும். இன்று "கொஞ்சம் கூட adjust பண்ணிக்க மாட்டேன் என்கிறான்" என்று சொல்கிறோம். முன்னர் "என்னப்பா அவன் கொஞ்சம் கூட இசஞ்சு (இசைந்து) கொடுக்க மாட்டேன் என்கிறான்" என்று சொல்வது வழக்கம். "கொஞ்சம் இசஞ்சு கொடு்த்தாத்தான் என்னவாம்? பாவம் அவன் தான் அத்தனை வேண்டிக் கேட்கிறானே" என்றெல்லாம் சொல்லுவது வழக்கம். ஆனால் இன்று adjsut என்பதற்கு என்ன சொல்லுவது என்று மொழிபெயர்ர்பு செய்ய முழிக்கிறார்கள். மொழி பெயர்ப்பது கூடிய மட்டிலும் தவிர்க்க வேண்டும். தமிழில் எண்ணல் வேண்டும். --செல்வா 19:31, 19 பெப்ரவரி 2007 (UTC)

விஜய், அன்றாடம் நாம் பல கட்டுரைகள் எழுதுகிறோம். திருத்துகிறோம். எனவே அந்தந்த பேச்சுப் பக்கங்களில் கேள்விகளை குறித்தீர்கள் என்றால் சொற்சூழல் பார்த்து உரையாட இயலும். பல சொற்களுக்கு, திருத்தங்களுக்கு சொற்சூழல் அறியாமல் உரையாடுவது கடினம். தவிர, இது கொள்கைவிளக்கப் பக்கம். இங்கு இது போன்ற உரையாடல்கள் இடம்பெறத் தேவை இல்லை.

நீங்கள் எழுதிய சொற்கள் பொது வழக்கில் இருப்பவை என்று ஒத்துக் கொள்கிறேன். அதே வேளை மாற்றப்பட்டுள்ள சொற்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளத் தக்கவை. ஆங்கில சொற்களை போலே தமிழ்ச் சொற்களும் சூழலுக்குப் பொருத்திப் பார்த்தே பொருள் பார்க்க வேண்டாம்.

ஏகபோகம் என்பதை தனியுடைமை என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. சில இடங்களில் பொருந்தலாம்.

பிரசன்னம் என்றால் தெலுங்கில் கேள்வி என்று பொருள். இதற்கும் செல்வா குறிப்பிடும் கேள்வி என்ற பொருளுக்கும் ஒப்பு நோக்கத் தக்கவை.

ஆரோக்கியம் என்றால் நலம் என்பதில் எந்த ஐயமும் தேவை இல்லை. நலம் - நன்மை தொடர்புடைய சொற்கள் என்று தான் நினைக்கிறேன்.

விஜய், இங்கு ஒன்று கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் எழுதுகிற கட்டுரைகள் மட்டும் திருத்தப்படுவது போல் தோன்றினால் அது பிழையாகும். உண்மையில் கலாநிதி, உமாபதி, நட்கீரன், என் கட்டுரைகள் என்று அனைவரின் கட்டுரைகளும் பல காரணங்களுக்காக பிற பயனர்களால் திருத்தப்படுகிறது. விக்கி ஒரு eco system போல் செயல்படுகிறது. எல்லாரும் கட்டுரை மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் விக்கியால் ஒரு பயனும் இருக்காது. சிலர் formating, சிலர் வீண் பக்கங்களை நீக்குதல், சிலர் படங்கள் சேர்த்தல் என்று பல பிரிவுகளில் கவனம் செலுத்தி செயல்படுகிறார்கள். இதில் ஒன்று தான் தமிழ் விக்கிக்கான மொழி நடையை தீர்மானித்தலும் திருத்துதலும். உங்கள் கட்டுரைகளை உங்கள் விருப்பம் போல் எழுத நிச்சயம் அனுமதிக்க முடியும். ஆனால், அவை முழு தமிழ் விக்கிபீடியாவுடன் ஒட்டாமல் தனி நடையில் காணப்படும். நீங்கள் உங்கள் கட்டுரைகள் திருத்தப்படுகின்றன என்ற நோக்கில் இருந்து பார்க்கும்போது திணிக்கப்படுவது போல் தோன்றினாலும், முழு தமிழ் விக்கிபீடியாவுக்குமான overviewஆக உங்களால் பார்க்க இயலுமானால் உங்களால் இத்திருத்தங்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். தமிழ் விக்கிபீடியாவை குறித்து பல கேள்விகள் உள்ளன - ஏன் இலங்கை நடை தெரிகிறது? ஏன் ஆங்கில நடை தெரிகிறது ? ஏன் வட மொழிக் கலப்பு அதிகம் இருக்கிறது? என்று பல கேள்விகள். இப்படி கேட்பவர்கள் பலரும் ஒரு சில கட்டுரைகளின் தோற்றத்தை முழு விக்கிபீடியாவுக்கும் பொருத்திப் பார்த்து விடுவது தான் பிரச்சினைக்கு காரணம். அதனாலேயே ஒவ்வொரு கட்டுரையின் தோற்றமும் முழு விக்கிபீடியாவின் மொழிநடைக்கு ஒத்திருக்க முயல்கிறோம். செல்வா, மயூரனாதன் போன்றோர் தமிழ் எழுத்துத் துறையில் அனுபவம், ஆர்வம் கொண்டவர்கள். பல கால கட்டங்களை , இயக்கங்களை, வாழ்க்கைச் சூழல்களை , பணியிடங்களை கடந்து இங்கு பணியாற்றுபவர்கள். நிச்சயம் அவர்களின் செயல்பாடோ பிற உறுப்பினர்களின் செயல்பாடோ இன்னொருவரின் சுதந்திரத்தில் தலையிடுவது இல்லை. எந்த மொழிக் கலப்புக்கும் முன்னர் எல்லா சிந்தனைகளும் தமிழில் இருந்திருக்க வேண்டியவையே. அதனாலேயே, இந்தப் பொருளை பிற மொழிச் சொல்லால் தான் சொல்ல முடியும் என்ற வாதத்தை சற்றுத் தள்ளி வைத்து தமிழ் வேர்களை காண முயல்கிறோம். பொது ஊடகங்கள் தங்கள் சமூகக் கடமைகளை புறந்தள்ளி காலத்தை ஓட்டுவதிலும் பணத்தை ஈட்டுவதிலும் குறியாய்ச் செயல்படுகின்றன. நமக்கு அந்த கட்டாயங்கள் இல்லாததால் மொழி சார்ந்த ஒரு பொறுப்புடன் செயல்பட முயல்கிறோம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். --Ravidreams 21:24, 19 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, நான் சொல்லவேண்டியதெல்லாம் எற்க்கெனவே சொல்லியாச்சு. ஆனாலும் என் முரண்நகை பார்ப்பு ஆர்வத்தில், இதை (உங்களுடையது) சமர்ப்பிக்கிரேன். "எந்த மொழிக் கலப்புக்கும் முன்னர் எல்லா சிந்தனைகளும் தமிழில் இருந்திருக்க வேண்டியவையே" ....." இந்தப் பொருளை பிற மொழிச் சொல்லால் தான் சொல்ல முடியும் என்ற வாதத்தை சற்றுத் தள்ளி". அது சரி, சுயமரியாதை என்னாச்சு. "நமக்கு அந்த கட்டாயங்கள் இல்லாததால் மொழி சார்ந்த ஒரு பொறுப்புடன் செயல்பட முயல்கிறோம்" - உங்களுக்கு பொறுப்பு வேண்டும் ஒரு கட்டாயமும் இல்லையே. கட்டாயத்தையும், பொறுப்பையும் தருவது நம் பிழைப்பு முறை - நம் எண்ணங்கள் அல்ல. அதுதான் கார்ள் மார்க்சின் "சரித்திரத்தின் உலகாயுத அடிப்படை" என்ற தத்துவம். இன்றைக்கு இதோட தத்துவத்தை முடிக்கிரேன்.--விஜயராகவன் 12:13, 20 பெப்ரவரி 2007 (UTC)
Return to the project page "இணக்க முடிவு".