விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய உதவிக்குறிப்பு/பரிந்துரைகள்
தமிழ்ச் சொல்
தொகுஇது பொதுவான தமிழ்ச்சொற்களின் தொகுதியாக, அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைக் கொண்டிருத்தல் நலம். புலமை மிக்க சொற்கள் நன்றன்று -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 27 ஆகத்து 2012 (UTC)
- அவ்வாறே செய்வோம் தமிழ்க்குரிசில்! --மதனாகரன் (பேச்சு) 07:01, 28 ஆகத்து 2012 (UTC)
- ஆங்கிலம் தவிர, தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிற மொழிச் சொற்களுக்கான (வடமொழி, பாரசீக மொழி, போர்த்துகேய மொழி, ஒல்லாந்த மொழி, அரபு மொழி) தமிழ்ச் சொற்களையும் தரலாமே. --மதனாகரன் (பேச்சு) 12:50, 28 ஆகத்து 2012 (UTC)
விருப்பம் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:45, 29 ஆகத்து 2012 (UTC)
கட்டுரை
தொகு//எந்த மாதிரியான தலைப்புகளை வழங்கலாமென ஆலோசனை வழங்குங்கள் மதன்! என் கருத்து என்னவெனில், மிகவும் அறிவியல் சார்ந்த அல்லது தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் வேண்டாம். மக்களின் நடுவில் பிரபலமாக உள்ள தலைப்புகள், மக்கள் அறிய வேண்டியவை, ஆர்வமூட்டுபவைகளாக இருந்தால், இதன் நோக்கத்திற்கு வலு சேர்க்கும். அதிகம் பேர் பார்க்க வேண்டியவைகளாகவோ, பார்க்க விரும்புபவைகளாகவோ இருத்தல் நலம். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். மறுமொழி இடுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:59, 28 ஆகத்து 2012 (UTC)
- ஓரளவுக்கேனுந்தரம் வாய்ந்த கட்டுரைகளை இடலாம். இந்தியா, இலங்கை, தமிழ், புகழ் பெற்ற மாந்தர்கள், உயிரினங்கள் ஆகிய தலைப்புகள் சார்ந்த கட்டுரைகளை இடலாம். அத்துடன், பேச்சுப் பக்கத்திலேயே உங்கள் கருத்துகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 06:19, 29 ஆகத்து 2012 (UTC)
காப்பகம்
தொகுகாப்பகத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என விளக்குங்களேன். எனக்குப் புரியவில்லை. மேலும், ஒரு நாள் இற்றைப்படுத்த முடியாவிடில் என்ன செய்வது? விளக்குங்கள்.−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- தமிழ்க்குரிசில், ஒவ்வொரு நாளும் இடப்பட்ட குறிப்புகளைக் காப்பகத்தில் சேர்த்து விடுகிறேன். பிறகு படிக்க உதவியாக இருக்குமல்லவா? ஒரு நாள் இற்றைப்படுத்த முடியாவிட்டால் யாரேனும் இற்றைப்படுத்துவதற்காக நாளைய உதவிக்குறிப்பு என்னும் தலைப்பின் கீழ் உதவிக்குறிப்புகளைக் கொடுத்துள்ளேன். அவ்வாறில்லாவிட்டால் எந்தவொரு பயனரும் தாமே குறிப்புகளைச் சேர்த்து இற்றைப்படுத்த முடியும். அப்படியும் இற்றைப்படுத்தப்படா விட்டால் அன்றைய நாளை விட்டு விட வேண்டியது தான். --மதனாகரன் (பேச்சு) 13:28, 9 செப்டெம்பர் 2012 (UTC)