விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 26, 2010
இந்தியாவின் சென்னையின், இலங்கையின் யாழ்ப்பாணத்தின் போன்ற சொற்றொடர்களைத் தவிர்க்கலாமா? இத்தகைய பயன்பாடு பல கட்டுரைகளிலும் உள்ளது. ஆங்கில விக்கி உலகப் பொதுவானது என்பதால் இந்த விரிவான இடம் சுட்டல் தேவைப்படும். தமிழர்களுக்கு அறிமுகமான இடங்களுக்கு இத்தகைய விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.--ரவி 10:59, 26 ஏப்ரல் 2010 (UTC)
- இரவி, ஓர் கலைகளஞ்சியத்தில் விரிவான சுட்டல் இருப்பதில் தவறில்லை என்று எண்ணுகிறேன். பயனருக்குத் தெரியும் என்று எடுத்துக் கொள்ளல் சில நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்தலாம். தமிழ் உலகளாவிய மொழியாக வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த தலைமுறையில் சென்னைக்கே வந்திராதவர்கள் இருக்கலாம். அவர்களுக்கு சட்டென்று கோயம்பேடு என்று சொன்னால் சற்று தடுமாற்றம் ஏற்படலாம். தவிர, பல ஊர்கள் தமிழகத்திலும் உள்ளன, ஈழத்திலும் உள்ளன. ஆகவே ஓர் பொதுவான, கட்டமைப்பை பயன்படுத்தலாம் என்பது எனது பரிந்துரை. வேண்டுமானால் நாடு,மாநிலம்,மாவட்டம் என்று அனைத்துச் சுட்டல்களும் கொடுக்காது ஒன்றிரண்டை தவிர்க்கலாம்.--மணியன் 11:35, 26 ஏப்ரல் 2010 (UTC)
சென்னையின் கோயம்பேட்டில் என்று இருக்கலாம். இந்தியாவின் சென்னையின் கோயம்பேட்டில் என்று நீட்டி முழக்கி எழுதுவது படிப்பவரை அயரச் செய்யலாம். ஒரே ஊர்ப் பெயர் இரு நாடுகளில் இல்லாத நிலையில், இந்தியா-இலங்கை ஆகிய நாட்டு அடைமொழிகளை மட்டுமாவது தவிர்க்கலாம். --ரவி 12:20, 26 ஏப்ரல் 2010 (UTC)
Start a discussion about விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 26, 2010
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 26, 2010.