விக்கிப்பீடியா பேச்சு:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

முன்னெடுப்புக்கு நன்றி. நிகழ்வு நன்கு நடைபெற வாழ்த்துகள். நிகழ்வில் பங்கேற்போரை இங்கேயே பதிவு செய்யச் சொல்லலாமே? ஏன் தனியே ஒரு வலைத்தளம் சென்று அவர்கள் பதிவு செய்ய வேண்டும்? மேலும், தங்களுக்கு அவர்களிடம் கணினி இருக்கிறதா என்பவற்றை அறிய "உங்களிடம் இணைய இணைப்புடன் கூடிய கணினி இருப்பின் எடுத்துவரவும்" என்று குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அல்லது தங்களுக்கு அவசியம் பங்குபெறுவோர் பற்றிய தகவல்கள் (அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கணினி அனுபவம் முதலியவை) அவசியம் தேவைப்படின் அவற்றை கூகுள் டிரைவ் போன்றவற்றின் மூலம் பெறலாம். தேவைப்படின் ஏதாவது அறிவிப்புகளையோ பங்களிப்பு வேண்டுகோள்களையோ அனுப்ப (அது தேவையற்ற ஒன்று; மேலும் அதிகம் பலனளிக்காதது - Promotion போன்ற ஒன்று) உதவக்கூடும். --Surya Prakash.S.A. (பேச்சு) 05:57, 29 நவம்பர் 2013 (UTC)Reply

மகிழ்ச்சி. --Thamizhpparithi Maari (பேச்சு) 19:26, 29 நவம்பர் 2013 (UTC)Reply
வாழ்த்துக்கள்..--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:53, 29 நவம்பர் 2013 (UTC)Reply
நிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். முன்னர் போன்று வலைத்தளம் ஊடாக மட்டும் அல்லாமல், விக்கி அல்லது தொலைபேசி ஊடாக பதிவுசெய்யக் கூடிய வசதியையும் வழங்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 18:13, 29 நவம்பர் 2013 (UTC)Reply
பின்னூட்டங்களுக்கு நன்றி, மகிழ்ச்சி. அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் இந்நிகழ்வு குறித்து பரப்புரை செய்யப்பெற்றுள்ளது. தொலைபேசி வாயிலாக இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.--Thamizhpparithi Maari (பேச்சு) 19:21, 29 நவம்பர் 2013 (UTC)Reply

தமிழ்ப்பரிதிமாரி, சூரியாவின் கேள்விக்கும் பரிந்துரைக்கும் நேரடியாக மறுமொழி அளிக்க வேண்டுகிறேன். தாங்கள் தமிழகம்.வலை இணையத்தளத்தை நடத்தும் நிறுவனத்தின் சார்பாக நடத்தும் தமிழ் இணையப் பயிலரங்குகளில் விக்கிப்பீடியா அறிமுகத்தையும் தருகிறீர்கள் என்றால் தமிழகம்.வலை தளத்தைக் குறிப்பிடுவதும் அதன் வாயிலாக தகவல் பெறுவதும் ஏற்புடையது. ஆனால், ஒரு தமிழ் விக்கிப்பீடியர் என்னும் வகையில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகத்தை முதன்மையாக முன்வைத்துப் பட்டறைகள் நடத்துகிறீர்கள் என்றால் தமிழகம்.வலை தளத்தைக் குறிப்பிடவோ அதன் வாயிலாக தகவல் பெறவோ தேவையில்லை. தமிழகம். வலை தளத்துக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தால் இது நலமுரணாகவும் பார்க்கப்படும்.

கல்லூரிகளில் நான் நடத்திய பெரும்பாலான பட்டறைகளில் வெளியில் இருந்து வந்து கலந்து கொள்வோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. இடம் போதாத அளவு கூட்டம் கண்டதில்லை. அதற்கு முன்பதிவும் தேவைப்பட்டதில்லை. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலையில் மட்டும் அரங்கு நிறைந்த கூட்டம் இருந்தது. ஆனால், அதுவும் அங்குள்ள ஆசிரியர்கள் பிற கல்லூரிகளுடன் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த கூட்டம்.

தமிழகம்.வலை மூலம் எக்காரணம் கொண்டு பங்களிப்பாளர் தகவல் பெற்றாலும், முன்பதிவு செய்ய பெயர் மட்டும் போதும் என்று கருதுகிறேன். மின்மடல் முகவரி, தொலைப்பேசி எண் போன்ற தனிநபர் தகவலைப் பெறும் போது அவற்றின் இரகசியம் காக்கப்படும் என்றும் எரித நோக்கில் பயன்படுத்தப்படாது என்றும் தகவல் பெறும் இடத்திலேயே குறிப்பது வலையுலகில் பின்பற்றப்படும் நல்லுறுதி நடைமுறை. எனவே, இதனைப் பின்பற்ற வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:59, 3 திசம்பர் 2013 (UTC)Reply

அன்புநிறை இரவி, சூரியா, பல்கலைக்கழகத் தேர்வுப்பணியடர்வால் தாமதமாக மறுமொழி அளிப்பதற்கு பொறுத்தருள்க.
  1. மதிப்பிற்குரிய சூரியா அவர்களுக்கு உடனடியாக பின்னூட்டம் அளிக்க இயலவில்லை.
  2. இரண்டாம் கட்ட வன்பயிற்சி (intensive training) என்பதற்கான நிகழ்வுத்தகவல் மேலாண்மைக்கே சில தொடர்பு விவரங்கள் பெறப்பட்டன.
  3. தங்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் தன்நபர் தகவல் இரகசியக் காப்பு குறித்த செய்தி விக்கியில் வெளியிடப்பெற்றுள்ளது.
  4. பல ஊடகங்கள் வாயிலாக செய்தி அளிக்கப்பெற வேண்டும் என்னும் அடிப்படையிலேயே தமிழகம், முகநூல், வலைப்பூக்கள், நாளிதழ்கள், விக்கி செய்தி (தமிழ், ஆங்கிலம்) வாயிலாக அறிவிப்பு செய்யப்பெற்றது. மேற்கண்ட ஊடகங்களில் தமிழகமும் ஒன்று.
  5. பயிற்சியில் பங்குபெறுவோருக்கு ஏதுவாக, தமிழ்க்கணினி குறித்த செய்திகளும் மென்பொருட்களும் தொகுத்து தமிழகம் தளத்தில் அளிக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள்.
  6. தமிழகம் தளம் வணிக நோக்கம் கொண்ட தளம் அல்ல, இதுவரை அதில் எவ்வித விளம்பரமும் வந்ததில்லை. கல்வி, ஆராய்ச்சி, தமிழ் வளர்ச்சி, அறிவுப்பரவல் என்னும் இலக்கை மட்டுமே அடிப்படையாக் கொண்டு செயல்பட்டுவரும் இத்தளத்துடன் நான் இணைந்து செயல்பட்டு வருகின்றேன்.
  7. தமிழகம் தளம் இந்நிகழ்வின் ஊடகப்பங்காளராகச் செயல்பட்டு ஆயிரக்கணக்கான மக்களிடம் தமிழ்க்கணிமை குறித்து செய்திப்பரிமாற்றத்திற்கும பாலமாக விளங்கி வருகின்றது. தமிழகம் தளத்தின் வாயிலாகப் பெறப்பட்ட தகவல்கள் நிகழ்வில் பங்கு பெற்றவர், பெறப்போகிறவர்களுடன் நிகழ்வின் மேலாண்மை குறித்த திட்டமிடலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பெற்றுள்ளது. எரித நோக்கில் பயன்படுத்த அல்ல.
  8. பல்கலைக்கழக, கல்லூரி ஆசியர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார் அழைப்பு விடுத்தால் மட்டுமே அவர்கள் பங்கேற்பாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களில் ஒப்புதல் பெற்று நிகழ்வில் பங்கேற்க இயலும் எனவே தகவல் தரவு தேவையான ஒன்றாகும்.
  9. சான்றாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதல் கட்டப்பயிற்சியில் 700 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 400 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் கட்டப்பயிற்சியில் பதிவு செய்திருந்த 300 பேரில் 100 பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
  10. விரைவில் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2 அல்லது 3 நாள் வன்பயிற்சி (intensive training) அளிக்க உள்ளோம். இச்சூழல்களில் பயிலரங்க நிகழ்வு மேலாண்மைக்கு (event management)
  11. சேலம் பயிலரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு, தேநீர் யாதொரு கட்டணமின்றி வழங்கப்பெற்றன.
  12. நான் ஒருங்கிணைத்த எந்த பயிலரங்கிலும் பங்கேற்போர் கட்டணம் செலுத்திப் பங்கேற்கவில்லை.
  13. இதுவரை நான் ஒருங்கிணைத்த அனைத்துப் பயிலரங்கிலும் பெரும் எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சான்றாக சேலத்தில் 165 பேர், பெரியார் பல்கலைக்கழக முதற்கட்டப்பயிற்சியில் 400 பேர், பெரியார் பல்கலைக்கழக முதற்கட்டப்பயிற்சியில் 100 பேர், கும்பகோணம் அன்னை கலை அறிவியல் கல்லூயில் 200 பேர், சேலம் சுழற் சங்கத்தப்பயிலரங்கில் 50 பேர், சென்னை கிறித்தவக்கல்லூரியில் 300 பேர், கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் 300 பேர், பெரியார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் நடந்த பயிலரங்கில் 50 பேர், பங்கேற்றனர் இத்தகவல்களை ஒளிப்படங்களுடன் வெளியாகியுள்ள தமிழ் விக்கி செய்தியைப் பார்வையிட அன்புடன் விழைகின்றேன்.
  14. எம் விக்கியூடகப்பணிகளில் துணை நிற்கும் தங்களுக்கு எம் நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:50, 8 திசம்பர் 2013 (UTC)Reply
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 10:54, 13 திசம்பர் 2013 (UTC)Reply

தமிழ்ப்பரிதிமாரி, முறையாகவும் விரிவாகவும் பதில் தந்தமைக்கு நன்றி. இப்பயிலரங்குகளில் கலந்து கொள்ள நூற்றுக் கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. அவ்வாறான வேளைகளில் உணவு ஏற்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக, தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் அழைப்பது ஏற்புடையது. இதற்காக பயனர் தகவலைப் பெற்றுக் கொள்வதும் ஏற்புடையது. பயனர் தகவல் குறித்த இரகசியக் காப்புறுதியைச் சேர்த்தமைக்கு நன்றி. இதே உறுதியை தமிழகம்.வலை தளத்திலும் சேர்த்து விடுங்கள்.

பயனுள்ள தமிழகம்.வலை தளத்தில் நீங்களும் பங்களிப்பது குறித்து மகிழ்ச்சி. அது வணிக நோக்குடையதாகவே இருந்தூலும் கூட பிரச்சினை இல்லை. தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைக்க நமக்கு நிறைய கூட்டாளிகள் தேவை. தமிழகம்.வலை - குறிப்பிட்ட கல்லூரி இணைந்து நடத்தும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் என்று கூட அறிவிக்கலாம். ஆனால், தமிழ் விக்கிப்பீடியா சார்பாக ஒருங்கிணைக்கும் நிகழ்வுக்கு தமிழகம்.வலை உள்ளிட்ட எந்த ஒரு நலமுரண் வலைத்தளத்தையும் ஒருங்கிணைப்புக் களமாகப் பயன்படுத்தத் தேவையில்லை என்பதே நானும், சூரியாவும் சொல்ல முனைந்தது. தேவைப்படும் தகவலைப் பெற Google Drive தரும் Forms வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக நுட்ப உதவி தேவைப்பட்டால் குறிப்பிடுங்கள். தொடர் பரப்புரை முயற்சிக்கு நன்றி. --இரவி (பேச்சு) 17:01, 13 திசம்பர் 2013 (UTC)Reply

பங்கேற்றோர் கருத்துகள்

தொகு
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கில் என் விக்கிப்பீடியா கணக்கை உருவாக்கினேன். இப்பயிலரங்கம் வாயிலாக தமிழ்க்கணினி குறித்த அறிமுகம் எனக்குக் கிடைத்தது.--Venugopal tamil (பேச்சு) 09:50, 13 திசம்பர் 2013 (UTC)Reply
இப்பயிலரங்கம் எனக்கு மிகவும் பயனளிப்பதாக அமைந்தது. இப்பயிலரங்கில் என் புதியக்கணக்கினைத்தொடங்கினேன்.--Manimekalai r (பேச்சு) 10:01, 13 திசம்பர் 2013 (UTC)Reply

அன்புத் தமிழ் உள்ளங்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும். விக்கிபீடியா நடத்தும் கணினித்தமிழ்ப் பயிலரங்கில் என் கணக்கைத் தொடங்குவதில் அகமகிழ்கிறேன்.--115.242.135.65 10:14, 13 திசம்பர் 2013 (UTC) இந்னு நடந்த பயிலரங்கு நம் போதாமைகளைக் காட்டியதுடன் நம்முடைய பங்கேற்பின் அவசியம் உணர்த்தியது. விரிவான தளத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.நன்றி.Reply

    பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி அவர்களின் பயிலரங்கம் மிகப்பயனுள்ளதாக அமைந்தது.அவரது 

பேச்சும்,தமிழ் பணியும் என்னை மட்டுமல்ல,எல்லோரையும் வியக்கவைத்தது. என் கணக்கைத் தொடங்குவதில் அகமகிழ்கிறேன்.- கூகுள் கணேசன்

Return to the project page "ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்".