விக்கிப்பீடியா பேச்சு:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள்
இத்தெரிவுகள் Euro-centricஆக (ஐரோப்பிய சார்பாக) அமைந்திருப்பது கண்கூடு, எனவே பயனர்கள் தங்களின் மதிப்பீட்டுக்கேற்ப கட்டுரைகளை ஆக்குதல் நன்று. --Natkeeran 00:26, 26 ஜூலை 2006 (UTC)
காயத்திரி, பிரபஞ்சம் என்பது டிரில்லியன் கணக்கில் Galaxyகள் கொண்ட பேரண்டத்தைக் குறிக்கும் என நினைக்கிறேன். Galaxy என்பதற்கு நாள்மீன்பேரடை என்னும் ஒரு குறுங்கட்டுரை உள்ளது.
அறியத் தந்தமைக்கு நன்றி. காயத்திரி 05:46, 22 பெப்ரவரி 2007 (UTC)
simple எதிர் en
தொகுஇந்த தமிழ் விக்கிபீடியாவுக்கு இணையாண ஆங்கில விக்கிபீடியாவுக்கே இணைப்பு கொடுப்பது பொருத்தம். simple தமிழில் அப்படி ஒரு பதிப்பு வந்தால், அதில் கொடுக்கலாம். --Natkeeran 15:58, 27 மே 2007 (UTC)
கவனம் செலுத்த வேண்டிய பக்கம்
தொகுமெற்றா, ஆ.வி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் எமது பட்டியல் இற்றைப்படுத்தப்படாததாக உள்ளது. அத்துடன் த.வி தொடங்கி நான்காண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் முக்கிய கட்டுரைகள் பெரும்பாலானவை எழுதப்படாமலிருக்கின்றன. இது தொடர்பில் பயனர்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த டிசம்பர் மாதத்தை முக்கிய கட்டுரைகள் மாதமாக அறிவித்து அனைத்து முக்கிய கட்டுரைகளையும் எழுதி முடிக்கப் பயனர்கள் முன்வரக் கோருகிறேன். அத்துடன் இப்பக்கத்தை Wikipedia:முக்கிய கட்டுரைகள் என்பதாகப் பெயர் மாற்றப் பரிந்துரைக்கிறேன். நன்றி. கோபி 03:40, 18 நவம்பர் 2007 (UTC)
முக்கிய கட்டுரைகளாக இனங்காணப்பட்ட 1092 கட்டுரைகளில் தமிழில் 582 மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது. அவற்றிலும் பெரும்பாலானவை குறுங்கட்டுரைகள் மட்டுமே. பார்க்க http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias_by_sample_of_articles கோபி 03:48, 18 நவம்பர் 2007 (UTC)
முதலாவதாக இந்தப் பக்கம் முழுமையாக தமிழாக்கப்படல் வேண்டும். இப்போதுள்ள பழைய பட்டியலை மொழிபெயர்ப்பதா அல்லது ஆங்கில விக்கிப் பட்டியலுக்கேற்ப இற்றைப்படுத்த வேண்டுமா? கோபி 04:28, 18 நவம்பர் 2007 (UTC)
ஆங்கில விக்கியில் உள்ள பட்டியலைத் தொகுத்துப் பின் அதன் படி கட்டுரைகளை ஆக்கலாம். பிற மொழிகளில் உள்ள பட்டியல்களோடும் ஒப்பிட்டும் பார்க்கலாம். --செல்வா 04:44, 18 நவம்பர் 2007 (UTC)
how did he die
தொகுமுக்கிய கட்டுரைகள்
தொகுஇங்கே உள்ளதை இக்கட்டுரைப் பக்கத்தில் இடலாமா? அல்லது முக்கிய கட்டுரைகள்-2 என்று தனிப்பக்கத்தில் இடலாமா?--செல்வா 04:00, 17 மே 2008 (UTC)
விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்
தொகுவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் இருப்பதால் இந்தப் பக்கத்தை காப்பில் போடவா. நன்றி.