விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 2

ஜெ. ஜெயலலிதா எதிர் ஜ. ஜயலலிதா

தொகு

'ஜெ. ஜெயலலிதா'வை 'ஜ.ஜெயலலிதா' ஆக மாற்றுமாறு பரிவு. அவர் பெயர் ஜயராமன் ஜயலலிதா. ஆங்கில பேச்சை தமிழில் புகுத்தக் கூடாது.--விஜயராகவன் 11:52, 14 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, இப்போது இது எனக்கு பிரச்சினை இல்லை; ஏனெனில் ஜெ.ஜெயலலிதாவை 'ஜெயராமன் ஜெயலலிதா' என்று தமிழில் படிக்க முடியும். --விஜயராகவன் 14:37, 16 பெப்ரவரி 2007 (UTC)

jayalalitha, தமிழில் கையெழுத்து இடும்போது ஜெ. ஜெயலலிதா என்று தான் எழுதுகிறார். எனவே வக்கிபீடியாவிலும் அப்படி இருப்பதே கட்டுரைப் பெயரிடல் மரபு--Ravidreams 13:36, 14 பெப்ரவரி 2007 (UTC)

ஜெயலலிதாவே அப்படி கையெழுத்திட்டால், ஜெ. இருந்துவிட்டுப் போகட்டும். தமிழ்பற்று மிளிர்கிரது.. இப்படித்தான் எம். பக்தவத்சலம் பற்றி தேடினேன். இப்பக்கத்தில் [1] கடைசியாக "அவர்களின் தமிழ்த் தொண்டும், சைவத் தொண்டும் பன்னெடுங் காலம் வாழ வேண்டும் " எம்.பக்தவத்சலம் என்று கையெழுத்துள்ளது. அவருக்கு விபரீதலட்சணை கொஞ்சம் கூட இல்லை. தமிழ்நாட்டில்தான் தமிழ்தொண்டு என பேசிவிட்டு, தமிழ் பெயரை எழுதாத வேடிக்கை நடக்கும்.--விஜயராகவன் 14:34, 14 பெப்ரவரி 2007 (UTC)

விபரீதலட்சணை என்றால் என்ன? --Ravidreams 16:35, 14 பெப்ரவரி 2007 (UTC)

// தமிழ்பற்று மிளிர்கிரது.. // //அவருக்கு விபரீதலட்சணை கொஞ்சம் கூட இல்லை. // போன்ற தனிநபர் விமர்சனங்களை தவிர்ப்பது தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு நல்லது என வேண்டுகிறேன். நன்றி--Ravidreams 16:46, 14 பெப்ரவரி 2007 (UTC).


விபரீதலட்சணை என்றால் sense of Irony, முரண்பாடாக பொருள்தரும் சொல்லாட்சி.

விபரீதலட்சணை (p. 3680) [ viparītalaṭcaṇai ] n viparīta-laṭcaṇai . < id. + lakṣaṇā. Irony, using language hinting at a meaning contrary to the literal sense. See எதிர்மறையிலக்கணை. செவ்வாய்க்கிழமையை மங்கள வாரமென்னுமா போலே விபரீதலட்சணை (திவ். பெரி யாழ். 5. 4, 7, வ்யா.).--விஜயராகவன் 17:08, 14 பெப்ரவரி 2007 (UTC)

விபரீதலட்சணை என்ற சொல்லை இது வரை கேள்விப்பட்டத்தில்லை. தமிழ்ச்சொல்லாகவும் தெரியவில்லை. முரண்நகை என்று ஒரு சொல் தான் தெரியும். அதுவும் இதுவும் ஒரு பொருள் தருவனவா?--Ravidreams 17:48, 14 பெப்ரவரி 2007 (UTC)


ரவி, முரண்நகை செ.ப.த. அகராதியில் இல்லை.ஆனால் இன்று பயன்படுத்தப் படுகிறது. உதாரணமாக அதற்கு ஒரு பொருள் oxymoron http://www.treasurehouseofagathiyar.net/10200/10244.htm. அது பல பொருள் சாய்வுகளில் பயன்படுத்தப் படுகிறது. அதில் ஒரு சாய்வு - Irony.

முரண்நகையை முரண் + நகை என பிரிக்கலாம். முரண் என்றால் 'எதிர்ப்பு' என பொருள். நகை என்பதற்க்கு அகராதிப் பொருள்கள்

நகை¹ (p. 2127) [ nakai¹ ] n nakai . < நகு. 1. [K. nage.] Laughter, smile; சிரிப்பு. நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக. 1568). 2. [K. nage.] Cheerfulness; மகிழ்ச்சி. இன்னகை யாயமொ டிருந்தோற் குறுகி (சிறுபாண். 22). 3. [K. nage.] Delight, gratification, pleasure, joy; இன்பம். இன்னகை மேய (பதிற்றுப். 68, 14). 4. [K. nage.] Contemp tuous laughter, sneer, derision, scorn; அவ மதிப்பு. பெறுபவே . . . பலரா னகை (நாலடி, 377). 5. [K. nage.] Grinning; இளிப்பு. 6. [K. nage.] Pleasantry; பரிகாசம். நகையினும் பொய்யா வாய்மை (பதிற்றுப். 7, 12). 7. [K. nage.] Friendship; நட்பு. பகைநகை நொதும லின்றி (விநாயகபு. நைமி. 25). 8. Pleasant word; நயச்சொல். (திவா.) 9. Play, sport; விளை யாட்டு. நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறள், 871). 1. Flower; மலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13, 59). 11. Blos soming of flowers; பூவின்மலர்ச்சி. நகைத்தாரான் தான்விரும்பு நாடு (பு. வெ. 9, 17). 12. Brightness; splendour; ஒளி. நகைதாழ்பு துயல்வரூஉம் (திருமுரு. 86). 13. Teeth; பல். நிரைமுத் தனைய நகையுங் காணாய் (மணி. 2, 49). 14. The gums; பல்லீறு. (W.) 15. Pearl; முத்து. அங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் கொங்கணி குழலவள் (சீவக. 63). 16. Garland of pearls; முத்தமாலை. செயலமை கோதை நகையொருத்தி (கலித். 92, 33). 17. [T. K. M. Tu. naga.] Jewels; ஆபரணம். Colloq. 18. Resemblance, comparison; ஒப்பு. நகை . . . பிறவும் . . . உவமச்சொல்லே (தண்டி. 33).

18வது அர்த்தம் நமக்கு சரிகட்டும் போல உள்ளது; அதாவது எதிர்ப்பு + resemblance.

சமீபத்தில் ஒரு இலக்கிய வாதத்தில் ஜெயமோகன் இவ்வாறு 'முரண்நகை'யை பயன்படுத்துகிறார்.http://www.maraththadi.com/article.asp?id=1012. "ஏனெனில் இலக்கணம் என்பது சராசரிப் பொதுமொழியின் விதிகளால் ஆனது. தொடர்புறுத்தலை புறவயமாக ஆக்கும் நோக்கம் கொண்டது. இலக்கியம் அந்த சராசரிப்பொதுமொழியைத் தாண்டி தொடர்புறுத்த முயல்வது. ஆகவே என்றுமே அது இலக்கணத்தின் எல்லைகளை மீறிச்செல்லும் துடிப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறு மீறாத இலக்கியம் உயிரற்றது. 'இலக்கியம் கண்டதற்கே இலக்கணம்' என்று வகுத்துக் கூறிய ஒரு மொழியில்தான் இந்த குரல் எப்போதும் எழுகிறது என்பது ஒரு முரண்நகை". இதில் முரண்நகை என்பது Irony என்ற அர்த்தத்தில் இருக்கிரது.

அதனால் முரண்நகையும் விபரீதலட்சணையும் ஒரே அர்த்தம் தரலாம் என நினைக்கிறேன்.

(மேலும், மேலிணைப்பில் உள்ள ஜெயமோகனின் மொழிப் பற்றிய கருத்துகளை பாருங்கள்; சுவாரசியமாக உள்ளது).

நான் 'முரண்நகை'யை பயன்படுத்த தயார். அதே சமயம் விபரீதலட்சணை நிச்சயமாக தமிழ்சொல்தான். 'விபரீதம்' கம்பர் பயன்படுத்திய் சொல்.எல்லோருக்கும் தெரிந்த சொல். லட்சணை/லட்சணமும் தெரிந்த சொல். (பட்டிக்காடா, பட்டணமா பாட்டு ஞாபகம் வருதா?). வேண்டுமானால் அகராதியை பாருங்கள்.--விஜயராகவன் 20:21, 14 பெப்ரவரி 2007 (UTC)

கம்பர் பாட்டில் விபரீதம் என்னும் சொல் இருக்கிறதா? ஆச்சர்யமான தகவல் தான். பாடலை மேற்கோள் காட்டினால் நன்றாக இருக்கும். இங்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவன எல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லை. இரண்டு சொற்கள் மக்களால் சரிசமமாக மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில், அதில் நல்ல தமிழ்ச் சொல் எது என்று பார்த்து பயன்படுத்தலாம் தானே? தற்பொழுதைய பொது ஊடகங்களில் பரவலாக ஆங்கிலம் கலக்கப்படுகிறது. 4, 5 நூற்றாண்டுகள் கழித்து வாதாடுபவர்கள் 2000ஆவது ஆண்டு வாக்கில் கம்ப்யூட்டர், பஸ் போன்றவெல்லாம் தமிழ்ச் சொற்களாக இருந்தன. அவற்றை பயன்படுத்தலாம் என்று வாதிடுதல் முறையா? அது போலவே முற்கால இலக்கியங்களிலும் ஜெயகாந்தன் போன்றோரின் தற்கால இலக்கியங்களிலும் பிற மொழிச் சொல் கலப்பு இருக்கத் தான் செய்யும். அதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. துல்லியமான சொல் தேடும் நீங்கள் ஏன் அதை வடமொழிச் சொற்களில் இருந்தே தேடுகிறீர்கள்? பிற மொழி கலக்காத முற்சங்க காலத்து இலக்கியங்களிலிருந்து சொற்கள் தேட முயலலாம். இல்லை, சரியான சொல் இல்லாத போது வேர்ச்சொல்லில் இருந்து புதுச் சொல் ஆக்க முயலலாம். திசைச் சொற்களை ஏற்பது குறித்து தமிழில் இலக்கணமே இருக்கிறதென்றால் அது குறித்து ஒரு ஒழுங்குடன் செயல்பட வேண்டும் என்று பொருள் தானே? ஆங்கிலம் போல் எங்கிருந்து வேண்டுமானாலும் சொற்களை எடுத்துக் கொள்ளலாம் என்றால் பிறகு இலக்கணம் எதற்கு? கலைக்களஞ்சியம் இன்றுள்ளவர் தவிர நூற்றாண்டுகள் கழித்தும் வாசிக்கப்படும் வாய்ப்பு உண்டு. அனைவருக்கும் எக்காலத்திலும் புரியும் நற்றமிழில் எழுதுவது தான் நன்றாக இருக்கும். இன்றைய ஊடகப் போக்குக்கு எழுதுவது எல்லா இடங்களிலும் சரியாக இருக்காது.. --Ravidreams 03:29, 15 பெப்ரவரி 2007 (UTC)


ரவி, விபரீதம் தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம், பிங்களம், திருவாய்மொழி, அகவல், வேதாந்த சூத்திரம் போன்ற இலக்கியங்களில் வருகிரது [2]. அதனால்தான் தமிழ் கூகிளில் போட்டால், 1000 பக்கங்கள் வரலாம். பழந்தமிழில் அது 'முரண்' என்ற பொருளில் வருகிரது, தற்கால செய்திகளில் வேண்டாத சம்பவம், traffic accident போன்ற பொருளில்.

விபரீதம் (p. 3680) [ viparītam ] n viparītam . < vi-parīta. 1. Discordance; contrariety; perversity; மாறுபாடு. (பிங்.) விபரீதம் புணர்த்துவிட்டீர். (கம்பரா. மாயாசன. 2). 2. Unfavourableness; பிரதிகூலம். நின் செய்ய வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள் (திவ். திருவாய். 6, 2, 3). (இலக். அக.) 3. Strangeness, uncommonness; அதிசயம். (திவா.). 4. See விபரீதஞானம். சீவபாவமுண்டெனல் விபரீதமாம் (வேதா. சூ. 129). 5. cf. a-parimita. Excessiveness; மிகுதி. (அரு. நி.).


"இரண்டு சொற்கள் மக்களால் சரிசமமாக மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில், அதில் நல்ல தமிழ்ச் சொல் எது என்று பார்த்து பயன்படுத்தலாம் தானே?"

இதற்கு நான்கு ஆட்சேபணைகள் . ஒன்று "நல்ல தமிழ்ச் சொல் எது" என்பது கண்டுபிடிப்பது. பரவான சொல்லாட்சி நல்ல தமிழா? தமிழிலக்கியத்தில் இருப்பது நல்ல தமிழா? பி.பி.சி.யில் பயனாகும் தமிழ் நல்லதா?அல்லது தினத்தந்தி தமிழா? அல்லது கூகிளில் அதிகமாக பலன் கொடுப்பதா? திண்ணையில் இருக்கும் தமிழா? இலங்கை அரசு உபயோகிக்கும் தமிழா? காலேஜ் மாணவர்கள் தமிழா? சென்னை தமிழா? அல்லது அகராதிகளில் வரும் தமிழா?அகராதிகளில் இல்லாத தமிழை நாம் முழுக்க புறக்கணிப்பது உசிதமா? இரண்டாவது ஆட்சேபணை இதனால் நாம் கட்டுரை சம்பந்தமான ஆராய்ச்சிகளையும், முயற்சிகளையும் விட்டு, மொழி சம்பந்தமான ஆராய்ச்சிகளிளும், வேண்டாத சர்ச்சைகளிலும் நேரத்தை வீண்படுத்துவோம். அதனால் சராசரி கட்டுரை ஆசிரியன் குறுகிய காலத்தில் புரியும் சொற்களையும், நடைமுறையையும் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுத வேண்டும். அதற்கு மொழி சர்ச்சைகளை தவிற்க வேண்டும். நான்காவது, நீங்களே "மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில்" என்று சொல்லுகிறீர்களே, அதற்கு மேல் என்ன விவாதம் வேண்டியிருக்கு? படிப்பவர் புரிந்து கொள்வதுதான் கடைசி அளவுகோல், ultimate arbiter.--விஜயராகவன் 10:03, 15 பெப்ரவரி 2007 (UTC)

ஜெ - ஆங்கிலம்; அதை தவிர்த்து தமிழை ஆங்கிலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் சாதிக்குப் பதில் ஜாதி சரி என்கிறீர்கள்? ஏன், அகராதிகளில் உள்ள பிறமொழிச்சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள்? J என்பது எளிதாக அறியக் கூடிய ஆங்கில எழுத்து; அதனால் அதை தவிர்க்கலாம் என்கிறீர்களா? அப்ப, அறிய கடினமாக இருக்கும் சொற்களை ஆராயாமல் ஏற்றுக் கொள்வது நம் சோம்பல் தானே? கடந்த இரண்டு ஆண்டு அனுபவத்தில், தமிழ் விக்கிபீடியாவின் மொழிக் கொள்கை என்றுமே கட்டுரை ஆசிரியருக்கு ஊக்கத்துக்கு தடை போட்டதாக இல்லை. நற்றமிழில் எழுது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரவருக்கு எவ்வளவு இயலுமோ அவ்வளவே எழுதச் சொல்கிறோம். அதே வேளை உங்கள் கட்டுரைகளில் பிறர் நற்றமிழ் மாற்றங்களை புகுத்துவார்கள் எனில் அதில் அவர்கள் ஆர்வம், முனைப்பு. அதை கொள்கை ரீதியாக தடை செய்வதற்கு ஒன்றுமில்லை. இருக்கிற தமிழ்ச் சொல்லை எல்லாம் நீக்கி விட்டு பிற மொழிச்சொல்லை புகுத்துவது தான் மறுப்புக்குரியது. -Ravidreams 10:43, 15 பெப்ரவரி 2007 (UTC)

"ஜெ - ஆங்கிலம்; அதை தவிர்த்து தமிழை ஆங்கிலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் சாதிக்குப் பதில் ஜாதி சரி என்கிறீர்கள்?" ரவி, இந்த இரண்டு பிரச்சினைகளும் தனி. ஜெ.ஜயலலிதா, எம்.ஜி.ஆர், சி.வி.ராமன், சி.என். அண்ணாதுரை இவற்றில் நாம் ஆங்கில எழுத்தை அப்படியே தமிழில் எழுதுகிறோம். மக்கள் அப்ப்படி சொல்லிவந்தாலும், அது அவர்கள் பெயர் அல்ல. சி.என். அண்ணாதுரையின் அதிகாரபூர்வமான பெயர் காஞ்சி நடராஜன் அண்ணாதுரை. அதனால் தலைப்பில் அவர் பெயர் க.ந.அண்ணாதுரை என்றிருக்க வேண்டும். தமிழில் சி.என். என படிப்பது பொருளற்றது. எம்.ஜி.ஆர்.உம், தமிழ் கட்டுரை தலைப்பில் ம.கோ.இராமச்சந்திரன். 'ஜெ.ஜயலலிதா' ஆங்கில Jவை குறிக்கிரது. சி.வி.ராமன் ச.வெ.இராமன் என்றிருக்கவேண்டும் எனெனில் அவர் பெயரை தமிழில் எழுதினால் சந்திரசேகர வெங்கட ராமன் ஆகும். ஆங்கில பதங்களை, பெயரில் முன்னால் போடுவது ஆங்கில மோகமே.


ஜெ.ஜயலலிதாவைப் பற்றி சிந்திக்கும் போது, என் எண்ணம் மாறுகிரது. ஏனெனில் ஜெ.ஜெயலலிதாவை ஜெயராமன் ஜயலலிதா என்று எடுத்துக் கொள்ளலாம். அதனால் ஜயலலிதா பற்றி எழுதியதை வாபஸ் வாங்குகிரேன். நீங்கள் இப்படிப்பட்ட படிப்பை சொல்லியிருந்தால், நான் எப்போதோ திருப்தி அடைந்திருப்பேன்.


ஜாதி என்பது தமிழ்சொல். தமிழ் அகராதிகளில் போட்டு பாருங்கள்.[3] . தற்கால தமிழிலக்கியமும் 'ஜாதி'யை பயன்படுத்துகிரது. [4]--விஜயராகவன் 11:26, 15 பெப்ரவரி 2007 (UTC)

நியமம் எதிர் சீர்தரம்

தொகு

சொல் தேர்வு

தொகு

நியமம் என்பது சீர்தரம் என்று மாற்றப் பட்டிருப்பது அவசியமா? --Jeyapal 19:40, 9 பெப்ரவரி 2007 (UTC)

ஆம், தேவை என்பதாலேயே மாற்றினேன். நியமம் என்பது தமிழ்ச்சொல் இல்லை. கூடியமட்டிலும், நல்ல தமிழ்ச்சொற்களை ஆளுவது நல்லது. ஒரு தமிழ்ச்சொல் மற்றொரு தமிழ்ச்சொல்லுக்கு வலு சேர்க்கும். தமிழ்ச்சொல்லை ஆள வேண்டிய இடத்தில் வேற்றுமொழிச் சொல்லை ஆண்டால், தமிழ்ச்சொல்லுக்கான நேர்மையான வாய்ப்பு பறிக்கப்படுகின்றது. நாமே தமிழ்ச் சொல்லை ஆளவில்லை என்றால் யார்தான் தமிழ்ச்சொற்களை ஆளுவர்?--செல்வா 21:02, 9 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, எப்படி நியமம் தமிழ்ச்சொல் இல்லை எனலாம். நியமம் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திவாகரம், பிங்களம், தேவாரம், மதுரைக்கல்ம்பகம் என்று 2000 ஆயிரம் வருடங்களாக தமிழிலக்கியத்தில் வருகிரது. இது நியாயமில்லை. நியமம், நியமங்கள் என்று தேடினால் கூகிளில் 800 பக்கங்களுக்கு மேல் கிடைக்கிரது.--விஜயராகவன் 00:50, 16 பெப்ரவரி 2007 (UTC)
தரம் என்னும் சொல்லை கூகிளில் தேடினால் 39,400 பக்கங்கள் தருகின்றது. கூகிள் தேடல்கள் முடிவெடுக்கப் பயன்படாது. ஒரு சொல் தமிழ்ச்சொல்லா இல்லையா என்று அறிய, சொல்லின் வேர் என்ன, இனமான சொற்கள் எவை எப்படி பல்கிக் கிளைத்தன என அறிய வேண்டும். இதன் அடிப்படையில் தமிழ்ச்சொற்கள் யாவை என அறியலாம். பல்வேறு காலகட்டங்களிலே பல்வேறு கரணியங்களுக்காக பல சொற்கள் (தமிழ்ச்சொல்லும் பிறமொழிச் சொல்லும்) வழக்கூன்றக் கூடும், வழக்கொழியவும் கூடும். நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் அதனால் விளையும் நன்மைகள் மிகப்பல. ஒரு சொல் பிரிதொரு சொல்லுக்கு வலு சேர்க்கின்றது. இதனை ஒருவகையான மொழியின் உட் கூட்டுயிர்ப்பு எனலாம். கூடியமட்டிலும் நல்ல தமிழ்ச் சொற்களை ஆளுவது பயன் பெருக்குவது. சம்ஸ்கிருத சொற்களை ஆள சமஸ்கிருத விக்கி உள்ளது. தமிழ்ச் சொற்களை விலக்கி பிறமொழிச் சொற்களை ஆண்டால் தமிழ் மொழியின் உள் இணைப்புகள் அறுகின்றன, வளமும் செழிப்பும் குன்றுகின்றது, சமஸ்கிருதத்தை விரும்புபவன் நான். ஆனால் சமஸ்கிருத வன் திணிப்பை எதிர்ப்பவன், ஏனெனில் அதனால் ஒரு மொழியின் வளர்ச்சி தடைபடுகின்றது. எடுத்துக்காட்டாக நமஸ்காரம் என்னும் சொல்லை ஆளுவதை விட வணக்கம் என்று சொல்வது நல்லது (தமிழில்). பொதுவாக ஒரு மொழியில் இருந்து வேறு ஒரு மொழிக்குச் செல்லும் சொற்கள் வினைச்சொல்லாக மாறாது, ஆனால் தமிழின் வளமையால் எச்சொல்லையும் எப்படியும் ஆக்க முடியும். எனவே எனவே நமஸ்காரம் என்பது நமஸ்கரி, நமஸ்கரித்தான் என்று கூட சொல்ல இயலுகின்றது. என்றாலும் வணக்கம் என்னும் சொல், வணங்கு, வணங்கினான், வணக்கம், வணங்காமுடி, வணங்காத்தலை, வணங்கி ஒரு வேலையைச் செய்யமாட்டான், வணக்கம் இல்லாதவன், வணக்கு, வணக்குதல் ( = வளைத்தல்), யானைவணக்கி (யானைப் பாகன், தோட்டி, யானையை வழிக்குக் கொண்டுவருபவன்) என பலவகையாக வளர்ச்சியுறும். தமிழ்ச் சொல்லாய் இருப்பின் பிறசொற்களோடு இயல்பாய் சேர்ந்து பொருள் பெருக்கும் கிளைக்கும். மொழியின் இயல்பான செழிப்பான வளர்ச்சி கருதியே நல்ல தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்கிறேன். இதுபற்றி மிக விரிவாக எழுத உள்ளது ஆனால் இதுவல்ல இடம்.--செல்வா 01:58, 16 பெப்ரவரி 2007 (UTC)
"கூகிள் தேடல்கள் முடிவெடுக்கப் பயன்படாது". கூகிள் தேடல்கள் புறவயமாக ஒரு சொல் பழக்கத்திலிருக்கிறதா, இல்லையா, எந்த அளவு புழக்கத்திலிருக்கிறது என தீர்மானிக்க உதவும். மேலும், துரிதமாக ஒரளவு இலக்கிய தேடல்களுக்கும், முக்கியமாக சாதாரண மனிதர்களிடையே எவ்வ்ளவு புழக்கம் என சொல்லவும் , கூகிள் நிச்சயமான உதவி. நாம் கூகிளின் உதவியை நாடாவிட்டால், சொல்லின் புழக்கம் என்ன என்பதை புறமயமாக எடை போட முடியாது; அது தனி நபரின் அபிப்பிராயங்களையும், உணர்ச்சிகளையும் தாண்டி எடை போட முடிகிரது. நான் சொற்தேற்வு கூகிள் மேல் இருக்கணும் என்று சொல்லவில்லை. அது ஒரு சொல்லின் புழக்க விஸ்தீரணம் என்ற கேள்வியில், உணர்ச்சிகளை தாண்டி போக உதவுகிரது.--விஜயராகவன் 16:01, 16 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, இத்தனை நாள் நியமம் தமிழ்ச் சொல் என்று யோசித்துப் பார்த்ததில்லை. இப்போது யோசிக்கையில் நீங்கள் சொல்வது சரி என்று புரிகிறது. இது போல் எண்ணற்ற சொற்கள் தமிழ் என்றே நினைக்கப்பட்டும் யோசித்துப் பார்த்தாலும் தமிழா என்று அறிய முடியாமல் குழப்பி விடுகின்றன. சில சமயம், தமிழ்ச் சொற்களையும் பிற மொழி என்று ஒதுக்கும் பிழையும் நிகழ்ந்து விடுகிறது. இது போன்ற சொற்களுக்கு அடிச்சொல் அறிந்து பொருள் விளக்குவது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பணிகளையாவது நீங்கள் விக்சனரியில் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.--Ravidreams 21:40, 9 பெப்ரவரி 2007 (UTC)

-- திரு. செல்வா, நல்ல தமிழ்ச் சொற்களை நாம் பாவிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. standard என்பதற்கு ஒரு சாரர் தரம் என்ற பதத்தைப் பாவிக்கிறார்கள். இன்னொரு சாரர் சீர்தரம் என்கிறார்கள். இவை இரண்டுமே அனைவராலும் (ஏதாவது அரசுகளால்) அங்கீகரிக்கப்பட்ட சொற்களா? எனக்குத் தெரியாது. ஆனால் "நியமம்" என்ற சொல் இலங்கையின் அரச பாடவிதானக் குழுவினால் வெளியிடப்பட்ட கலைச்சொல்லகராதியில் தரப்பட்டிருக்கிறது. 1970 களிலிருந்து கல்வி கற்ற அனைவரும் பாவித்த ஒரு சொல் தான் இது. உதரணங்கள்:

நியம வெப்பநிலை - standard temperature நியம அலகு - standard unit

இப்படிப் பல உதாரணங்கள் உண்டு.

ஆக, நியமம் என்ற சொல் இலங்கையில் படித்தவர்களுக்குப் புதிய சொல் அல்ல. இவற்றைத் திருத்தவதிலும் பார்க்க கட்டுரையில் இருக்கும் கருத்துப் பிழைகளைக் களைவது நல்லது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். --Jeyapal 18:23, 12 பெப்ரவரி 2007 (UTC)

ஜெயபால், நியமம் என்ற சொல் தமிழ்நாட்டிலுக் கூடப் புரிந்து கொள்ளத் தக்கது தான். இருப்பினும், தகுந்த இடங்களில் சரியான தமிழ் சொல் இருப்பின் பயன்படுத்துவதென்பதை தமிழ் விக்கிபீடியா வழக்கமாக கொண்டிருக்கிறோம். பார்க்க - Wikipedia பேச்சு:சொல் தேர்வு. அந்த வகையிலேயே இந்த மாற்றங்கள். மேற்கண்ட பக்கத்தில் நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால், தமிழ் விக்கிபீடியா கொள்கைகள் பரிணமிக்க உதவும். மற்றபடி, கருத்துப் பிழைகள், சொற் பிழைகள் திருத்துவது ஆகியவை இயன்ற அளவு செய்யப்பட்டு வருவன தான். நன்றி.--Ravidreams 18:39, 12 பெப்ரவரி 2007 (UTC)

ஜெயபால், தரம், சீர்தரம் ஆகிய இரண்டு சொற்களும் மிக நல்ல சொற்கள்தாம். உண்மையிலேயே நியம வெப்பநிலை என்றால் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. நியமம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லும் இல்லை, நியமனம், நியமித்தல் முதலிய சொற்களோடு குழப்பம் ஏற்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. நல்ல தமிழ்ச் சொற்களை நீங்கள் வரவேற்கிறீர்கள் என்பதால், தரம் அல்லது சீர்தரம் என்னும் சொல்லை ஆள வேண்டுகிறேன். தமிழ் வேரிலிருந்து ஆக்கபடும் சொற்கள் நன்றாக கிளைத்துப் பெருகும். பிறமொழிச் சொற்கள் பெரும்பாலும் மண்ணில் இட்ட பிளாஸ்டிக்கு (நெகிழி) போல் தனித்தே இருக்கும். அரசு ஏற்பு (அங்கீகாரம்) என்பது எல்லாச் சொற்களுக்கும் ஒத்து வராது. பல அரசுகள் இருப்பதும் குழப்பம் ஏற்படுத்தும். எனவே நல்ல சொற்களை நாம் இங்கே எடுத்து ஆண்டால் பொதுமக்களும், அரசுகளும் கூட ஏற்றுப் பயன் பெறுவர். ஒரு கலைக் களஞ்சியக் கட்டுரை என்பதே ஒரு வடிவான வரைவிலக்கணம் போன்ற சீர்தரம் தரும் எழுத்து ஆகும். நல்ல சொற்களும் நல்ல சொல்லாட்சியும், நல்ல மொழிநடையும் மிகவும் அடிப்படையான தேவை. எனவே அருள்கூர்ந்து மாற்றி எழுதியதன் உட்கருத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 19:03, 12 பெப்ரவரி 2007 (UTC)


ரவி, செல்வா, ரவி காட்டிய சுட்டியைப் பார்த்தேன். ஒன்றும் புதிதல்ல. இது போன்ற வாதங்களில் தமிழ்நெட் காலத்திலிருந்து பல தடவை பங்கெடுத்திருக்கிறேன். இருந்தும், என் நிலை வேறு. தூய தமிழ் தேடிப் பிடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை (பார்க்க : http://kandjey.tripod.com/). அது என் தனிப்பட்ட விருப்பு. ஆனால் தமிழுக்கென்று ஒரு கலைச் சொல்லகராதி (அதுவும் தொழில் நுட்பச் சொற்களுக்கு) வேண்டும். அதுவும், தமிழ் மொழிமூலம் கல்வி கற்பிக்கும் நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அகராதி உருப் பெற வேண்டும். அதன் பின்னர் எல்லோரும் அதைத் தாயகரதியாகக் கருதிப் பிள்ளைகளைக் கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நன் பல தடவை முன் வைத்திருக்கிறேன். இது அவசியம் என்பது என் கருத்து. இதை நிறைவேற்ற இப்பொழுது அதிகபட்ச அதிகாரம் உள்ள அரசு தமிழகம் தான். ஆக தமிழகம் முன் வரவேண்டும். தமிழனுக்குத் தனியரசு வரும் போது இப்படி ஒரு நிலைக்கே இடம் வர மாட்டாது. இங்கே நேரத்தைச் செலவிடும் உங்கள் எல்லோருக்கும் தமிழின் ஏற்றம் என்ற உன்னத நோக்கம் இருப்பதை நான் உணர்த்திருக்கிறேன். உங்கள் மாற்றங்களை நீங்கள் தாராளமாகச் செய்யுங்கள். --Jeyapal 20:21, 12 பெப்ரவரி 2007 (UTC)

ஜெயபால், தமிழக அரசு இந்த வேலையை எப்படி செய்யும், என்று செய்யும் என்று சொல்வதற்கில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட பல அரசுக் கலைச்சொல்லாக்கங்களும் புத்தக அலமாரிகளில் உறங்கிக் கிடக்கின்றன. உங்களை போன்று அனுபவமும் ஆர்வமும் உள்ளவர்கள் தமிழ் விக்சனரி தளத்துக்கு வந்து எங்களை போன்று புதியவர்களை ஆற்றுப்படுத்தலாம் என்பதை மட்டும் வேண்டுகோளாக வைக்கிறேன். நன்றி--Ravidreams 20:59, 12 பெப்ரவரி 2007 (UTC)


தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது தொடர்பில் செல்வா இங்கே எழுதியிருப்பவற்றுடன் நான் முற்றாக உடன்படுகின்றேன். கட்டுரை எழுதும்போது சரியான தமிழ்ச் சொல் தெரியாத போது சிந்தனையோட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சில சமயங்களில் பிறமொழிச் சொற்களைக் கையாள்வதுண்டு ஆனால் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது மிகமிக இன்றியமையாதது. தமிழ்ச் சொற்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் தேவையானது. இந்த விடயத்தில் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது நல்லதாகத் தெரியவில்லை. அண்மையில் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களுக்காக வெளிவரும் பெண்களுக்கான செல்வாக்குள்ள சஞ்சிகையொன்றைப் பார்க்க நேரிட்டது. பலவகையான பருப்பு மசியல்கள் என்று பெயரிட்டு அந்த இதழ் வெளியிட்ட இணைப்பில் பலவகை மசியல்களின் பெயர்களைத் தமிழில் எழுதியுள்ளார்கள் அவற்றுட் சில:
  • கோகனட் தால்
  • மிக்ஸ்டு வெஜிடபிள் தால்
  • பாலக்-குடமிளகாய் தால்
  • ஆல் இன் ஒன் தால்
  • ஈசி தால்
  • தால் ஃபிரை
  • பஞ்சாபி சன்னா மசாலா
மக்கள் பேச்சுவழக்கில் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையாக இருப்பினும் செல்வாக்குள்ள இதழ்கள் இவ்வாறான சொற்களைப் பரவலாக்க உதவுவதைப் பொறுப்பின்மை என்பதைத் தவிர வேறு சொற்களால் விளக்கலாம் போல் எனக்குத் தெரியவில்லை. இவ்விடயத்தில் இறுக்கமான கொள்கைகளைக் கொண்டிராவிட்டால் இம்மாதிரியான போக்குகளைத் தவிர்க்க முடியாது. விக்கிபீடியா போன்ற ஊடகங்கள் தமிழில் அறிவைப் பரவலாக்குவதை முக்கிய நோக்காகக் கொண்டிருந்தாலும் முறையான தமிழ் வளர்ச்சியும் இத்துடன் பின்னிப் பிணைந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். விக்கிபீடியாவும் முன் குறிப்பிட்ட சஞ்சிகைகளைப் போலவே பரந்த செல்வாக்குப் பெறுவதற்குரிய வாய்ப்புக் கொண்ட ஒரு ஊடகம். எனவே இது தொடர்பில் நாம் அசட்டையாக இருக்கக்கூடாது. முறையான தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பில் முன்னணிப் பங்கு வகிப்பதற்காக முறையில் விக்கிபீடியாவை நாம் உருவாக்குவது அவசியம்.
ஜெயபால் குறிப்பிட்டிருப்பதுபோல ஒரு விரிவான கலைச்சொல் தொகுப்பு ஒன்று இன்று தமிழுக்கு மிகமிக அவசியமாகத் தேவைப்படுகிறது. இது தொடர்பில் பலர் தனித்தனியான முயற்சிகளைச் செய்து வந்தாலும் ஒருங்கிணைக்கப்பட்ட, விரிவான நோக்கங்களைக் கொண்ட ஒரு முயற்சி இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டும். விக்சனரி இதற்கான நல்ல களமாகச் செயற்பட முடியும் என்பதைப் பலகாலமாகவே நான் சொல்லிவந்திருக்கிறேன். ஆனாலும் விக்சனரிக்கு ஒரு முறையான, முழுமையான கொள்கையொன்றை உருவாக்கவேண்டிய தேவை இருக்கிறது. இக்கொள்கை, பக்கங்களின் வடிவமைப்பு, அவற்றின் உள்ளடக்கம், சொல்லாக்கங்களுக்கான அடிப்படைகள், பல் வேறுபட்ட கருத்துவேறுபாடுகளைக் கையாள்வதற்கான நடைமுறைகள், வட்டார வழக்குகளைக் கையாள்வதற்கும் அவற்றை ஒருங்கிணைப்பதற்குமான வழிமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும். விக்கிபீடியா ஓரளவுக்கு ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றங்களுக்கான ஒரு களமாக உருவாகி வருகிறது. விக்சனரியில் இந்நிலை இன்னும் ஏற்படவில்லை. இன்றைய நிலையில் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் கலைச்சொல் அகராதி ஓரளவு ஒரு தீர்வாக இருந்தபோதிலும் அதிலே பல பிரச்சினைகள் உள்ளன. அதனைப் பயன்படுத்துவது சற்றுக் கடினமானது. இப்பொழுது சில வாரங்களாக அத் தளத்தை அணுக முடியாமலும் உள்ளது. தற்போதைக்கு இதற்கு ஒரு மாற்றாகவேனும் இன்னொரு தளம் கிடையாது. நிச்சயமாக, விக்சனரியை தமிழர்களில் கலைச்சொல் தேவை உட்படத் தற்காலத்துக்கு ஏற்ற சொல் தேவைகளுக்கான ஒரு களமாக வளர்த்தெடுக்க முடியும். ஆர்வமுள்ள அனைவரும் இதில் ஈடுபட வேண்டும். அரசுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வேறு பல நோக்கங்கள் இருக்கின்றன. அவை இத்தகைய வேலகளில் ஈடுபட நினைத்தாலும் நோக்கங்கள் திசை மாறுவதும் தடம்புரள்வதும் வழக்கமாக நிகழ்வது. உண்மையில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்களின் ஆற்றலில் ஒருங்கிணைப்பு இத் தேவையை நிறைவேற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 05:52, 16 பெப்ரவரி 2007 (UTC).
வட இந்திய சமையலில் நீங்கள் எழுதியது போல் வகைகள் இருக்கின்றன. நீங்கள் படித்த சஞ்சிகை வட இந்திய சாப்பாடுகளைப் பற்றி விவரித்தால், அவர்கள் கொடுத்த பெயரில் தப்பில்லை. அது தமிழ்நாட்டு சாப்பாட்டுகளுக்கு ஹிந்தி பெய்ரகள் கொடுத்தால், அது கண்டனத்திற்க்குறியது. இங்கிலாந்தில் Tesco போன்ற பெரிய சூபர்மார்க்கெடுகளில், 'திடீல் சாம்பார்' என விற்ப்பனையாகிரது. அதை ஆங்கிலத்தில் Shambar என எழுதி, ஒரு விதமான தெற்க்கிந்திய lentil soup என எழுதியிருந்தனர். அதை நான் கண்டித்து எழுதினேன்னேனெனில் ஆங்லத்தில் sambar என்று சொன்னல்தான், 'சாம்பாரு'க்கு அருகே ஒலி வரும். மேலும், சாம்பார் வேற, சூப் வேற சாப்பிடும் முறையில்.--விஜயராகவன் 16:28, 16 பெப்ரவரி 2007 (UTC)

நாத்திகம்

தொகு

கடவுள் நம்பிக்கையற்ற என்ற முன் தொடர் நாத்திகம் என்னும் சொல்லுக்கு முன் வருவது நல்லது. இது தேவை. நாத்திகம் என்னும் சொல்லுக்கு ஒரு சிறு விளக்க, முன்னுரை போல் இருப்பதால் பயன் குன்றாது. சில இடங்களில் இப்படி எழுதுவது வேற்கத்தக்க மரபு. நாத்திகம் என்பது நா+ அஸ்தி = நாஸ்தி என்பதில் இருந்து பிறந்தது. அஸ்தி என்றால் உள்ளது, நாஸ்தி என்றால் ஒன்றானது இல்லை என்னும் பொருள். கடவுள் இல்லை என்னும் பொருள் மரபாகப் பெற்றது (எல்லா இடத்திலும் இப்பொருள் செல்லாது). நாஸ்தி >நாஸ்திகம் > நாத்திகம். கடவுள் நம்பிக்கையற்ற என்னும் முன் அடைமொழி இருப்பது நல்லது.--செல்வா 15:30, 15 பெப்ரவரி 2007 (UTC)

நாம் மிகைச் சொற்களை தவிற்க வேண்டும். நாத்திகம் பக்கத்திற்க்கு போனால் அதையே திருப்பி சொல்கிறது. நாத்திகத்தின் பொருளே அதுதானே !! சொல் சிக்கனத்தை கடைபிடிப்பது விகிக்கு உகந்தது.--விஜயராகவன் 15:36, 15 பெப்ரவரி 2007 (UTC)
விஜயராகவன், அவை பொருள் உணர்த்தும் முன் அடைமொழி, மிகைச் சொற்கள் அல்ல. நாத்திகம் என்னும் கட்டுரை விரிவாக கருத்தும் வரலாறும் கூறவல்லது. நாத்திகத்தின் பொருள் எல்லா இடத்திலும் அதுவல்ல. இங்கு கடவுள் நம்பிக்கை அற்ற என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. மேலும் நாஸ்திகம், நாத்திகம் என்பது 10% மக்களுக்கு வேண்டுமானால் புரியும் (ஓரளவிற்காவது). 90% மக்களுக்கு அந்த அடைமொழி வலு சேர்க்கும். நாத்துகம் என்பதை நீக்கி இறைமறுப்பு என்று எழுதினால் அந்த முன் அடைமொழி தேவை இல்லை. அப்படிச் செய்யலாமா?--செல்வா 15:45, 15 பெப்ரவரி 2007 (UTC)

நாத்திகம் என்பது இறைமறுப்பை விட தெரிந்த சொல். அதன் பொருள் இறைமறுப்பாக இருந்தாலும், பரவலாக நாத்திகம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு 'கலைச்சொல்' ஆகி விட்டது. அதனால்தான் நாத்திகம் என செய்தித்தாளே இருக்கிரது. நாத்திகம் கலைச் சொல், இறைமறுப்பு விளக்கச் சொல்.

அகராதிப் படி

நாத்திகம் (p. 2214) [ nāttikam ] n nāttikam . < nāstika. 1. Atheism; கடவுளில்லை யெனும் மதம். நாத்திகம்பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4, 47). 2. Blasphemy; தெய்வநிந்தனை. நாத்திகச் சொற்கொரு கரிபோ யிழிந் தேனை (காஞ்சிப்பு. கழுவா. 28).

அதே அகராதியில் இறைமறுப்புக்கு பதில் இல்லை.--விஜயராகவன் 16:04, 15 பெப்ரவரி 2007 (UTC)

கூகிளில் போட்டால் நாத்திகம் - 1860 பக்கங்கள், இறைமறுப்பு 32 ப. --விஜயராகவன் 16:11, 15 பெப்ரவரி 2007 (UTC)

(1) கூகிள் தேடலின் விடைகள் விக்கிக்கு முக்கியமில்லை. இதுபற்றி பயனர் சுந்தர் ஓரிடத்தில், ஆங்கில விக்கியின் கொள்கை உரையாடலில் இருந்து எடுத்தெழுதினார். எனவே கூகிள் தேடல் விடைகளை ஒரு வலுசேர்க்கும் கருத்தாக வைக்காதீர்கள் (2) தமிழ்மொழி வாழும் மொழி. செத்த மொழி இல்லை. புதுச் சொற்கள் வந்து கொண்டே இருக்கும். பழைய சொற்கள் சில வழக்கற்றுக்கொண்டே இருக்கும். இன்று வழங்கும் பல்லாயிரக்கணக்கான சொற்களானவை நீங்கள் காட்டும் பழம் அகராதியில் காணவியலாது. அண்மைக் காலத்தில் க்ரியா என்னும் ஒரு புது அகராதி வெளி வந்தது, அதில் வழக்கில் உள்ள ஏராளமான சொற்கள் விடுபட்டு இருந்தன. Tamil Lexicon ஓர் அரிய படைப்பு என்பதை யாரும் மறுக்க இயலாது, ஆனால் அதில் ஏராளமான குறைகள் இருப்பது பற்றி தேவநேயப் பாவாணர் போன்ற பேரறிஞர்கள் எழுதியுள்ளனர். மேலும் அது பழைய அகராதி, வழக்கில் உள்ள பல சொற்கள் அதில் இல்லாதது வியப்பில்லை. அதில் தேடுவது மிகவும் நல்லது, ஆனால் அதில் உள்ளதால் பயன்படுத்த வேண்டும் என்பதில் வலு இல்லை. அகரமுதலிக் கலையில் பல செல்லாச் சொற்களும், வரலாற்று நோக்கில் சேர்ப்பது உண்டு. --செல்வா 16:59, 15 பெப்ரவரி 2007 (UTC) ஒரு சோதனைக்காக "கடவுள் மறுப்பு" என கூகிளில் இட்டுத் தேடினால் இன்று 1320 பக்கங்கள் சுட்டுகின்றது. கூகிள் தேடலின் விடைகள் ஒரு சொல்லின் தேர்வுக்கு வலு சேர்பதல்ல.--செல்வா 17:05, 15 பெப்ரவரி 2007 (UTC)

கடவுள் மறுப்பும் விளக்கச் சொல்தான். எவ்வளவோ விளக்கச் சொற்களை சாதுர்யமாக அமைக்கலாம். ஆனால் மாணிக்கவாசகர் காலத்திலிருந்து (அதற்கு முன்னாடியும் இருக்கலாம்) பயனாகும் சொல் நாத்திகம். ஆங்கிலத்தில் atheism என்றழைக்கிறோம். அது கிரேக்க வேர், ஆனாலும் ஆங்லேய வேரில்லை என யாரும் சொல்லி மற்ற கலைச் சொற்க்களை கண்டுபிடிப்பதில்லை.

செ.ப.அ. . ஒவ்வொரு தெரிந்த தமிழ் சொல்லுக்கும், தமிழர்களால் ஆளப்பட்ட சொல்லும் தற்காலத்திலேயும், எல்லா தமிழ் இலக்கியத்திலும் எப்படி பொருளாகிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தை உள்ளது. அந்த வேலையை அது பிராமாதமாக செய்கிரது. அதற்கு நிகர் இதுவரை வேறொரு அகராதியும் தமிழில் இல்லை. இதுவரை அதன் கோட்பாடுகளை கொடுத்ததை மறுக்கமுடியாது. உதாரணமாக 'நாத்திகம்' திருவாசகத்தில் பயனாகிரது என சொல்கிறது; அதை மறுக்கப் போகிறீர்களா? பொதுவாக அறியும் அர்த்ததை (கடவுள் இல்லை என) கொடுக்கிரது, அதை மறுக்கிறீர்களா? தேவநேய பாவாணரை சுட்டிக் காட்டி அதையெல்லம் மறுக்கப் போகிறீர்களா? உங்கள் நோக்கம் புரியவில்லை.

நாம் பொதுவான அகராதியை நம்பாவிட்டால் - அதுவும் தக்க காரணமின்றி - , பொதுவாக தெரியும் சொற்களுக்கு அது தரும் பொருள்களை புறக்கணித்தால், பொது சம்மதம் இல்லாமல் சுய வெறுப்பு/விறுப்பு படி தன்னிச்சையாக எழுதுவோம்..--விஜயராகவன் 17:34, 15 பெப்ரவரி 2007 (UTC)

விஜய், சொல்புழக்கத்தில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நல்ல வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட புதிய சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. மாணிக்கவாசகரும் தொல்காப்பியரும் பின்னர் வந்தோரும் பயன்படுத்தியிருந்தாலும் ஒரு கலைக்களஞ்சியத்தில் நல்ல தமிழ்வேர்ச்சொற்களைப் பயன்படுத்துவதால் நல்லதுதானே? (பொதுவழக்கு மற்றும் பழைய அகராதியில் உள்ள சொற்களையும் மாற்றுச் சொற்களாகத் தரலாம்). சில பொதுப்பயன்பாட்டுச் சொற்கள் முதன்மையாக வடமொழியிலும் தமிழ்வேர்ச்சொற்கள் அடைப்புக்குறிக்குள்ளும் தரப்பட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இது தொடர்பான நமது பழைய உரையாடலை ஒருமுறை பாருங்கள். -- Sundar \பேச்சு 17:45, 15 பெப்ரவரி 2007 (UTC)
நீங்கள் ஏற்கெனவு அங்கு உங்கள் கருத்தைப் பதிந்துள்ளதை இப்போதுதான் பார்த்தேன்ன். தவறாகக் கொள்ள வேண்டாம். -- Sundar \பேச்சு 17:53, 15 பெப்ரவரி 2007 (UTC)


ஏன் விஜயராகவன், தேவை இல்லாத கருத்துக்களை இங்கே இடுகிறீர்கள்? நான் நாத்திகம் வேண்டாம் என்றா சொன்னேன்? எங்கே என்று காட்டுங்கள்! முன் அடைமொழி தேவை என்று மீண்டும் இட்டேன். நாத்திகம் என்னும் சொல்லை நீக்கவில்லை. தமிழில் எல்லாச் சொற்களும் ஒருவகையான விளக்கச்சொற்கள்தாம். சில நுட்பமாய்ச் சுட்டும் சில சற்று விளக்கமாய்ச் சுட்டும். அவ்வளவே. இது பிறமொழிகளுக்கும் சற்றேறக் குறையப் பொருந்தும். நாத்திகம், இறைமறுப்பு ஆகிய இரண்டும் போதிய அளவு சுருகமான சொற்கள்தாம். நாத்திகம் என்பதைக் காட்டிலும், இறைமறுப்பு (இறைமறுப்பர், இறைமறுப்பி = நாத்திகர்) என்பது இன்னும் தெளிவான சொல் (மிகப் பலருக்கும்) என்பது என் துணிபு. கட்டுரை ஆக்கத்தில் நேரத்தை செலவிடுவது நல்லது. இத்தகு உரையாடல்களைத் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து. நான் முதலில் தலையிட வேண்டாம் என எண்ணித்தான் ஒதுங்கியே இருந்தேன். வளம் பெருக்குமாறு பணியாற்றுவது நல்லது. நான் எல்லாவற்றுக்கும் மறுமொழி தருவேன் என சொல்ல இயலாது. எனவே மறுமொழி தராவிடால் தவறாக எண்ணாதீர்கள். உங்கள் வரவு நல்ல ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுமாறு அமைய வேண்டுகிறேன்.--செல்வா 18:05, 15 பெப்ரவரி 2007 (UTC)

சொற்களை ஆளும் முறை

தொகு

விஜயராகவன், பொதுவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். நேரடியாக அகராதியில் இருந்து புழக்கத்தில் இல்லாத தமிழா என்று உறுதிப்படுத்திக்கொள்ள இயலாத சொற்களை ஆள்வதை விடுத்து இது குறித்து ஏற்கனவே தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள் உங்களிடம் இருந்தால் அதில் இருந்து சொற்களை எடுத்தாளுங்கள். குறைந்தபட்சம், புதிய சொற்கள் அருகில் ஆங்கிலத்தில் அடைப்புக்குறி விளக்கம் தாருங்கள். --Ravidreams 17:54, 9 பெப்ரவரி 2007 (UTC).

ரவி, நான் எந்த பொருளுக்கும் எல்லொருக்கும் புழக்கத்திலிருந்த சொல்லை உபயோகிப்பேன்; ஆனால் , அதே சமயம் என் கருத்து வெளியேட்டை எவ்வளவு துல்லியமாக சொல்லமுடியுமோ, அந்த துல்லியத்திற்க்க்குறிய சொல்லை பரவலான புழக்கத்தில் இல்லாவிட்டாலும் எழுதித்தான் ஆகவேண்டும். பரவலான புழக்கம் என்னும் பீடத்தில் துல்லியத்தை பலி கொடுக்கமுடியாது. அதற்க்குதான் செ.ப.அ. இருக்கிறது. ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தற்காலத்திய பொது ஜன தமிழ் மீடியா தரமானது அல்ல. அதனால் அது நல்ல புது சொற்க்களை உற்பத்தி செய்வதில்லை. உங்கள் கருத்து அதாவது புது சொற்க்களுக்ககொரு ஆங்கில விளக்கம் வேண்டும் என்பது சரியே ; அதோடு ஏன் அந்த சொல் சரி என்றும் சமர்த்தனம் செய்யவேண்டும்.--விஜயராகவன் 23:17, 9 பெப்ரவரி 2007 (UTC)

பொது ஊடகங்களில் நல்ல துல்லியமான சொற்கள் பெரிதும் காணக் கிடைப்பதில்லை என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதே நேரம் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பழைய அகராதிகள் மணிப்பிரவாள நடை அதிகம் இருந்த காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஒரு சொல் தமிழா என்று தெரியாமல் துல்லியம் கருதி அகராதியில் இருந்து எடுத்தாண்டால், புழக்கத்தில் இல்லாத மணிப்பிரவாள நடை சொற்களை திரும்பக் கொண்டு வருவதில் போய் முடியலாம். எடுத்துக்காட்டுக்கு, சமர்த்தனம் என்றால் என்ன? நீங்கள் புகுத்தும் பல சொற்கள் பல மணிப்பிரவாள நடை சொற்களோ என்று எனக்கு ஐயப்பாடும் அச்சமும் உண்டு. --Ravidreams 06:54, 10 பெப்ரவரி 2007 (UTC)

சொற்தெரிவில் விக்கிப்பீடியர்கள் அவதானமாக இருக்க வேண்டும். பயன்படுத்துபவர்களுக்கு விளங்க வேண்டும் என்பது எவ்வளவுக்கு முக்கியமோ அதேயளவு முக்கியம் புழக்கத்திலில்லாவிட்டாலும் பொருத்தமானவையான சொற்களைப் பயன்படுத்துதல். அவ்வகையில் விஜய் புதிய சொற்களை அறிமுகம் செய்வது வரவேற்கத் தக்கதே. ஆனால் அறிமுகமாகும் சொற்கள் தூயதமிழ்ச் சொற்களாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதே. நாமெல்லோரும் இதில் கவனம் செலுத்திப் பொருத்தமான மாற்றங்களைச் செய்துவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --கோபி 07:40, 10 பெப்ரவரி 2007 (UTC).
ஒரு சொல்லின் தேர்வையின் முதல் அளவுகோல், துல்லியமும், நுணுக்கமும். இதற்கு அகராதிகள் முக்கியம். செ.ப.பே அல்லது கிரியா தற்கால அகராதி, பால்ஸ் அகராதி போன்றவை முக்கியம். அடுத்த அளவுகோல் பரவலான புழக்கத்தில் இருப்பது. இது பொதுவாக டெலிவிஷன், செய்திதாள்கள், ரேடியோ, இலக்கியம், இலக்கிய மேடைகள், அரசியல் சொற்பொழிவுகள், சினிமா, நாடகங்கள் இவற்றில் பயன்படுத்துவது. இதற்க்கு தமிழ் கூகிளும், இணைத்தளங்களும் ரொம்ப உபயோகம். இதற்கு மேல் "தூயதமிழா இல்லையா" என்பது தீர்ப்பது கஷ்டம். நாம் 2000 வருட தமிழிலக்கியங்களையும், தமிழர்களுக்கு நன்றாக புரியும் சொற்களையும் எந்த காரணம் கொண்டும் ஒதுக்கக் கூடாது. நாம் சொல்ல நினைப்பது தற்கால தமிழில் இல்லையென்றால், செ.ப.பே. பார்த்து பழம் தமிழிலகியத்திலிருந்து பிடிக்க வேண்டும். நமக்கு வேண்டிய சொல், தொல்காபியத்தில் இருந்தாலும், கம்ப ராமாயணத்தில் இருந்தாலும் பிங்கள நிகண்டுவில் இருந்தாலும், மதுரைத்திட்ட அல்லது நூலக திட்ட நூல்களில் இருந்தால் அது உரைநடைக்கு சரியான தமிழ் சொல் என்றுதான் ஏற்க்க வேண்டும். தமிழின் பலமே பல சொற்கள் ஒரே பொருள் போல இருந்தாலும், ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வித சாயல் - nuance - உண்டு. எந்த காரணத்தைக் கொண்டும் நடப்பு தமிழின் பலத்தை தூக்கி எரியக் கூடாது. உதாரணமாக கோபி 'அவதானம்' என்ற சொல்லை பயபடுத்துகிறார். இச்சொல் தினத்தந்தி அல்லது தினமணி வாசகனுக்கு நிச்சயமாக புரியாது. நான் வளர்ந்த சென்னையில் அது பயன்படுத்தப் படவில்லை. ஆனாலும் இப்படி புது சொல்லை (பல தமிழர்களுக்கு பொருத்தவரை) நான் வரவேற்கிரேன். 'அவதானம்' சமஸ்கிருதத்திலிருந்து வருவது என்றெல்லாம் நான் கவலைப் படுவதில்லை. கடந்த 10 வருடங்களாக 'தலித்' என்ற சொல், தமிழில் அடிபடுகிரது. அது மராட்டிய மொழியிலிருந்து, பார்க்கப் போனால் சமக்கிருதத்திலிருந்து வருகிறது. அச்சொல்லை இப்பொழுது யார் ஒதுக்க முடியும் விக்கியில்?--விஜயராகவன் 11:12, 13 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் கட்டுரைகளில் சமஸ்கிரத சொற்கள், கிரந்த எழுத்துக்கள், நல்ல தமிழ் சொற்கள்

தொகு

பல இடங்களில் நீங்கள் சமஸ்கிரத சொற்களை முன்னிறுத்தவது போன்று தோன்றுகின்றது. தமிழ் கட்டுரை எழுத்து நடையில் சமஸ்கிரத சொற்கள், கிரந்த எழுத்துக்கள் தொடர்பான உங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தால் நன்று. நன்றி. --Natkeeran 17:20, 14 பெப்ரவரி 2007 (UTC).

நட்கீறன், சரி என் நிலைப்பாடு இதுதான்; நான் இலக்கிய தளங்கள், இலக்கியகர்த்தாக்கள், செய்திதாள்கள்,பொதுவாக மக்களுக்கு தெரிந்த சொற்கள் இப்படி தரமான ஆதாரத்தில்தான் கிரந்தம் என பாராமல் சொற்களை உபயோகிக்கிறேன். உதாரணம் நான் 'ஜாதி' என்று எழுதுகிறேன், பலர் அதை அப்படித்தான் சொல்கிறனர். மேலும் தமிழ் கூகிளில் 'ஜாதி'யை போட்டு பார்த்தல் 22,400 பக்கங்கள் வருகிரன [5]. அதாவது தமிழெழுதும் உலகத்தில் ஜாதி பரவலாகவே பயன்படுகிரது. இதில் ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகளும், செய்தி நிருவனங்களும் அடங்கும். அதே போலத்தான் 'சர்ச்சை'. தற்கால இலக்கியத்திலும், இலக்கிய வாதத்திலும், செய்திதாள்களிலும், சாதாரண மக்களும் 'சர்ச்சை'யை controversy/debate என்ற பொருளில் என பயபடுத்துகிரனர். இதில் தினத்தந்தி போன்ற 'பாமர மக்கள்' பத்திரிக்கை போன்றவையும் அடங்கும். அதேபோல்தான் எஜமானன் ( திறிபுகளான எஜமான், எச்மான், எசமானன், யசமான், யசமானன், யஜமான், யஜமானன் கூட) தமிழுலகத்தில் 'அடிமையின் சொந்தக்காரன்' என்ற பொருளில் பயனாகிரது. நாம் விக்கியில் முடிந்தவரை செய்தித்தாள் உரைநடையை பின்பற்றுவதில் தப்பில்லை. ஜெயகாந்தனுக்கு தெரிந்த தமிழ், இலக்கிய வாதங்களிள் நடக்கும் தமிழ், புதிய தமிழிலக்கியத் தமிழ், செய்தித்தாள் தமிழ் நமக்கு போதுமானதே. எல்லா இடத்திலேயும் கிரந்த எழுத்துக்களும் பயபடுகிரன. நீங்கள் எழுதும் கட்டுரைகளில் கிரந்த எழுத்துகளை முழுமையாக தவிற்ப்பேன் என்றால் தவறில்லை, அப்படியே செய்யுங்கள்.--விஜயராகவன் 18:38, 14 பெப்ரவரி 2007 (UTC)


சமஸ்கிருதம் என்பதை விட புழக்கத்தில் இல்லாத புதைந்து போன அகராதிகளில் மட்டுமே இருக்கக்கூடிய பிறமொழிச் சொற்களை மட்டும் புகுத்துவது போல் தெரிகிறது. (சுலவு போன்ற சொற்கள் விதிவிலக்கு). சொற்துல்லியம் என்பதற்காக வழக்கொழிந்த பிற மொழிச் சொற்களை புகுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.--Ravidreams 17:51, 14 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, எனக்கு சொல்ல வேண்டியதை தர எந்த சொற்கள் வேணா தாருங்கள், நான் நிச்சயமாக பரிசீலிக்கிறேன். எனக்கு பழையது/புதிது, "தூய தமிழ்/புற மொழிச் சொல்" என்றெல்லாம் கவலயில்லை. பொருத்தமா இருக்கணம், அகராதிப் படி போகணும், கவித்துவம்/இலக்கிய நயத்துவம் இருந்தால் மகிழ்சி. நீங்கள் கொடுக்கும் சொல் ஒரு சொல்லாக இருக்க வேண்டும், விளக்க சொற்களாக இருக்கக்கூடாது. உதாரணஙள் - Justification. மற்றொன்று discrimination மற்ற்வர்களை பாதிக்கும் வேறுபாட்டு செயல்/மனப்பான்மை என்ற அர்த்தத்தில். இது இரண்டிற்க்கும் அகராதியில் ஒரே சொல் உள்ளன. ஆனால் அது ஏனோ உஙகளூக்கு பிடிக்கவில்லை.--விஜயராகவன் 18:38, 14 பெப்ரவரி 2007 (UTC)

உங்கள் நிலைப்பாடுகளை தொகுத்துப் பார்த்தால் மொழிநடை பின்வருமாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் விழைவது போல் தெரிகிறது.

1. நிகழ்கால ஊடகத் தமிழை ஒட்டி இருக்க வேண்டும்.

2. புதுத் தமிழ்ச் சொல்லாக இருந்தாலும், சுருக்கமான சொற்கள் வேண்டும்.

3. துல்லியமான சொற்கள் அவை பிற மொழிச் சொல்லாக இருந்தாலும், பழந்தமிழ் அகராதிகளில் இருக்கும் பட்சத்தில், ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா? இதில் உங்களிடம் தனித்து உரையாடுவதாக கருத வேண்டாம். நீங்கள் சுட்டிக் காட்டுவன தமிழ் விக்கிபீடிநாவின் குறையாக தமிழ் விக்கிபீடியா வட்டத்துக்கு வெளியே உணரப்படுகிறது என்று அறிகிறேன். மேலே உள்ளதில் முதல் கருத்தை என்னிடம் அண்மையில் பேசிய ஒரு ஊடகவியலாளரும் தெரிவித்தார். உங்கள் கருத்துக்களை இங்கு தாருங்கள். பின்னர், இதை ஒரு விக்கிபீடியா கொள்கை உரையாடலாக தகுந்த பக்கத்தில் தொடர்வோம். நன்றி--Ravidreams 19:04, 14 பெப்ரவரி 2007 (UTC)

தோராயமாக நீங்கள் புரிந்து கொண்டது சரி. இன்னொன்று. நீங்கள் அடிக்கடி 'பிற மொழி' (தமிழ் அகராதியில் இருப்பவை) என்று கவலைப் படுகிறீர்கள். எது பிற மொழி என்ற ஆராய்சியில் இறங்கினால் ஆழம் தெரியாமல் காலை விட்டு, இன்னும் பதைப்பு அடைவீர்கள். அதற்கு ரொம்ப பயிற்சி வேண்டும். அதனால் 'பிறமொழி' என்ற கேள்வியை எடுக்காதீர்கள். பொதுவாக தமிழ் அகராதியில் உள்ளதெல்லாம் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளூங்கள். நான் சொன்ன்தெல்லையெல்லம் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக செயல்படுத்தத் தேவையில்லை. நாம் எழுதுவது படிப்பவர்களுக்கு புரிய வேண்டும், அவ்வளவுதான்.--விஜயராகவன் 22:33, 14 பெப்ரவரி 2007 (UTC)
//எது பிற மொழி என்ற ஆராய்சியில் இறங்கினால் ஆழம் தெரியாமல் காலை விட்டு, இன்னும் பதைப்பு அடைவீர்கள். அதற்கு ரொம்ப பயிற்சி வேண்டும். அதனால் 'பிறமொழி' என்ற கேள்வியை எடுக்காதீர்கள். பொதுவாக தமிழ் அகராதியில் உள்ளதெல்லாம் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளூங்கள். //
மன்னிக்கவும். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றை குறித்த அறிவு இல்லாவிட்டால் அது குறித்த அறிவை வளர்க்க வேண்டுமேயன்றி கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள முடியாது. கேள்விகள் தான் விடைகளை தரும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது தானே அறிவு. தவிர, நற்கீரன் குறிப்பிடுவது போல் இலக்கிய, ஊடகத் தமிழ் வேறு உரை நூல், பாட நூல் தமிழ் வேறு. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் வட்டார நடையும் அவற்றுக்கு தற்கால இலக்கியங்களும் உள்ளன. அதற்காக தமிழ்நாட்டுப் பாடநூலில் - அது கலீஜாக இருக்கும் என்று ஒரு வரி வந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? தற்கால இலக்கியங்கள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கு ஆயிரம் வணிக, படைப்பூக்க சுதந்திரங்கள், கட்டாயங்கள் இருக்கலாம். ஆனால், கலைகளஞ்சியப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு இவை தேவை இல்லை. 1940களில் ஒரு தமிழ் அகராதி வெளியாயிருப்பின் அதில் ஏராளம் மணிப்பிரவாள சொற்கள் இருந்திருக்கும். அதற்காக அவற்றை தமிழ் என ஏற்றுக் கொள்ள முடியுமா? திசைச்சொல்லாக தமிழில் சொல் வேறு பல்வேறு காரணங்களுக்காக திணிக்கப்படும் சொற்கள் வேறு. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அகராதி என்பது அந்தந்த காலகட்டத்தில் சமூகத்தில் புழங்கி வரும் சொற்களை புரிந்து கொள்வதற்கான ஒரு கையேடு. அவ்வளவுதான். அதிலும், சிறந்த அகராதிகள் சொற்களின் வேர் மொழியை சுட்டித் தான் வெளியிடுகின்றன. ஒரு சொல்லின் வேர் அறிவதே நம் மொழி வளத்தை அதிகப்படுத்தும். அகராதிச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வது கிஞ்சித்தும் உதவாது. --Ravidreams 03:40, 15 பெப்ரவரி 2007 (UTC)

விஜயராகவன்,
  • செய்தித் தமிழ் நடைக்கும் கலைக்களஞ்சிய தமிழ் நடைக்கும் வேறுபாடுகள் உண்டு. கலைக்களஞ்சிய தமிழ் நடை ஆராய்ச்சி கட்டுரைத் தமிழ் நடைக்கும் செய்திக் கட்டுரைக்கும் இடையே இருக்க வேண்டும். அதாவது அதிக இறுக்கமாகவோ அல்லது இளக்கமாகவோ இருக்க முடியாது.
  • இலக்கியத் தமிழ் நடைக்கும் கலைக்களஞ்சியத் தமிழ் நடைக்கும் வித்தியாசம் உண்டு. இலக்கியத்தில் வட்டார மொழிகள் எடுத்தாள்வது பிரச்சினையல்ல. நாவல், சிறுகதை, கவிதை போன்றவற்றில் அவை நன்று. ஆனால் கலைக்களஞ்சிய கட்டுரைத் தமிழ் நடையில் நாம் எழுத்து தமிழை பின்வற்றுவதுதான் அனைத்து தமிழர்களும் கட்டுரைகளை எளிதாக புரிந்து கொள்ள உதவும். இங்கு இலங்கை, தமிழக குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கூட களைந்து ஒரு பொது நடை விரும்பத்தக்கது.
  • கிரந்த எழுத்துக்களைப் பொறுத்த வரையில், நாம் ஏற்றுக் கொண்ட கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதில் எந்த தயக்கமும் இருக்க தேவையில்லை. அவை: ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ x 12 = 60 எழுத்துக்கள் ஆகும். இருப்பினும் அவை பரவலாக வழக்கத்தில் இருக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் ஒலி அமைப்புக்கும் இணையாகவோ, அல்லது மாற்றாகவோ பயன்படுத்தப்படுவதில்லை என்றே அறிகின்றேன்.
  • இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்றாலும், பல விக்கிபீடியர்களின் கருத்துக்களும் இதற்கேற்பவே அமைகின்றன என்பது எனது எண்ணம்.

நற்கீரன் --Natkeeran 19:21, 14 பெப்ரவரி 2007 (UTC)

"செய்தித் தமிழ் நடைக்கும் கலைக்களஞ்சிய தமிழ் நடைக்கும் வேறுபாடுகள் உண்டு". நட்கீரன், இது எனக்கு தெரியாதது அல்ல. செய்தி சம்பவங்கள் மேல் கவனம் செலுத்துகின்றன. விக்கி கட்டுரைகள் ஒரு தலைப்பின் கீழுள்ள கருத்தின் மேல் கவனம் செலுத்துகிறன. 'நடை' என்பதை நான் 'சொல் தேர்வுகள்' என்ற விதத்தில் உபயோகித்தேன். அதனால் தான் சொற்தேர்வுகளுக்கு செய்தி நிருவனங்களையும், இலக்கியங்களையும் இழுத்தேன். செய்தி தாள்கள் தங்கள் வாழ்விற்கு எல்லோரும் புரியும்படி எழுத வேண்டும் என்பதை மறக்காதீர்கள், செய்திதாளின் உயிரே வாசகர்கள் புரிந்து அதை பணம் கொடுத்து வாங்குவதில் உள்ளது. அதனால் செய்திதாளின் தமிழை ஏளனம் செய்யாதீர்கள் மேலும் விக்கி இணையிலிருப்பதால், செய்தித்தாளுக்கு இல்லாத பல வசதிகள் விக்கிக்கு உள்ளன. விக்கியில் நாம் சொல் சிக்கனமாக பல விஷயங்களை துல்லியமாக வைக்க வேண்டும்.--விஜயராகவன் 13:27, 15 பெப்ரவரி 2007 (UTC)

பதிலுக்கு நன்றி விஜயராகவன். செய்தித் தமிழ் நடையை நான் ஏளனம் செய்யவில்லை. தமிழ் உரை நடையில் செய்தித் தமிழ் நடை ஒரு மைல்கல். பலர் தமிழ் படிக்கவும் அது ஒரு காரணம் ஆயிற்று. பட்டிதர்களிடம் இருந்து பொது மக்களுக்கு செய்தித் தமிழ்நடை தமிழின் எழுத்து புலத்தை எடுத்து சென்றது எனலாம். ஆனாலும் 'சொல் தேர்வுகள்' செய்தி ஊடகங்களிடம் இருந்து பெறப்படவேண்டும் என்பதில் அவ்வளவு ஒப்பில்லை. செய்தி ஊடகங்கள்களின் கவன வீச்சு மட்டுப்படுத்தப்பட்டது. கலைக்களஞ்சியத்தின் கவன வீச்சு அகலமானது, தொலைநோக்கானது. ஆரம்பத்தில் செய்தி தாள்கள் Internet அல்லது இன்ரனற் என்று எழுதுவார்கள். பின்னர் அவர்கள் பின்னியவலை போன்று பயன்படுத்தி, தற்போது இணையம் என்றே பயன்படுத்துகின்றார்கள். அது செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை சரியே. ஆனால், கலைக்களஞ்சியத்தில் தகுந்த, நல்ல தமிழ்ச்சொற்களை கையாள்வது நன்று. செல்வா, இராம.கி, அகராதிகள் பல எமக்கு இந்த விடயத்தில் உதவியாக இருக்கின்றன. இதற்கு நீங்கள் ஆதரவு என்றே மேலே சுட்டியுள்ளீர்கள். சொற்களின் மூலம் பற்றி சிறு கருத்து வேறுபாடு மட்டுமே இங்கு சுட்ட முயல்கிறேன். இந்தக் கருத்தையே நீங்கள் "செய்தித்தாளுக்கு இல்லாத பல வசதிகள் விக்கிக்கு உள்ளன. விக்கியில் நாம் சொல் சிக்கனமாக பல விஷயங்களை துல்லியமாக வைக்க வேண்டும்" என்று கூறுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். பெயர்களை பொறுத்தவரை அது தனிமனிதரின் உரிமை என்பது என் கருத்து. அவர் எப்படி தன் பெயரை எழுதுகின்றாரோ அப்படி எழுதுவதே பொருத்தம். அப்படி தெரியாத சமயத்தில் பொதுவாக அறியப்பட்ட நடைமுறையை பின்பற்றி எழுதி, பின்னர் முழுப்பெயரை கட்டுரையின் ஆரம்பத்தில் தரலாம். அதுவே த.வி. மரபு. இந்த விடயத்தில் த.வி. தெளிவு இருக்கின்றது. அத்தோடு அனேகமான சந்தர்ப்பங்களில் பட்டப்பெயர்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வதில்லை. சில விதிவிலக்குகள் உண்டு. --Natkeeran 15:05, 15 பெப்ரவரி 2007

(UTC)

சுந்தருக்கு

தொகு

"விஜய், சொல்புழக்கத்தில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நல்ல வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட புதிய சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை."-- Sundar \பேச்சு 17:45, 15 பெப்ரவரி 2007

சுந்தர், இதில் பல விஷயங்கள் கலந்துள்ளன.


1. விகி வேர்ச்சொல் ஆராய்வு தளம் இல்லை. எல்லோரும் படிக்கும் வகையில், பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தப்படும் சொற்களை உபயோகித்து கட்டுரைகள எழுதுவதே குறியாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஆங்கில விக்கியில் மில்லியன் மேல் பக்கங்கள் உள்ளன. ஆனால் இதைப்போல் 'ஆங்கில வேர்' சர்ச்சை வருவதே இல்லை. ஆங்கில விகி செயல்முறைகளை முன்னோட்டியாக வைத்தால் தான் வெற்றிகரமாக தமிழ் விக்கி நடத்த முடியும்.

2. நாம் சொல்ல வேண்டியதற்க்கு சரியான சொல் அகராதியிலோ, புழக்கத்திலோ இல்லையானல் நிசயமாக புதிய சொற்களை ஆக்கவேண்டும். அப்பொது, தமிழ் 'வேர்' என்பதை நினைவு வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக டிராக்டர் என்பதற்கு , "தமிழ் வேரி"லேயே புது சொல் ஆக்கலாம்

3. ஒருவர் மற்றவர் எழுதியதை 'தமிழ் இல்லை' என்று திருத்துவாரானார் அது சரியான போக்கு அல்ல; அது முரட்டடி ஆகும். It is rude and bad manners.

4.What you are saying about 'roots', is it mandatory or recommended? I would like to get that point clarified.

5.யாராவது எல்லாம் 'தமிழ் வேரில்' தான் சொற்கள் இருக்க வேண்டுமென்றால், தாராளமாக அவர் எழுதும் கட்டுரையில் அவ்வழியை பிடிக்கட்டும். ஆனால் மற்றவர்கள் எழுதும் கட்டுரையில் அந்த "காரணத்தை" கொண்டு திருத்துதல் சரியான போக்காக இல்லை.

6. இங்கு யாருக்கும் "தமிழ் வேர்கள்" பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. இது தனி மனிதர்களின் மீது விமரிசனம் அல்ல.யாராவது Ph.D or MA in Tamil Linguistics or Dravidian Linguistics செய்திருந்தால் தான், அந்த துறையில் அதிகாரபூர்வமாக பேச முடியும்.

7. விகி எழுதுபவர்களுக்கு உதவியாகவும், சொல்லாட்டம் சீர்திருத்தவும், சில அகராதிகளை அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம். சர்வதேச அளவில் சென்னை பல்கலை தமிழ் அகராதி (Madras University Tamil Lexicon) ஒரு சீர்தரமாக ஒப்புகொள்ளப் பட்டுள்ளது. மேலும் தமிழ் இணைய பல்கலைகழகத்தில் சில அகராதிகள் உள்ளன. அதற்கு மேல் கிரியா தற்கால அகராதி உள்ளது. மேலும் இந்த தளத்தில் http://dsal.uchicago.edu/dictionaries/ நல்ல தமிழகராதிகள் கடைக்கிறன.அகராதிகளை பயன்படுத்துவதால் நாம் சொல்லாட்டங்களில், தனிநபர் அபிப்பிராயங்களிலிருந்து விடுதலையுற்று, புறவய அளவுகோலை பயன்ன்படுத்த முடியும்.

8.The present practices and attitudes encourage wrong people to do wrong things in a wrong place.

9. நவீன மற்றும் பண்டைய தமிழிலக்கியங்களை 'தமிழ் அல்ல' என ஒதுக்குவது, பொதுஜனங்களுக்கு, தமிழ் விகியின் மேல் வெறுப்பைதான் வளக்கும். அது ஆங்கிலம் படித்து ஆங்கிலத்தில் காலம்கடத்துபவர்களின் வரம்பற்ற செருக்கு போல் தோன்றும்.

10. இதற்கு மேல் திருத்தங்களில் rules of engagement ஐ வரையறுப்பது முக்கியம். திருத்தங்கள் வகையாவன


அ) இலக்கணம்

ஆ) எழுத்துப் பிழைகள்

இ) சொல்லாடல்

ஈ) எழுதிய தகவல் பற்றி


இதில் அ,ஆ நிச்சயமாக யாராலும் செய்யலாம். மற்ற்வற்றைப் பற்றி கட்டுரையாசிரியற்கு 'உரையாடல்' பக்கத்தில்,பல கோணங்களில் விமரிசனம் செய்யலாம். கட்டுரையாசிரியரே கட்டுரையை மாற்றட்டும்.


மேற்ச்சொன்ன கருத்துகளின் மேல், உங்கள் அபிப்பிராயம் என்ன?--விஜயராகவன் 20:06, 18 பெப்ரவரி 2007 (UTC)

விஜயராகவன், விக்கிக் கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்றர்போல இருத்தல் வேண்டும். சொல்லப்பட்ட குறிப்புகள் சரியானதாக இருப்பது மட்டும் அன்றி சொல்தேர்வு, நடைதேர்வு, கட்டுரையின் கருத்தோட்டம் முதலியனவும் பயனர்களால் திருத்தப்படும். ஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் ஏராளமான இடங்களில் சொல்தேர்வுகள் (வேர்ச்சொற்கள், இடவேறுபாட்டு வழக்கங்க என பல வகையானவை) பற்றி ஏராளமான சொல்லாடல்கள் நிகழ்ந்துள்ளன, நிகழ்ந்து வருகின்றன. எக்கருத்து பற்றியும் யாரும் முறைப்படி கருத்துக்களை முன் வைக்கலாம். முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை, பெற்றிருந்தாலும் ஒருவர் சொல்வது தவறு என்று எடுத்துக் காட்ட இயலும். முனைவர் பட்டம் பெற்றிருந்தால் அவரால் அத்துறையிலாவது செல்லும் படியாக சொல்ல இயலும். எனினும் முனைவர் பட்டம் பெற்றிருந்தால் அவர் பிறர் சொல்வதில் செல்லும் சொல் இருப்பதை அறியக்கூடியவராகவும் இருப்பர். எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண வேண்டும். அதுதான் விதி. ஓர் அகராதியில் இரு சொற்கள் இருந்தால் எச்சொல்லை ஆளுவது என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தமிழ் விக்கியில் தமிழ்ச் சொற்களுக்கு முதலிடம் தருவது குற்றம் இல்லை (அதுவும் மிகத் தகுந்த காரணங்களுக்காக, மொழி வெறி, காழ்ப்புணர்ச்சி முதலியவற்றால் அல்ல). தமிழல்ல என்று ஒதுக்குவதாக எண்ணாமல், தமிழ் என்று ஏற்பதை நினைவில் கொள்ளுங்கள் (வளம் பெருக்குவதால் ஏற்பு என்பதனையும் நினைவில் கொள்க). பரவலாக எல்லாத் தமிழ் மக்களுக்கும் பயன்படுமாறு (வெறும் 2-5% மக்களுக்கு மட்டுமில்லாமல்), சொற்களும் சொல்நடையும், கருத்தோட்டமும் இருத்தல் தேவை. எலிப்ஸ் (ellipse) என்று கூறி அது இன்னது என்று சொன்னாலும் மக்களுக்குப் புரியும், ஆனால் நீள்வட்டம் என்று சொல்லிப் பின் அதனை விளக்கினால் அதனால் புரிவது மட்டும் அல்லாமல், கேட்ட உடனே அது ஏறத்தாழ என்னவாக இருக்கும் என்னும் ஓர் எண்ணம் உந்துகோலாக இருக்கும். உள்ளத்துள் ஆழம் பெறும். நாத்திகம் என்பதைக் காட்டிலும் இறைமறுப்பு என்பதும் இதே வகையில் மிகப் பெரும்பாலான மக்களுக்கு உடனே சென்றடையும். தமிழ் அல்ல என்பதால் மாற்றப்படுவதல்ல, எப்படிச் சொன்னால் இன்னும் அதிகப் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணி மாற்றப்படுவது. நீங்கள் பொதுஜனங்கள் என சொல்ல விரும்புகிறீர்கள், நான் பொதுமக்கள் என சொல்ல விரும்புகிறேன். இதனால் மக்கள், மக்களாட்சி, மக்கள் உரிமை, நன்மக்கள் போன்ற எத்தனையோ சொற்கள் வலுப்பெறும். நீங்கள் தமிழல்ல என்று ஒதுக்குகிறோம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள் (உண்மையைப் புரிந்துகொள்ளாமல்). நீங்கள் வடமொழியை வேண்டுமென்றே திணிக்க முற்படுகின்றீர் - சான்றாக வன் திணிப்பாய் விபரீத லட்சணை போன்ற சொல்லாட்சிகளைப் பரிந்துரைக்கின்றீர். முரண்தொடை, முரண்நகை என்பன போன்ற சொற்கள் இருந்தபோதும். தமிழ் விக்கியில் தமிழுக்கு, தமிழ்வழி விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும் என்பதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அது மிகவும் வருந்தத் தக்கது. தமிழ் விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு அதனைச் சொல்லவும் வேண்டுமோ?!! இன்று 7,000 கட்டுரைகள் உள்ளன. சென்று பாருங்கள். திருத்தப்பட்ட இடங்களில் திருத்தங்கள் பயன் தருவதாக உள்ளதா இல்லையா என்று. இன்றில்லாவிட்டாலும் காலப்போக்கில் தமிழிலும் நூறாயிரக்கணக்கான நல்ல கட்டுரைகளும் குறுங்கட்டுரைகளும் வலையேறும். நீங்கள் ஏன் தமிழ்ச் சொற்கள் பயன்படுத்துவதை வெறுக்கிறீர்கள், எதிர்க்கிறீரகள் என்று எண்ணிப் பாருங்கள். --செல்வா 21:07, 18 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, நான் Irony என்பதை அகராதியில் போட்டால், விபரீதலட்சணை ஒன்றுதான் வருகிறது. என் அலசலில் முரண்நகை என்பதை 'oxymoron' என்றுதான் ஒரு தமிழ்ப்பக்கத்தில் கொடுத்துள்ளனர். எனக்கு புறவயமாக ஒரு ஆதாரம் வேண்டாமா? ஆனாலும் முரண்நகை=Irony என நான் கற்றுக் கொள்ள தயார்.நான் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒன்று புதிதாக கற்பதில் ஊக்கமுள்ளவன்.அதனால் இந்த உதாரணத்தை வைத்து "வடமொழியை வேண்டுமென்றே திணிக்க முற்படுகின்றீர் " என்ற குறை செல்லாது. நமது ஆதாரங்கள் சொந்த அபிப்பிராயங்களுக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.என் சொல் தேர்வின் ஆதாரம் அகராதி - அப்படித்தான் எந்த மொழியும் இயங்குகின்ரது.
திணித்தல் என்பதற்கு அகராதி சொல்லும் பொருள்:

To stuff; திணித்தல்; போட்டடை-த்தல், நிறை²-த்தல், To cram, stuff, pack closely செறி²-த்தல், அப்பு¹-தல்-To thrust in the mouth;

நான் என் பொருளை யார் மேலேயும் திணிக்கவில்லை. தமிழ் இணைய பல்கலைகழகத்தில் பால்ஸ் அகராதியில், முரண்நகை என்பதற்கு பதில் இல்லை.பகுத்தறிவான வழி அகராதியை கடைப்பிடிப்பதாகும்.செல்வா இப்படியெல்லம் "ஏன் தமிழ்ச் சொற்கள் பயன்படுத்துவதை வெறுக்கிறீர்கள்" அபாண்டமாக ஆதாரமில்லாத பழி போடுகிறீர்களே - நான் தமிழில் எழுதாமலேயே நீங்கள் புரிந்து கொள்ளாமல் பதில் அளிக்கின்றீர்களா? நான் மேலே எழுதினயவை தமிழ் இல்லையா? நான் மேலுழுதினது நீங்கள் தமிழில்லை என கருதினால், நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என தெரியவில்லை. நீங்கள் ஏன் தமிழகராதிகளையும், இலக்கிய சொல் தேர்வுகளையும் வெறுக்கிறீர்கள் என எண்ணிப் பாருங்கள். நான் உங்கள் தமிழ்ப்பற்றை வழிமொழிகிறேன், அதே சமயம் என் சொல்லாடல்களுக்கு புறவய ஆதாரங்கள் உள்ளன.--விஜயராகவன் 00:21, 19 பெப்ரவரி 2007 (UTC)

1. ஆங்கிலத்தில் அறிவியலில் எழுதுவதற்கும் தமிழில் அறிவியலில் எழுதுவதற்கும் பெரிய இடைவெளி உண்டு. அங்கு இருக்கும் பின்புலம், சீர்தரங்கள், சொற்கள் இங்கு இல்லை. ஆங்கிலத்தில் அறிவியல் எழுத்து ஒரு வளர்ச்சி பெற்ற துறை, தமிழில் இப்பொழுதுதான் ஆரம்பமே. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இத்துறையில் கவனம் செலுத்துகின்றார்கள். இங்கு தகுந்த கலைச்சொற்களை பயன்படுத்தப் வேண்டும். அதற்கு வேர்ச்சொல் அறிவு தேவையென்றால், அதைப் பற்றிய அறிவுடையோரின் உதவியை நாடுவது நலமே. இராம.கி, செல்வா, போன்றவர்கள் இதற்கு இணையத்தில் உதவியாக இருக்கின்றார்கள்.

3. இங்கு கட்டுரைகளின் பிரதான ஆக்கர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு தருவது வழக்கம். இருப்பினும் அனேக கட்டுரைகள் ஒரு கூட்டு முயற்சியே. திருத்தங்கள் சரியாக அமையும் பொழுது அவற்றை ஏற்பதே நன்று.

5. நல்ல தமிழ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும், அதுதான் தேவை.

6. தமிழில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களின் பங்களிப்புகளை நாம் என்றும் வரவேற்கின்றோம். ஆனால், நாம் இயன்றவரை எமது பங்களிப்புகளை செய்ய முற்படுகின்றோம். இதில் எதுவும் தப்பில்லை.

7. அனேகமான சந்தர்ப்பங்களில் அகராதிகளே பயன்படுகின்றது என்பது கண்கூடு. இன்று புதிய கலைச்சொல்லாக்கத்தின் தேவை அகராதிகள் இன்றைப்படுத்தல் வேகத்தை விட மேலானது.

8. என்ன சொல்ல வருகின்றீர்கள்? நேரடியா சொன்னால் நன்றாக இருக்கும்.

9. தமிழ் விக்கிபீடியா ஒரு கட்டற்ற திறந்த திட்டம். இது ஒரு கலைக்களஞ்சியம். உங்களது குற்றச்சாட்டுக்களை எடுத்துக்காட்டுகளுடன் முன்வைக்கவும். ஆங்கிலம் படிப்பதோ, ஆங்கில புலத்தில் வேலை செய்வதோ குற்றம் இல்லை. "வரம்பற்ற செருக்கு" - ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

10. பிரதான கட்டுரையாசிரியரின் கருத்துக்கள் மதிகப்படவேண்டும். பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் தகுந்த விளக்கங்கள் உரையாடல் பக்கத்தில் தரப்படவேண்டும் போன்றவை இங்கிருக்கும் ஒரு புரிந்துணர்வே.


தமிழ் விக்கிபீடியா ஒரு இலக்கிய களம் இல்லை. இது ஒரு செய்தி தளமும் இல்லை. தமிழ் விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம். தொலைநோக்கும் பொறுப்புணர்வும் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமா இதனை நாம் வளர்க்க வேண்டும். இயன்ற வரை எளிய தமிழில், நல்ல தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தி, இலக்கண கட்டுக்கோட்புடன், விடய நோக்கில் எழுதப்பட வேண்டும். எல்லோராலும் இது முடியாது என்பது நாம் அறிந்ததே, ஆனால் அதுவே எமது இலக்கு.

ஆங்கில விக்கிபீடியாவிற்கும் தமிழ் விக்கிபீடியாவிற்கும் பல வேறுபாடுகள் உண்டு. எமக்கிருக்கும் வளங்களும் தேவைகளும் ஆ.வி.விலும் பார்க்க வேறுபட்டவை. தமிழ் விக்கிபீடியா ஒரு தனித்துவமான திட்டம்.

--Natkeeran 22:14, 18 பெப்ரவரி 2007 (UTC)

விஜயராகவன்,

1. தமிழில் கலைச்சொற்களை விவாதிக்க வேறு திறந்தநிலைக் களம் இல்லை. சொற்களை விவாதிப்பது வெட்டி வேலை இல்லை. அது கட்டுரையாக்கத்தின் முக்கியமான ஒரு பகுதி. தமிழ் விக்கிபீடியா முழுவதும் ஒருமித்த மொழி நடையை பின்பற்ற இம்முயற்சிகள் தேவை.

3. உதவும் நோக்கிலேயே திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இது வரை தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாகவோ மிரட்டப்படுவதாகவோ பாதுகாப்பற்று உணர்வதாகவோ இங்கு நினைக்கவில்லை. நல்ல தமிழ்ச் சொற்களை அறியும் ஆர்வம் அனைவரிடமும் உண்டு. உடன்படாத நேரங்களில் ஆரோக்கியமான உரையாடல்கள் பேச்சுப் பக்கத்தில் இருக்கின்றன. It was a naay (நாய்) என்று நீங்கள் ஆங்கில விக்கியில் எழுதினால் எவ்வளவு முரணாக இருக்குமோ, அதே போல் உத்தரிப்பு, விபரீத லட்சணை என்று நீங்கள் தமிழ் விக்கியில் எழுதுவதும் எனக்குத் தோன்றுகிறது. தமிழ் எங்களுக்குத் தனித்துவமான மொழி. அதில் திணிக்கப்படும் வேற்று மொழிச் சொற்களுக்காக நாங்கள் காலஞ்சென்ற அகராதிகளை பார்க்கத் தேவை இல்லை. விக்கிபீடியா இணைய ஊடகம் என்பதை தவிர்த்து நாளை இதன் படிகள் அச்சாகியோ, இறுவட்டு மூலமா வீடுகளை சென்றடையலாம். அப்பொழுது, இணைய வசதி இல்லாதவர்கள் எல்லாரும் நீங்கள் திணிக்கும் வார்த்தைகளை படிப்பதற்காக சென்னை பல்கலைக்கழக அகராதி வாங்க முடியுமா? தொடர்ந்து திருத்தப்படும் அளவில் நீங்கள் எழுதினால் அது உங்கள் எழுத்துத் திறன் குறைவையே காட்டுகிறது. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நீங்கள் எழுதுவதை யாருமே திருத்தக்கூடாது என்று நினைப்பவர்கள் விக்கி செயல்பாட்டை புரிந்து கொள்ளவே இல்லை என்று தான் பொருள்.

4. சுந்தர் அதை ஒரு பெரிதும் விரும்பத்தக்க பரிந்துரையாகத் தான் தெரிவித்திருக்க வேண்டும். விக்கிபீடியாவில் இறுக்கமான கொள்கைகள் என்று ஏதும் கிடையாது. உங்களால் நல்ல தமிழில் எழுத முடிந்தால் எழுதுங்கள். இல்லாவிட்டால், அடுத்தவர் திருத்தி எழுதுவதை குறை சொல்லாமலாவது இருங்கள்.

5. விக்கியில் உன் கட்டுரை, என் கட்டுரை என்று ஏதும் கிடையாது. எந்த ஒரு கட்டுரையும் யாருக்கும் உரிமையானதல்ல. இதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்.

6. அவரவருக்குத் தெரிந்ததை தெரிவித்து உரையாடி மெய்ப்பொருள் காண முயல்கிறோம். விக்கியில் எழுத படிப்புத் தகுதிகள் தேவை இல்லை. நீங்கள் சொல்லும் ஆங்கில விக்கியிலும் கூட முனைவர்களை காட்டிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரைகள் அதிகம்.

7. அகராதிகள் வழிகாட்டிகளே. மூன்றாவது நடுவர் அவை செயல்பட ஏதுமில்லை. எதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க முடியாது. தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவதால் மட்டுமே விபரீத லச்சினை போன்ற சொற்கள் தமிழாகி விடாது.

8. நீங்கள் இப்படி ஆங்கிலத்தில் எழுதுவது தமிழ்நாட்டில் எந்த "பொதுஜனத்துக்கு" புரியும் என அறிய ஆவல் ;)

9. இந்த பொதுஜனம், பொதுஜனம்ங்கிறீங்களே - அவங்க யாரு ;)

10. முதல் ஆசிரியருக்கு திருத்தங்களை செய்ய வாய்ப்பும் மதிப்பும் தரப்படுகிறது. அதற்காக அவரே மாற்றத்தை செய்யட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தவறு என்றால் மாற்றப்படத் தான் வேண்டும். முதல் ஆசிரியருக்கு மிகை மரியாதை தேவை இல்லை என்பது விக்கி நடைமுறைகளில் ஒன்று.

இப்பொழுது உங்களுக்கு இவ்வளவு விளக்கமாக பதில் சொல்லியிருக்க அவசியமில்லை. ஏற்கனவே, உங்களுடனான விவாதங்களில் நிறைய நேரம் வீண். முடிந்தால் கூகுள் மூலம் அகராதிகளை கிண்டி காலஞ்சென்ற வேற்றுமொழிச் சொற்களை திணிக்காமல் நல்ல தமிழில் எழுத்துப்பிழை இன்றி எழுதப் பழகுங்கள். பயனற்ற விவாதங்களில் பிற பங்களிப்பாளர்களின் ஆற்றலை வீண்டிக்காமல் ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்க முயலுங்கள். இதை நான் செருக்கோடு சொல்வதாக நினைத்துக் கொண்டாலும் சரி. இதே கேள்விகளோடு பிற்காலத்திலும் குழப்பக்கூடும் என்பதற்காகவே இதை இவ்வளவு விரிவாக எழுத வேண்டி இருக்கிறது.

இல்லை, உங்களுக்கு இந்த தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் புரியவில்லை என்றால், பொதுஜனங்களுக்குப் புரியும் அகராதித் தமிழ் விக்கிபீடியா ஒன்றை உருவாக்க விக்கிமீடியா நிறுவனத்திடம் அனுமதி கோரி தனியாக ஒரு பொதுஜனக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். மரபுச் சீனம், எளிய சீனம் என்றிருப்பது போல் இப்படி ஒரு பொதுஜனத் தமிழும் வந்து விட்டுப் போகட்டுமே. வாழ்த்துக்கள்.

நாங்கள் எந்நாட்டவர்க்கும் எக்காலத்திலும் புரியும் எளிய பொதுத் தமிழ் விக்கிபீடியா ஒன்றை உருவாக்குதை குறிக்கோளாக கொண்டுள்ளோம்.--Ravidreams 22:37, 18 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, மற்றவர்கள் சொற்களை எடுத்து உங்கள் சொற்களை போடுவது, நீங்களும், செல்வாவும்; ஆனால் "திணித்தல்" குற்றம் சாட்டுவது மற்றவர்கள் மேல். இது 'முரண்நகை'க்கு நல்ல உதாரணம் கொடுப்பதா?

நீங்கள் எழுதியது "அகராதி என்பது அந்தந்த காலகட்டத்தில் சமூகத்தில் புழங்கி வரும் சொற்களை புரிந்து கொள்வதற்கான ஒரு கையேடு" . ஆனால் உங்கள் விகி எழுத்துகள் "எக்காலத்திலும் புரியும் எளிய பொதுத் தமிழ் " என்கிறீர்கள். இதன் இலக்கிய பாவனை என்ன்? 'முரண்நகை', சிலேடை, தற்புகழ்ச்சி, megalomania?? --விஜயராகவன் 08:28, 19 பெப்ரவரி 2007 (UTC)

விஜய், என்னை நோக்கிய கேள்விகளை இப்பொழுதுதான் பார்க்கிறேன். சற்றே சூடாகத்தான் உள்ளது.

உங்கள் நான்காவது கேள்விக்கு மட்டும் உடனடி மறுமொழி தருகிறேன்: அது ஒரு பருந்துரையே, நெறிமுறையல்ல. என்னுடைய நிலைப்பாடு இங்கு முன்னர் இருந்த உரையாடலில் தெரிவித்திருந்ததுதான். நான் முறைப்படி இந்தி மொழியையும் மேம்போக்காக சம்ஸ்கிருதத்தையும் கற்றவன் தான். அவற்றை வெறுக்கவில்லை. ஈப்ரு போன்று சமஸ்கிருதத்தையும் உயிர்ப்பித்தால் எனக்கு மகிழ்ச்சியே.

மற்றபடி உங்களுக்குப் பொதுவழக்காகத் தென்படும் சொற்களில் பல (என் சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தாண்டியும் பார்க்கையில்) உண்மையில் பொதுவழக்கில் இல்லை. அதேநிலைதான் மணிப்பிரவாள நடை ஓங்கியிருந்த காலகட்டத்தில் இயற்றப்பட்ட அகரமுதலிகள். சிலப்பதிகாரத்தில் வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் நீங்கள் ஆழ்வார்களின் பாடல்களில் அனைத்திலும் பெரும்பாலும் மிகத்தூய தமிழ்ச்சொற்களே ஆளப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா? வேதம் என்பதைக் கூட எழுதாக் கற்பு என்று ஆண்டிருப்பதைக் கேட்டிருக்கிறீர்களா? கேள்வி எண்வாரியாக என்னால் இப்பொழுது பதிலளிக்க முடியவில்லை, மன்னிக்கவும். -- Sundar \பேச்சு 15:53, 19 பெப்ரவரி 2007 (UTC).

சுந்தர், "உங்களுக்குப் பொதுவழக்காகத் தென்படும் சொற்களில் பல ...உண்மையில் பொதுவழக்கில் இல்லை" உதாரணம் தருக. என் முதல்மரியாதை புழக்கத்திலிருக்கும் சொற்களுக்கும் புழக்கத்திலிருக்கும் பொருளுக்கும்தான். ஆனால் நம் கருத்தை துல்லியமாக சொல்ல புழக்கத்திலிருக்கும் சொல் போதவில்லையென்றால்,நாம் அகராதியையும், இலக்கியத்தியையும் குடைய வேண்டியதுதான். எனக்கு வேண்டிய சொல் ஆழவார் பாடலில் இருந்தால், நிச்சயமாக அதை பயன்படுத்துவேன் - புழக்கத்தில் இல்லாவிட்டாலும். அப்பொது 'வழக்கொழிந்த சொல்' என சொல்லாதீர்கள். தமிழ்நடை எப்பவுமே வளர்ச்சி பாதையில் செல்லவில்லை. சில நல்ல சொற்கள், வழக்கமில்லாமல் போயின; அவற்றை புதிப்பிப்பதில், தூசி தட்டி பயன்படுத்துவதில் தவறில்லை.

--விஜயராகவன் 18:38, 19 பெப்ரவரி 2007 (UTC)

Return to the project page "சொல் தேர்வு/தொகுப்பு 2".