விக்கிப்பீடியா பேச்சு:தற்காவல்

இவ்வணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே (எடுத்துக்காட்டு: பூங்கோதை) எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இங்கு உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வணுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனர் வழமை போலவே பங்களிக்கப் போகிறார் என்பதாலும், ஒரு நிருவாகி தாமாக வழங்கும் அணுக்கம் தொடர்பாக பயனருக்குத் தேவையில்லாத உளைச்சல் வரக்கூடாது என்பதாலும் பொதுவாக அவருடைய பங்களிப்பைப் படிப்படியாக மேம்படுத்தும் வண்ணம் கனிவுடன் சுட்டிக் காட்டுதல் வேண்டும்.

இவ்வணுக்கத்தைப் பெறவோ வழங்கவோ ஒருவர் குறைந்தது 50 கட்டுரைகளாவது உருவாக்கி வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியிருப்பது அவசியம் என எதிர்பார்க்கலாம். தாமாகவே இவ்வணுக்கம் வேண்டுவோரும் மேற்கண்ட 50 கட்டுரைகள் எண்ணிக்கையைக் கடந்திருப்பது நல்லது.

அனைத்துப் பயனர்களின் கருத்துக்கு இணங்க, இது தொடர்பான வழிகாட்டலை உருவாக்குவோம். இதன் பிறகு, முன்னிலையாக்குநர், சுற்றுக்காவலர் ஆகியோருக்கான அணுக்கங்கள் தொடர்பான வழிகாட்டல்களை உருவாக்குவோம்.--இரவி (பேச்சு) 10:00, 14 ஏப்ரல் 2015 (UTC)

மாற்றுக் கருத்துகள் இல்லா நிலையில் மேற்கண்ட பரிந்துரையின் அடிப்படையில் வழிகாட்டலை உருவாக்க விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:22, 21 ஏப்ரல் 2015 (UTC)

தற்காவல் அணுக்கம் எனக்கு Kanags அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:16, 24 ஏப்ரல் 2019 (UTC)

Start a discussion about விக்கிப்பீடியா:தற்காவல்

Start a discussion
Return to the project page "தற்காவல்".