விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்

விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள்‎ மேல்விக்கியில் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலாகும். விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 ஆங்கில விக்கியில் முக்கியமானவையாக அடையாளங் காணப்பட்ட ஏறத்தாழ 2000 கட்டுரைகளின் பட்டியல் ஆகும். அவ்விரு பட்டியல்களும் ஐரோப்பிய சார்புடையவை என்பது ஏலவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அவ்வகையில் இந்த முக்கிய கட்டுரைகள் பட்டியலை முழுமையாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்குரியதாக உருவாக்குவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். முக்கிய கட்டுரைகளாகக் கருதப்படுபவற்றில் தம்மளவில் முழுமையான (விரிவான) கட்டுரைகளாகக் கருதப்படுபவற்றை மாத்திரம் இங்கே பட்டியற்படுத்தலாம்.

இதற்கேற்பவே சில தலைப்பு மாற்றங்களைச் செய்துள்ளேன். மாற்றங்கள் பொருத்தமில்லையெனின் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 13:19, 12 செப்டெம்பர் 2008 (UTC)Reply

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா முக்கிய கட்டுரைகள் (வரைபு) - விரிவாக்கிய பின் தலைப்பை மாற்றலாம். --Natkeeran 14:25, 20 செப்டெம்பர் 2008 (UTC)Reply

பட்டியலை இன்றைப்படுத்தல்

தொகு
  • இது பழைய பதிப்பில் இருந்து எடுக்கப்பட்டது. புதியது: en:Wikipedia:Vital articles
  • சட்டம் பற்றிய முக்கிய துறைகளின் கட்டுரைகள் எண்ணிக்கை குறைவு.
  • நபர்கள் பற்றி அதிக கட்டுரைகள் உண்டு. ஆங்கில விக்கியில் 115 மட்டும்.

--Natkeeran 23:08, 21 நவம்பர் 2008 (UTC)Reply

New real time list of missing articles

தொகு

I suggest that you give a look to the Mix'n'match tool by Magnus Manske, and that you recommend it from this page. Thanks to Wikidata, it's able to tell you in real time what articles you're missing out of several reliable lists of relevant persons. --Nemo 17:06, 10 அக்டோபர் 2014 (UTC)Reply

நீக்க வேண்டுகோள்

தொகு

இந்த முக்கியமான கட்டுரைகள் பக்கத்தில் கட்டுரைகளின் பட்டியலில் உள்ள சிறப்பு கட்டுரைகள் சின்னம் மேலும் பல சின்னங்கள் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை ஆகும். அதை நீக்கி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்பு கட்டுரைகள் மேலும் நல்ல கட்டுரைகள் சின்னத்தை இணைக்க வேண்டும். நன்றி


சின்னம் உதாரணம்

  ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 16:41, 8 மே 2023 (UTC)Reply

Return to the project page "முக்கிய கட்டுரைகள்".