விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் இலங்கைத் தமிழ் நூல்கள்

அருண், நல்ல முயற்சி. இதனை விக்கிப்பீடியா பெயர்வெளியாக இல்லாமல் வலைவாசல்:விக்கித்திட்டம் இலங்கைத் தமிழ் நூல்கள் ஆக அமைக்கலாம். விக்கித்திட்டம் ஒரு சொல்லாக இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 06:56, 4 பெப்ரவரி 2011 (UTC)

சிறிதரன், புன்னியாமீன் அவர்களிடம் 19ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிகளில் இருந்து வெளியிடப்பட்ட நூல்களின் விபரம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றை ஆவணப்படுத்துவதிலும் முனைப்பாக தன்னை ஈடுப்படுத்தி வருகிறார். அதேவேளை 19ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்களின் தகவல்களையும் தேடி ஆவணப்படுத்த முடியலாம். அத்துடன் நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றும் எதிர்காலத்தில் எழுதப்படப்போகும் நூல்கள் என இப்பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். எனவே இந்த இலங்கைத் தமிழ் நூல்களின் பட்டியலை ஆவணப்படுத்தும் திட்டமும் நீண்டக்கால திட்டமாகவே தொடரக்கூடியது. அதனால் இதற்கென ஒரு விக்கித்திட்டப் பகுதியை உருவாக்கி, இத்திட்டம் தொடர்பான நோக்கம், தகவல்கள் மற்றும் பேச்சுகள் ஒரே இடத்தில் இடம்பெறச்செய்தல் பயனுள்ளதாக இருக்கும் என தோன்றியதால் இத்திட்டப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். (இத்திட்டத்தில் ஏதாவது ஒருவகையில் பங்களிக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே காரணம்)

இருப்பினும் இந்தத் திட்டப்பக்கம் தேவையானதா என்பதை பார்த்து முடிவெடுப்போம். குறிப்பாக புன்னியாமீனின் கருத்தைக் கவனத்தில் கொண்டு தொடர்வோம். தேவையில்லை என்றால் நீக்கிவிடலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அல்லது நீங்கள் கூறியது போன்று வலைவாசல் அமைப்பது சிறந்தது என்றால் அதனை அமைப்பதும் எனக்கு உடன்பாடானதே. --HK Arun 17:18, 4 பெப்ரவரி 2011 (UTC)

அருண் இலங்கை தமிழ் நூல் பட்டியல் குறித்து என்னால் ஆரம்பிக்கப்பட்ட பகுதிக்கு நீங்களும் மற்றும் சில பயனர்களும் காட்டிவரும் ஆர்வம் என்னை தெம்படையச் செய்கின்றது. இது விடயமாக நீங்கள் காட்டிவரும் அதிக ஆர்வத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையில் தமிழ்மொழி மூலமாக வெளிவந்த நூல்பட்டியல்களை தயாரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை யாரும் நிறைவுபடுத்தவில்லை. அச்சு ஊடகங்களில் இம்முயற்சியை மேற்கொள்ளும்போது அதை தொடராக மேற்கொள்வது கடினமான ஒன்று. விக்கிப்பீடியா போன்று ஒரு பொது ஊடகத்தில் இம்முயற்சியை மேற்கொள்கையில் கூடிய பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே தொடங்கினேன். நிச்சயமாக இலங்கையில் எத்தனை தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன என்ற விபரம் யாருக்குமே தெரியாது. ஒவ்வொரு ஆய்வாளர்களும் இது பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளையே முன்வைத்து வருகின்றனர். இலத்திரனியல் ஊடகங்கள் வளர்ச்சி கண்டுள்ள இக்காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் தன்னார்வப் பயனர்களைக் கொண்டதுமான விக்கியில் ஆரம்பிக்கும்போது இந்த முயற்சி நீண்டகாலம் தொடர்ந்து ஓரளவாவது நிறைவைக் காணும் என்பது எனது எதிர்பார்ப்பு.
வெட்கத்தைவிட்டு உண்மையைக் கூறுவதானால் நீங்கள் குறிப்பிட்ட விக்கித்திட்டப் பகுதியைப் பற்றியோ சிறீதரன் குறிப்பிட்ட வலைவாசல் பற்றியோ இதன் நன்மை தீமைகளை என்னால் சரியாகத் தீர்மானித்துக் கொள்ள முடியாதுள்ளது. விக்கியில் நான் பல கட்டுரைகளை ஆரம்பித்தாலும்கூட, இன்னும் புதியவனே. கற்பதற்கு எத்தனையோ விடயங்கள் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் நேத்ரா தமிழ் அலைவரிசை (தொலைக்காட்சி சேவை) விக்கிப்பீடியா தொடர்பாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியொன்றுக்கு ஒரு தயாரிப்பாளரின் தனிப்பட்ட அழைப்பு எனக்கு வந்திருந்தது. நேரடி ஒளிபரப்பாக அந்நிகழ்ச்சி அமையவிருந்ததினால் நேயர்களின் கேள்விகளுக்கும் பதிலை வழங்க வேண்டியிருக்கும். அந்தளவிற்கு விக்கி பற்றி ஆழமாக நான் இன்னும் தெரிந்து கொள்ளாமையினால் அத்திட்டத்தை சற்று பின்தள்ளி வைக்கும்படி தயாரிப்பாளரிடம் குறிப்பிட்டேன். உண்மையிலேயே கற்க எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. எமது தனிப்பட்ட வேலைப்பளுக்களுக்கு மத்தியில் நேரம் பெரிதும் தடையாக உள்ளது. எனக்குக் கிடைக்கும் ஓய்வுகளை முழுமையாக விக்கிக்கெனவே ஒதுக்கி வருகின்றேன்.
எனவே, தங்கள் வினாவிற்கு என்ன பதிலை வழங்குவதென என்னால் புரியவில்லை. அனுபவமிக்க பயனர்களின் கருத்துக்களையும் அறிந்துகொள்ள முனைவோம். அதன் பின்பு இது பற்றி நீங்களும் சிறீதரன் மற்றும் சில பயனர்களும் இணைந்து ஒரு முடிவுக்கு வர முடியுமென கருதுகின்றேன்.
இவ்விடத்தில் எனது சில கருத்துக்களை மாத்திரம் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
  • இத்திட்டம் தொடர வேண்டும்.
  • இதில் காணப்படக்கூடிய தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
  • விக்கி உள்ள வரை இம்முயற்சி பரந்துவிரிய வேண்டும். இதுவே எனது அவா.
அருண் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது மட்டுமே. இன்னும் நூல்கள்கூட சரியாக பதிவேற்றப்படவில்லை. இவ்வாரத்தினுள் 1000 நூல்களையாவது பதிவேற்றம் செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். அதற்கும் எமது பிரதேச காலநிலை இடம்தருமா என்பது சந்தேகம். இன்னும் ஒரு வாரம் வரை எமது முயற்சிகளைப் பார்த்த பின்பு என்ன செய்வதென்ற முடிவுக்கு வாருங்கள். மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.
--P.M.Puniyameen 03:43, 5 பெப்ரவரி 2011 (UTC)
புன்னியாமீன், உங்கள் தாழ்மையான பதில்கள் உங்கள் உயர் பண்பைக் காட்டுகிறது. விக்கியைப் பொருத்தமட்டில் இதன் அனைத்து விடயங்களையும் நானும் அறிந்தவன் அல்ல; எல்லாம் ஆங்கில விக்கியை தழுவி மேற்கொள்ளப்படுபவைகள் மட்டும் தான். அதேவேளை விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் எல்லாம் திறந்தமூலங்களாக இருப்பதால் அவற்றின் மூலத்தைப் பார்த்து நாம் நமக்கு வேண்டியவாறு மாற்றம் செய்து கொள்வதில் உள்ள எளிதே எனக்கு விக்கிப்பிடியாவில் பிடித்த சிறப்பம்சம். உங்களின் இந்த திட்டத்திற்கு ஏதாவது வகையில் உதவ முடிந்தால் உவப்புடன் செய்வேன். நன்றிகள். --HK Arun 13:37, 5 பெப்ரவரி 2011 (UTC)

அருண், இந்த விக்கித்திட்டத்தை விட வேறு ஒரு வலைவாசல் குறித்து நான் குறிப்பிடவில்லை. இந்தப் பக்கத்தின் பெயரை வலைவாசல்:விக்கித்திட்டம் இலங்கைத் தமிழ் நூல்கள் என்று மாற்றுமாறே சொல்லியிருந்தேன். விக்கியில் பொதுவாக இப்படியான விக்கித்திட்டங்களுக்கு வலைவாசல் என்ற பெயர்வழியே வைக்கப்படுகிறது. விக்கிப்பீடியா பெயர்வழி அல்ல. எனவே இதன் தலைப்பை மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 03:58, 5 பெப்ரவரி 2011 (UTC)

சிறிதரன், இந்தப் பக்கத்தை உருவாக்கும் முன் நான் ஆங்கில விக்கியில் பார்த்த (நூல்கள் தொடர்பான விக்கித்திட்ட) பக்கம்:

தமிழில் பார்த்தப்போது காணக்கிடைத்த விக்கித் திட்டப்பக்கங்கள் மற்றும் அவற்றுக்கு இடப்பட்டிருந்த பெயர்கள்.

இதனடிப்படையில் தான் பெயரிட்டிருந்தேன். இருப்பினும் பொருத்தம் கருதி தேவையான மாற்றங்களை செய்துவிடுங்கள். --HK Arun 13:37, 5 பெப்ரவரி 2011 (UTC)

Start a discussion about விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இலங்கைத் தமிழ் நூல்கள்

Start a discussion
Return to the project page "விக்கித் திட்டம் இலங்கைத் தமிழ் நூல்கள்".