விக்கித் திட்டம் இலங்கைத் தமிழ் நூல்கள் உங்களை வரவேற்கிறது!
இந்த திட்டம் இலங்கைத் தமிழ் நூல்களின் விபரப் பட்டியலை ஆவணப்படுத்தும் ஒரு பயன்மிக்கத் திட்டமாகும். இது ஒரு நீண்ட நாள் திட்டமாகும். ஈழத்து எழுத்தாளர்களால் மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களின் விபரப்பட்டியலை தமிழ் விக்கியில் ஆவணப்படுத்தும் ஒரு சிறப்புத் திட்டமும் ஆகும். இத்திட்டத்தின் முதன்மைப் பயனராக புன்னியாமீன் செயல்பட்டு வருகிறார். இந்தப் பட்டியல்கள் பல பிரதான தலைப்புகளையும், உப தலைப்புகளையும் கொண்டு விரிவாக்கம் பெற்று வருகிறது. இந்த திட்டத்தில் இணைந்துக்கொள்ள விரும்பும் பயனர்கள் தங்கள் பெயரையும் 'பயனர்' பகுதியில் சேர்க்கவும்.
|