விக்டர் அரா
விக்டர் லிடியோ அரா மார்த்தினெசு (Víctor Lidio Jara Martínez, எசுப்பானிய ஒலிப்பு: [ˈbiktoɾ ˈliðjo ˈxaɾa maɾˈtines]; 28 செப்டம்பர் 1932 – 15 செப்டம்பர் 1973)[1] சிலி நாட்டு பாடகரும் பாடலாசிரியரும் நாடக இயக்குநரும் கவிஞரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் ஓர் சிறந்த நாடக இயக்குநராகத் திகழ்ந்தார்; உள்ளூர் நாடகங்கள், உலகத்தர செவ்வியல் நாடகங்கள், ஆன் அல்லிகோ போன்றோரின் புதிய அலை நாடகங்களை இயக்கி சிலியின் நாடகக்கலையை வளர்த்தார். புதுயுக நாட்டாரிசையை நிறுவிய நியூவா கான்சியோன் சிலியானா (புதிய சிலியப் பாட்டு) என்ற இயக்கத்தில் முதன்மைப் பங்காற்றினார். இது சால்வடோர் அயேந்தே ஆட்சிக்காலத்தில் பரப்பிசையில் புதிய ஒலிகளின் எழுச்சியை உருவாக்கியது.
விக்டர் அரா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | விக்டர் லிடியோ அரா மார்த்தினெசு |
பிறப்பு | லோங்கென், சிலி | 28 செப்டம்பர் 1932
பிறப்பிடம் | சிகான் வியெகோ, சிலி |
இறப்பு | 15 செப்டம்பர் 1973 சான் டியேகோ, சிலி | (அகவை 40)
இசை வடிவங்கள் | நாட்டார் பாடல், நியூவா கான்சியோன், அந்தீசு இசை |
தொழில்(கள்) | பாடகர்/பாடலாசிரியர், கவிஞர், நாடக இயக்குநர், பல்கலைக்கழக கல்வியாளர், சமூக செயற்பாட்டாளர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாடல்கள், எசுப்பானிய கித்தார் |
இசைத்துறையில் | 1959–1973 |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஈஎம்ஐ-ஓடியன் டிஐசிஏபி/அலெர்சு வார்னர் இசைக் குழு |
இணைந்த செயற்பாடுகள் | வயலெட்டா பார்ரா, பாட்றிசீயா காஸ்தில்லோ, கிலாபயூன், இன்ட்டி-இல்லிமனி, பாட்றிசியோ மான்சு, ஏஞ்செல் பார்ரா, இசபெல் பார்ரா, செர்சோ ஓர்டெகா, பாப்லோ நெருடா, டேனியல் விக்லீட்டி, அடயுல்பா யுபன்கி, ஓயன் பேசு, டீன் ரீடு, சில்வியோ ரோட்ரிகசு, ஓல்லி நியர், கார்னெலிசு ரீசுவிக் |
இணையதளம் | FundacionVictorJara.cl |
செப்டம்பர் 11, 1973இல் நடந்த சிலிய இராணுவப்புரட்சிக்குப் பின்னர் அரா கைது செய்யப்பட்டார்; விசாரணையின்போது சித்திரவதைக்குள்ளான அரா இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடல் சான்டியேகோ நகரின் தெருவில் வீசப்பட்டது.[2] காதல், அமைதி, சமூக நீதி குறித்த அராவின் பாடல்களின் கருத்துக்களும் கொடூரமான முறையில் நடந்த அவரது கொலையும் அராவை பினோசெட் ஆட்சிக்காலத்தில் உயிரிழந்தவர்களுக்கான மனித உரிமை மற்றும் நீதிக்கான போராட்டத்தின் ஆற்றல்மிகு சின்னமாக மாற்றியது.[3][4]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Report of the Chilean Commission on Truth and Reconciliation Part III Chapter 1 (A.2)". usip.org. 2002-04-10. Archived from the original on 2006-12-31. பார்க்கப்பட்ட நாள் 2007-01-06.
- ↑ Jara, Joan. Víctor: An Unfinished Song, 249-250
- ↑ "Jara v. Barrientos". Center for Justice and Accountability. 2013-07-04. http://cja.org/article.php?id=1361. பார்த்த நாள்: 2014-10-03.
- ↑ Charlotte Karrlsson-Willis (2013-09-06). "Family of Víctor Jara turns from Chile to US in quest for justice". The Santiago Times இம் மூலத்தில் இருந்து 2014-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141006085104/http://santiagotimes.cl/family-of-victor-jara-turns-from-chile-to-us-in-quest-for-justice/. பார்த்த நாள்: 2014-10-03.