விக்டர் ஞானப்பிரகாசம்

அருட்திரு விக்டர் ஞானப்பிரகாசம் (பிறப்பு 21-11-1940), பாக்கித்தானில் உள்ள பலுச்சிசுத்தானத்தின் குவெட்டாவின் உரோமன் கத்தோலிக்க திருச்சபை அதிகாரத்துவத்தின் முதலாவது பிரதிநிதி ஆவார்.

அவர் கருணை
விக்டர் ஞானப்பிரகாசம்
Apostolic Vicar of Quetta
சபைகத்தோலிக்க திருச்சபை
ஆட்சி பீடம்Apostolic Vicariate of Quetta
ஆட்சி துவக்கம்2010 -
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு21 திசம்பர் 1966
ஆயர்நிலை திருப்பொழிவு16 சூலை 2010
அடால்போ டைடோ யல்லனா-ஆல்
கர்தினால் குழாம் அணிகிறிஸ்துவ பாதிரியார்
பிற தகவல்கள்
பிறப்புநவம்பர் 21, 1940 (1940-11-21) (அகவை 84)
யாழ்ப்பாணம், இலங்கை
குடியுரிமைஇலங்கையர்
வகித்த பதவிகள்அப்போஸ்தலிக்கான தலைமை அதிகாரி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

இலங்கைத் தமிழர் குடும்பத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அவர் களுத்துறையில் அமலமரித்தியாகிகள் சபையில் தனது சமயத் துறை புதுப் பயிற்சியாளர் காலத்தை 1959 ஆண்டு நிறைவு செய்தார். பின்னர் கண்டியில் இலங்கை அன்னை குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியல் படிப்புகளை பயின்றார் (1960–1966).

மதகுரு

தொகு

1966 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 21 ஆம் நாள் ஞானப்பிரகாசம் அவர்கள் தமது மதகுருமாருக்கான உருதிமொழியை ஏற்றுக்கொண்டார்.[1] அவர் 1973 ஆம் ஆண்டில் இருந்து பாக்கித்தானில் உள்ள பலுச்சிசுத்தானத்தின் குவெட்டாவின் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருவாகவும், உரிப்பினராகவும் இருந்து வந்தார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "CatInfor.com". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-11-13.
  2. Catholic hierarchy
  3. "Oblate information". Archived from the original on 2008-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_ஞானப்பிரகாசம்&oldid=3571517" இலிருந்து மீள்விக்கப்பட்டது