விக்டோரியா அருங்காட்சியகம்

பாக்கித்தானின் கராச்சியில் உள்ள அருங்காட்சியகம்

விக்டோரியா அருங்காட்சியகம் (Victoria Museum) பாக்கித்தான் நாட்டின் கராச்சியில் உள்ளது. இப்போது கராச்சி உச்ச நீதிமன்றப் பதிவகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. விக்டோரியா மற்றும் எல்பர்ட்டு அருங்காட்சியகம் என்ற பெயரில் முதலில் நிறுவப்பட்டது. கராச்சியில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில் பாக்கித்தானின் உச்ச நீதிமன்ற கராச்சி பதிவகக் கிளை இயங்குகிறது.

கராச்சி உச்ச நீதிமன்றப் பதிவகம் என்று அழைக்கப்படும் விக்டோரியா அருங்காட்சியகம்

வரலாறு

தொகு

இந்த கட்டிடம் முதலில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இது விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தில் 1887 ஆம் ஆண்டு கன்னாட் பிரபுவால் ஒரு அருங்காட்சியகமாகத் தொடங்கப்பட்டு விக்டோரியா மற்றும் எல்பர்ட்டு அருங்காட்சியகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. [1] 1948 ஆம் ஆண்டு பாக்கித்தான் நாட்டை நிறுவியவரான முகமது அலி ஜின்னா பாக்கித்தான் மாநில வங்கிக்கான அடிக்கல்லை நாட்டினார். [1]

1892 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று இது முழு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு விக்டோரியா அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது. [2] பதப்படுத்தப்பட்ட விலங்குகள், மொகஞ்சதாரோவின் கலைப்பொருட்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களின் சிலைகள், உருவப்படங்கள், ஓவியங்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலமானவர்களின் படங்கள் ஆகியவை அங்கு இருந்தன. [2]

1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இக் கட்டிடத்தில் கராச்சியில் உச்ச நீதிமன்றத்தின் பதிவகம் நிறுவப்பட்டது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Tanoli, Ishaq (December 24, 2018). "New building of SC Registry to be completed in three years". DAWN.COM.
  2. 2.0 2.1 Balouch, Akhtar (November 21, 2013). "In search of the Victoria Museum – Part II". DAWN.COM.