விக்ரம் கேசரி தியோ
இந்திய அரசியல்வாதி
விக்ரம் கேசரி தியோ (Bikram Keshari Deo) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் இராசா பிரதாப் கேசரி தியோவின் மகனாகப் பிறந்தார். இந்தியாவின் 12 ஆவது, 13ஆவது மற்றும் 14 ஆவது மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார். [1] [2] [3] ஒரிசாவின் களகாண்டி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஒடிசாவின் அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். முதலில் இவர் ஒடிசா சட்டமன்றத்திற்கு சனதா கட்சியின் சார்பாகவும் பின்னர் இரண்டு முறை பாரதிய சனதா கட்சியின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
விக்ரம் கேசரி தியோ Bikram Keshari Deo | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், பன்னிரண்டாவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை மற்றும் பதினான்காவது மக்களவை | |
தொகுதி | களகாண்டி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | களகாண்டி மாவட்டம், ஒடிசா | 26 நவம்பர் 1952
இறப்பு | 7 அக்டோபர் 2009 | (அகவை 56)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | நயன்சிறீ தேவி |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 2 மகள்கள் |
வாழிடம்(s) | களகாண்டி மாவட்டம், ஒடிசா |
As of 22 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
விக்ரம் கேசரி தியோ 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று மாரடைப்பால் இறந்தார்.