விசாகப்பட்டினம் நகர அரங்கம்

விசாகப்பட்டினம் நகர அரங்கம் (Town Hall Visakhapatnam) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரத்திலுள்ள நகராட்சிக் கட்டிடமாகும். நகர அரங்கத்திற்கான அடித்தளம் 1893 ஆம் ஆண்டு போடப்பட்டது. இதற்கான செலவுத்தொகையான ரூ 50000 போப்பிலியின் அரசரிடம் கடனாகப் பெறப்பட்டது. பின்னர் 1904 ஆம் ஆண்டு விசாகப்பட்டின நகர அரங்கம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அரங்கத்தின் மொத்த பரப்பளவு 5,000 சதுர அடியாகும். [1] 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நாடக, கலாச்சார மற்றும் இலக்கிய நிகழ்வுகளின் மையமான விசாகப்பட்டின மாநகராட்சி இந்த நகர மண்டபத்தை புதுப்பித்தது.[2]

விசாகப்பட்டினம் நகர அரங்கம்
Town Hall Visakhapatnam
Map
பொதுவான தகவல்கள்
வகைநகர அரங்கம்
முகவரிசெங்கல் ராவ் பேட்டை, விசாகப்பட்டினம்
ஆந்திரப் பிரதேசம்
ஆள்கூற்று17°41′51″N 83°17′55″E / 17.697424°N 83.298476°E / 17.697424; 83.298476
கட்டுமான ஆரம்பம்1893
நிறைவுற்றது1904
செலவு 50,000
உரிமையாளர்விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையம்
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு5,000 sq ft (500 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
குடிசார் பொறியாளர்ஆர் மகாதேவன்

மேற்கோள்கள் தொகு