விசிறிவால் புறா

விசிறிவால் புறா (Fantail pigeon, ஃபேன்டைல்) ஒரு பிரபலமான ஆடம்பரப் புறாவாகும்[1]. இதன் வாலானது சாதரண புறாக்களின் 12 முதல் 14 இறகுகளிலிருந்து வேறுபட்டு 30 முதல் 40 இறகுகளைக் கொண்டு விசிறி போன்றுள்ளது[2]. இது பாகிஸ்தான், இந்தியா,சீனா அல்லது ஸ்பெயினில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதில் ஆங்கில ஃபேன்டைல்,இந்திய ஃபேன்டைல், பட்டு ஃபேன்டைல் மற்றும் தாய்லாந்து ஃபேன்டைல் உள்ளிட்டவையும் அடங்கும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் ஓர் உதாரணமாக இதனைப் பயன்படுத்தியுள்ளார்.

ஃபேன்டைல் புறா
பட்டு ஃபேன்டைல்

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  2. Seymour, Colin (Ed) (1995). Australian Fancy Pigeons. A.N.P.A. (Australian National Pigeon Association).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசிறிவால்_புறா&oldid=4049667" இலிருந்து மீள்விக்கப்பட்டது