விசுவநாதன் உருத்திரகுமாரன்

விசுவநாதன் உருத்திரகுமாரன் (Visvanathan Rudrakumaran) நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் ஆவார். இவ்வரசு தமிழீழத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டது. இவர் ஐக்கிய அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர் நியூயார்க்கில் வாழ்ந்து வருகிறார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரையான மூன்று நாட்கள் அமெரிக்காவில் கூடி அவ்வரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியாக விசுவநாதன் உருத்திரகுமாரனைத் தெரிவு செய்தனர்[1].

விசுவநாதன் உருத்திரகுமாரன்
பிறப்புஇலங்கை
தேசியம்அமெரிக்கர்
இனம்தமிழ்
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுநாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு