விஜய குமாரி காந்தி

விஜய குமாரி காந்தி (Vijaya Kumari Ganti) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திர மாநிலம் அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற 13வது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் மாநிலங்களவை சபாநாயகர் ஜி. எம். சி. பாலயோகியின் மனைவி ஆவா. பாலயோகியின் மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் (2002) போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

விஜய குமாரி காந்தி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
2002–2004
முன்னையவர்ஜி. எம். சி. பாலயோகி
பின்னவர்ஜி. வி. ஹர்சா குமார்
தொகுதிஅமலாபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்ஜி. எம். சி. பாலயோகி

தொழில்

தொகு

அமலாபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை சபாநாயகருமான ஜி. எம். சி. சந்திர பாலயோகியின் திடீர் மரணம் காரணமாகப் பட்டியலினத்தவருக்கு, ஒதுக்கப்பட்ட இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாலயோகியின் மனைவியினை இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன், இவரைத் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப் பரிசீலித்து வந்தனர். காந்தி, அதிர்ச்சியிலிருந்ததால், தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டினார் மற்றும் பால்யோகியின் குடும்பத்தினர் இவருக்குப் பின் இவரது சகோதரியைத் தேர்தலில் ஈடுபடுத்த விரும்பினர்.

இந்தியத் தேசிய காங்கிரசு இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் காந்தி போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று தெலுங்கு தேசம் கட்சி நினைத்தது.[1] இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் உடனிருந்தார்.[2] ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவை இவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் தேர்தல் முடிவின்படி காந்தியினை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரும் தங்கள் தேர்தல் வைப்புத்தொகையை இழந்தனர். இவர் 3,13,660 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3]

மாநிலங்களவையின் 2002ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் காந்தி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.[4] அடுத்த பொதுத் தேர்தலில் துன்னா ஜனார்த்தன ராவினை காந்திக்குப் பதிலாகத் தெலுங்கு தேசம் கட்சி தனது அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தியது.[5]

மாநிலங்களவை சபாநாயகர்களின் மனைவிகளுக்குப் புதுதில்லியில் வீடு வழங்கப்படுகிறது. காந்திக்கு, வீடு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

விஜய குமாரி 16 ஏப்ரல் 1982-ல் பாலயோகியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர்.[7] பாலயோகி 3 மார்ச் 2002 அன்று உலங்கூர்தி விபத்தில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Balayogi's widow wins from Amalapuram". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 June 2002. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Balayogis-widow-wins-from-Amalapuram/articleshow/11807351.cms. 
  2. "Balayogi's wife files nomination". தி இந்து. 10 May 2002. http://www.thehindu.com/2002/05/10/stories/2002051002960600.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Landslide win for TDP candidate". தி இந்து. 3 June 2002. http://www.thehindu.com/2002/06/03/stories/2002060302030600.htm. "Landslide win for TDP candidate". The Hindu. 3 June 2002. Retrieved 3 November 2017.[தொடர்பிழந்த இணைப்பு] [dead link]
  4. "Thirteenth Lok Sabha: Session 10 Date 15-07-2002". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.
  5. Press Trust of India (26 March 2004). "TDP drops Balayogi's wife". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.
  6. Messias, Lionel (27 March 2004). "Balayogi's wife dumped by Naidu". Gulf News. http://gulfnews.com/news/asia/india/balayogi-s-wife-dumped-by-naidu-1.317589. 
  7. "Balayogi, Shri Ganti Mohana Chandra – Biographical Sketch of Member of 12th Lok Sabha". IndiaPress. பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_குமாரி_காந்தி&oldid=3743833" இலிருந்து மீள்விக்கப்பட்டது