அமலாபுரம்
அமலாபுரம் (அ) அமலபுரம் மண்டலம் (ஆங்கிலம்:Amalapuram), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் அமலாபுரமும் ஒன்றாகும்[6].
அமலாபுரம் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 16°34′43″N 82°00′22″E / 16.5787°N 82.0061°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு கோதாவரி மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | அமலாபுரம் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.20 km2 (2.78 sq mi) |
ஏற்றம் | 3 m (10 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 53,231[1] |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 533201 |
தொலைபேசி குறியீடு | 08856 |
வாகனப் பதிவு எண் | பழையது AP 05, புதியது AP 39 (30 சனவரி 2019 முதல்)[5] |
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 16°35′N 82°01′E / 16.58°N 82.02°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆட்சி
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு அமலாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது[8].
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,231 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அமலபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 89.78 % ஆகும். அமலபுரம் மக்கள் தொகையில் 8.71 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.79%, இசுலாமியர் 2.87%, கிறித்தவர்கள் 1.99%, சமணர்கள் 0.16% மற்றும் பிறர் 0.19% ஆக உள்ளனர்.[9]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன[6]:
- அமலாபுரம் (ஊரகம்)
- இந்துபள்ளி
- இம்மிடிவரப்பாடு
- ஈதரபல்லி
- ஏ. வேமவரம்
- குன்னேபள்ளி அக்ரகாரம்
- சமனசா
- சாக்கூர்
- தாண்டவபள்ளி
- நடிபூடி
- நல்லமில்லி
- பட்னவில்லி
- பண்டாருலங்கா
- பாலகும்மி
- பேரூர்
- வன்னெ சிந்தலபூடி
- ஜனுபள்ளி
சான்றுகள்
தொகு- ↑ http://censusindia.gov.in/pca/pcadata/DDW_PCA2814_2011_MDDS%20with%20UI.xlsx | 2011 Census
- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
- ↑ "Maps, Weather, and Airports for Amalapuram, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
- ↑ "District Census Handbook – East Godavari" (PDF). Census of India. pp. 16, 54. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
- ↑ "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html.
- ↑ 6.0 6.1 "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-21. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "Amalapuram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2006.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ Amalapuram Population Census 2011