விஜய தஹில் ரமணி

விஜய கம்லேஷ் தஹில் ரமணி ( VK Tahilramani 1958, அக்டோபர் 3) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாவார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது பெண் தலைமை நீதிபதியாவார்.

வாழ்க்கைதொகு

தஹில் ரமணி 1958 இல் மகாராட்டிர மாநிலத்தில் பிறந்தவர்.

தொழில்முறை வாழ்க்கைதொகு

1982இல் வழிக்கறிஞராக பதிவுசெய்து, மும்பை மற்றும் கோவாவின் கீழ் நீதிமன்றங்களில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். குடிமை மற்றும் குற்றவியல் வழக்குகளில் தேர்ச்சி பெற்ற இவர் மும்பை கீழ் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டார். பின்னர் மகாராட்டிர அரசின் அரசுத் தரப்பு வழக்கறிஞராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். இந்நிலையில் 2001ஆம் ஆண்டு சூன் மாதம் 26ஆம் நாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த அவர்,[1] பொறுப்புத் தலைமை நீதிபதியாகவும் பதவிவகித்தார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .[2] இந்நிலையில் தஹில் ரமணியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2018 ஆகத்து 12 அன்று பதவியேற்றார்.[3] இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் 2019 ஆகத்து 28 ஆம் தேதி முடிவு செய்தது.[4] இதை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமணி விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டாத்ததால் அதிருப்தி அடைந்த தஹில் ரமணி தன் பதவியை விட்டு விலகினார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்". செய்தி. இந்து தமிழ் (2018 ஆகத்து 4). பார்த்த நாள் 6 ஆகத்து 2018.
  2. "சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா". தீக்கதிர். 8 செப்டம்பர் 2019. http://www.theekkathir.in/epaper#. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2019. 
  3. "உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானி பதவியேற்பு". செய்தி. இந்து தமிழ் (2018 ஆகத்து 12). பார்த்த நாள் 13 ஆகத்து 2018.
  4. "சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்- கொலீஜியம் பரிந்துரை". செய்தி. oneindia (2019 செப்டம்பர் 4). பார்த்த நாள் 5 செப்டம்பர் 2019.
  5. "சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இராஜினாமா!". செய்தி. athavannews (2019 செப்டம்பர் 7). பார்த்த நாள் 8 செப்டம்பர் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_தஹில்_ரமணி&oldid=2856924" இருந்து மீள்விக்கப்பட்டது